(Reading time: 1 minute)

பறக்கும் கனவுகள் - கிருஷ்ணபாபு

பறக்கும் கனவுகள்

கனவுகள் அங்கே பறந்தபடி இருந்தன.
வர்ணங்களும் வாசனைகளும்
அவற்றின் விலைக் குறிப்பை
மறைத்திருந்தன.

சிலவற்றின் விலை ஆயுளென
அறியாமல் வாங்கியவர்
அடிமையாய் திரிவர் பிறதேசமெங்கும்.
அவர்கள் இட்ட எச்சம் கூட
மணந்ததென்று
அக்கனவே குறியாக
களமிறங்கும் கூட்டம் நூறு.

வரிசையில் நிற்க யார்க்கும்
பொறுமை இல்லை.
பெருமையாய் வாங்கி திரும்பும்
பலருக்கு வேட்டி இல்லை.

கைக்கெட்டாமல் பறந்த சில
கனவுகளின் குட்டிச்சிறகுகள்
தீப்பிடிக்கத் தொடங்கின.
அவற்றைக் கண்ட குழந்தைகள்
பள்ளி செல்ல ஆரம்பித்திருக்கலாம்.

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.