(Reading time: 1 - 2 minutes)

புதைந்த நட்பு - கிருஷ்ணபாபு

Natpu

இணைந்தே பறந்தோம் எங்கெங்கோ..
வெட்டுப்பட்டது ஒற்றைச்சிறகு! பறக்கவியலாமல் தடதடத்து
தடவுகிறேன் சிறகுத்தழும்பை!

கரம் கோர்த்துக் கடந்த சாலைகள்
நினைவிருக்கா தோழி?
கடந்ததும் விரல் பிரிகையில்
வலித்திருக்கா தோழி?

மழைநாளில் மாறிமாறிக் குடித்த தேநீர்
நினைவிருக்கா தோழி?
மழை நின்றதும் மனதோரம் லேசாய்
வலித்திருக்கா தோழி?

விரட்டி விரட்டி உடல் நனைத்த அலைகள்
நினைவிருக்கா தோழி?
தனித்த கடல் ஆர்ப்பரிக்கையில்
வலித்திருக்கா தோழி?

அத்தனையும் நினைவில் உண்டு.
நினைவில் சுகமும் உண்டு.
நேரில் கூற பயமும் உண்டு.
வலிகள் சொல்ல பேதை எனக்கு
வார்த்தைகள்
வலிமையாய் இல்லை என் தோழா!

நினைப்பதும் வலிப்பதும்
ஆண் வாழ்வின் சாபமடி..
இறந்த பின் எனை நினைப்பாய்
என்றேனும் கொஞ்சமடி!

எனை மீறி இறந்தாலும்
சொட்டுக் கண்ணீரில்
உயிர்ப்பிப்பேன் உனை தோழா!
உடலில் இல்லை உன் உயிர்..
என் கண்ணில் உள்ளது என் தோழா!

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.