(Reading time: 1 minute)

மனைவியானவள் - கிருஷ்ணபாபு

Wife

நல்ல மனைவி

குறும்புக் குழந்தை

தோள் சாயும் தோழி

ஆறுதலிக்கும் அம்மா

கண்டிப்பான ஆசிரியை

முன்னேறத் தூண்டும் இணைவி

கூர் தீட்டும் இனிய எதிரி

தாரத்தில் இத்தனை அவதாரங்கள்

காட்டுபவளை

கணவன் என்ற ஒற்றை அலும்பில்

இட்ட சண்டைகள்தான்

எத்தனை எத்தனை…

எண்ணி வேதனையுறுகிறேன் இந்நாளில்…

நானில்லா உலகை யோசிக்க முடிகிறது.

அவளில்லா உணவைக் கூட யோசிக்க முடியவில்லை…

எனக்குப் பிடித்தவை என்னைவிட

அவளுக்குத் தெரியும் அதிகமாக!

அந்தப் பட்டியலில்

அவள்தான் முதலில் என்பது மட்டும்

அவளுக்கே தெரியாது!

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.