(Reading time: 1 - 2 minutes)

விழிவழியே... - -த.ராமிஷா

Donate eyes

விழி நீரின்

துணை கொண்டு

விழியற்ற ஓர் உயிர்

புனையும் காவியம் இது….

 

விந்தையான இவ்வுலகில்

வித்தைகள் பல புரியும்

விபரீத வயதில் - என்

விழியிரண்டை

விபத்தொன்றில் இழந்தேன்…

 

அதிவேகம் ஆபத்து என்ற

அன்பின் மொழியை

ஏற்க மறுத்தேன்!

அச்சத்தை துச்சம் எனக்கொண்டு

துள்ளி திரிந்தேன்…

 

இரு-சக்கர வாகனத்தை

சிறகுகளாகக் கொண்டு

தேவருலகத்தை சேர்ந்தவன் போல்

சாலைகளில் பறந்தேன்…

 

ஆனால்---

 

விழியிழந்த பின் தான்

எமனின் வாகனமாம்

வேகத்தையும் உடன்

அழைத்துச் சென்றதை

உணர்கின்றேன்…

 

கண்கெட்ட பின்னே காணும்

சூரிய உதயம் போன்று

இந்நொடியில்

உணர்ந்தும் பயனெ;னவோ???

 

கன்னங்களின் சூடு

கண்ணீரின் சுவடதை

நினைவுறுத்திட - நான்

இறைவனிடம் யாசிக்கின்றேன்---

 

விழிகள் -

எனக்கு கிடைத்திடவும்

விடியாத உணர்வு

எவருக்கும் நேராதிருக்கவும்!!!

 

(கண் தானத்தால் ஒளி பெற்ற பின்…)

 

பார்வை ஓர் வரம்

என உணர்கின்றேன்…

 

உயிரால்

நான் மறைந்தாலும்

விழியால்

இவ்வுலகினில் வாழ்ந்திட--

 

அளிக்கின்றேன்

என் கண்களை

தானமாய் அல்ல

ஆத்மார்த்தமாய்!!!

 

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.