(Reading time: 1 minute)

தொட்டி - சரளாதேவி

Waste bin

யார் சொல்லி கொடுத்தது 

இவர்களுக்கு..

தான் செய்த தவறை

குப்பை தொட்டியில் மறைக்க..

தன் வயது அத்துமீறலின் பரிசை 

குப்பைதொட்டியில் திணிக்க..  

தன்னுடைய இயலாமையை 

குப்பை தொட்டியில் தூக்கியெறிய..

தொட்டியில் ஆட்டிட

பிறந்ததை           

குப்பை தொட்டிலில் வீசிட..

யார் சொல்லி கொடுத்தது 

இவர்களுக்கு..

 

இனி அரசாங்கம் 

இன்னொரு தொட்டி வைக்க வேண்டும்

சிசுக்களை வீச என்று..

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.