என்றேனும் வருவாயோ - கிருஷ்ணபாபு
எஸ்கலேட்டர் அல்ல
பைபாஸ் அம்மா
தினம் ஊர்ந்து ஏறும்
மாடிப்படிகள்...
வெஸ்டர்ன் அல்ல
முழங்கால் வலியில்
முனகி அமரும்
அப்பா டாய்லட்...
கீழ்போர்ஷன் வாடகையில்
வயிறு கழுவுவதைவிட
வட்டி கழிப்பதே சிறப்பென
சிந்திக்கிறது அவர்களின் மீத மானம்...
காலைப்பசியை இரவுப்பசி உண்கிறது...
இரவுப்பசியை இருமல் தின்கிறது.
ஈன்றபோதும் இவனை இங்கனம்
பூரிக்கவில்லை...
காடு விற்ற காசு இன்னும்
செரிக்கவில்லை..
திரவியம் தேட திரைகடலோடிய
மகன் உறைவிடத் தகவல்
ஏதுமில்லை ஈரெட்டு மாதமாக.
என்றேனும் வருவான் தங்கள்
கிரீன்கார்டு மகன்..
உறுதியான கிழக் கண்களில்
ஒரே ஓர் அச்சம்.
தவமாய் பெற்று
நிழலாய் தொடர்ந்து
தோளில் மிடுக்குடன்
சுமந்த தங்கள் செல்லமகன் முகம்
தமக்கு நினைவிருக்குமா..
.
.
.
.
வாய்க்கரிசி போட வரும்போது?
{kunena_discuss:779}