(Reading time: 2 - 4 minutes)

அழுகிறேன் என் உலகத்துக்காக - வின்னி

Crying 

போர்! போர்! போர்! எங்கும் போர்!

 

ஆண்கள் பெண்களுடன் சண்டை,

பெண்கள் ஆண்களுடன் சண்டை

காதலால் சண்டை, வெறுப்பால் சண்டை

உண்ண உணவு வேண்டிச் சண்டை

இருக்க இடம் வேண்டிச் சண்டை

உடுக்க உடை வேண்டிச் சண்டை

உடலுறவுக்குச் சண்டை

பிள்ளைகளுக்குச் சண்டை

 

அரசியல்வாதிகள் சண்டை,

 வாக்காளர் சண்டை,

உறவினர் சண்டை

சிநேகிதர் சண்டை

சிறுபான்மையினர் பெருபான்மையினர் சண்டை

 

அதிகாரம், விடுதலை, நம்பிக்கை, உரிமை, பணம்,

சொத்து,  இயற்கை வளங்கள் எல்லாம் அடையச் சண்டை

 கருப்பு, வெள்ளை. சாதி, சமயம், மொழி என்று சண்டை  

எல்லைச் சண்டை, காணிச் சண்டை, ஊருக்குச் சண்டை,  நாட்டுக்குச் சண்டை

நல்லவர்கள், தீயவர்கள், ஏழை, பணக்காரர், ஒருவருக்கு ஒருவர் சண்டை    

 

துப்பாக்கி, தோட்டாக்கள், குண்டுகள்,, கார், டிரக், கப்பல், போர் விமானம்,எல்லாவற்றாலும் தொடருகிறது சண்டை,

ராக்கெட்டுகளால், ட்ரோன்களால், சண்டை,

இரசாயன, அணு ஆயுதங்ககளைப் பாவித்துச் சண்டை.   

 

சண்டையால் இரத்தம் ஆறாக ஓடுகிறது, உடல்கள் சிதறிக்கிடக்கின்றன   

சண்டையால் கால்கள் இல்லை, கைகள் இல்லை, உடலுறுப்பில்லை, உயிரில்லை.  

சண்டையால் குழந்தைகளை இழந்து தவிக்கிறார்கள் பெற்றோர்.

சண்டையால் பெண்களுக்குக் கற்பில்லை, மானமில்லை...., இருக்க இடமில்லை.

சண்டையால், மானத்தோடு வாழ்ந்தவர்கள் எல்லாம், உணவுக்கும் உடைக்கும் கையேந்தி நிற்கிறார்கள்.

சண்டையால், அகதிகளாய், தவிக்கிறார்கள் பலர்.

சண்டையால் நாடு விட்டு நாடு ஓடி கடலில் மூழ்கி உயிர் மாய்க்கிறார்கள்.

 

போரில்லா நாட்டைக் காண முடியவில்லை!

 அறிவு பெருகியும் அழிவு குறையவில்லை!

ஆறறிவு படைத்த மனிதனும் மாறிவிட்டான் காட்டு மிருகமாக!

 

யாரைக் கேட்பது, உலகத்தை அழிவிலிருந்து காப்பாற்ற?

புத்தர், காந்தி, ஜேசு, முஹம்மது, எங்கே அவர்கள் எல்லாம்?

இந்த உலகத்தை போரின் அழிவிலிருந்து விடுவிக்க யாரிருக்கிறார்?

எனக்கில்லை வலிமை, அதிகாரம் இல்லை, அதை நிறுத்த!

காக்கவேண்டியவனே தடுமாறுகிறான், மனிதனின் மடமையை எண்ணி!

விட்டு விட்டான் அழிந்து போங்கள் என்று!

அழுகிறேன் என் உலகத்துக்காக!

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.