(Reading time: 6 - 12 minutes)

உதிரும் பூக்கள்… !!! - R.ராஜலட்சுமி

uthirum pookkal

ம்மா……!! வலிக்குதே…!! ம்ம்ம்….. இன்னும் கொஞ்சம் அப்படித்தான் very good இரண்டு மணி நேர போராட்டத்திற்கு பிறகு See Manasi you had a very cute girl baby என்று கூறி குழந்தையை தாயிடம் கொடுத்தார் டாக்டர் பிருந்தா.

கைகளைக் கழுவிக்கொண்டு room ஐ விட்டு வெளியே வந்தவரை சுற்றி நின்று கொண்டனர் மானசியின் உறவினர்கள்.  என்ன குழந்தை என்று கேட்டவர்களுக்கு பெண் குழந்தை என்று கூறினார்.  அவர்களின் முகத்தில் தோன்றிய அதிருப்தியான நிலை அப்பட்டமாக தெரிய சுறு சுறு வென்று கோபம் ஏறியது பச்… என்று கூறிய அவளது கோபம் அவளுடைய வேகமான நடையில் பிரதிபலிக்க தனது கேபினை அடைந்தவள், இறு கைகளையும் தலையில் தாங்கி இறுக்கையில் அமர்ந்துவிட்டாள்.

அவளது நினைவில் மானசி உறவினர்களின் அதிருப்தியான முகம் ஒருநிமிடம் மின்னி மறைந்தது.

மானசிக்கு இது மூண்றாவது பெண் குழந்தை இரண்டு குழந்தைகளை வீட்டிலேயே பெற்றிருந்தாள்இ மூண்றாவது குழந்தையின் நிலைமை சிக்கலாகி விடவே தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாள். மானசியின் file-ல் மூல்கி இருந்தாள் Dr. பிருந்தா, Nurse டாலியின் அழைப்பில் நிமிர்ந்தாள் “டாக்டர் patients waiting for consulting” என்று கூறி அனுமதிக்காக காத்திருந்தாள்.

தலை அசைத்து அனுமதி வழங்கியவள் அடுத்த மகப்பேருக்காக வந்த பெண்ணின் பரிசோதனையில் தன்னை செலுத்திக் கொண்டாள்.  மாலை 4 மணியளவில் rounds சென்ற டாக்டர் பிருந்தா, கண்களில் கண்ணீருடன் அமர்ந்திருந்த மானசியின் பெட்டை நெருங்கிளாள். அன்றே மலர்ந்த சிறு பூ, தொட்டிலில் கேட்பாரற்று கிடந்தது. மானசியின் அருகில் 7 வயது பெண் குழந்தை அமர்ந்திருந்தது மகள் போலும் என்று நினைத்தவள் குழந்தையின் தந்தையை பற்றி விசாரிக்க மானசியின் அருகில் சென்றாள் குழந்தையை ஒருதரம் தொட்டுப்பார்த்தாள் பின்பு மானசியை பார்த்து மெலிதாக புன்னகைத்தவள் பதிலுக்காக புன்னகைக்க கூட சக்தி அற்றவள் போல அமர்ந்திருந்த மானசியிடம் விசாரிக்க நினைத்ததை கை விட்டு அடுத்த பெட்டை நோக்கி நகர்ந்தாள்.

ரிசா மாநில city-ன் அகலமான சாலையில் Scooty-ல் வீட்டை நெருங்கிக்கொண்டிருந்த பிருந்தாவின் மனம் 100 கிலோ இரும்பு குண்டை தூக்கி வைத்ததை போல பாரமாக இருந்தது.

Scooty ஐ பூட்டி சாவியை கையில் எடுத்துக் கொண்டு அடுக்குமாடி குடியிருப்பில் தனது வீடு இருக்கும் மூன்றாவது தளத்திற்க்கு சென்று வீட்டின் calling bell--ஐ அழுத்தினாள்.

“கதவு திறந்திருக்கு உள்ளே வாங்க” என்று இந்தியில் அனுமதி வழங்கினான் பிருந்தாவின் கணவன் சதீஷ்.

Sorry-ங்க இன்னைக்கும் ஒரு கேஸ் கொஞ்சம் Critical  அதுனாலதா லேட் பாப்பா தூங்கியாச்சா என்று கேட்டாள்.

ம்ம்ம்… சாப்பாடு குடுத்துட்டேன் கொங்ச நேரம் விலையாடிட்டு அப்படியே தூங்கிட்டா உனக்கு டிபன் ரெடியா இருக்கு குளிச்சிட்டு வாடா சாப்பிடலாம்.

“நீங்க சாப்பிடுங்க சதீஷ் எனக்கு பசிக்கலை” என்றபடி சென்று சோபாவில் அமர்ந்தாள். அவளருகில் வந்து அமர்ந்தவன் “வாரத்துல இரண்டு நாளாவது மூடு அவுட் ஆவர, இங்க வந்த இந்த மூனு வருஷத்துல நீ பார்க்காத கேசா விடுடா” என்று தனது மனைவியின் மனநிலைக்கு மருந்து பூச முயன்றான்.

“ரொம்ப கஷ்டமா இருக்கு சதீஷ் இன்னைக்கு ஒரு பொண்ணு மானசின்னு, மூன்றாவதும் பெண் குழந்தை அவ முகத்துல ஒரு சின்ன சந்தோஷத்த கூட பாக்க முடியல ஏதோ பரிகொடுத்தவ மாதிரி முகத்தை வெச்சிருந்தா இன்னைக்கு பிறந்த அந்த பிஞ்சு குழந்தைக்கு தன்னோட அன்னையின் அன்பும் கிடைக்காம, சொந்தங்களின் அன்பும் மறுக்கப்பட்டதாகி விடுது. ரொம்ப இயலாமையா உணர்ரேன்.

ம்ம்ம்…. இங்க பாரு பிருந்தா பெண் சிசுக்களை பொருத்த வரைக்கும் நம்ம இந்தியா முன்பை விட இப்போ விழிப்புணர்வு அடைந்திருந்தாலும் அது இன்னும் முழுமை அடையனல்னுதான் சொல்லனும்.

கல்யாணம் என்றாலே வரதட்சனைங்கறது முக்கியமாயிடுது.  சிலபேர் விறுப்பத்துடனும் சிலபேர் வற்புறத்தலுக்காகவும் செய்றாங்க பணம் இருக்கிரவங்க எத்தனை பிறந்தாலும் கொண்டாடுறாங்க இல்லாதவங்க பெண் குழந்தைகளை அடியோட வெறுக்குறாங்க”

அப்போ பணம் இருக்குறவங்க மட்டும் தான் பெண் குழந்தை பெத்துக்கனும் இல்ல..? என்று குரலை உயர்த்தி கேட்டாள்.

இங்கபாரு நான் அப்படி சொல்லல பணம் இல்லாதவங்க பெண் குழந்தை பெத்து உயிரா வளர்கரது இல்லையா என்ன? இது ஒவ்வொரு சமூகத்தின் விறுப்பு, வெறுப்பு கருத்தும் வௌ;வேற மாதிரி இருக்கும் அதை உண்ணாலோ என்னாலோ மாற்ற முடியாதுடா என்று சமாதானம் கூறினான்.

வேணும்னு தவம் இருப்பவர்களுக்கு கொடுக்காத கடவுள் வேண்டாதவங்களுக்கு ஏன்தான் தினிக்கிறானோ என்று கூறியவளின் கண்கள் கண்ணீர் சுரந்தது.

அவள் கண்களில் கண்ணீரை பார்த்து பதைத்தவன் போதும்டா Please பழச பத்தி எதுக்கு இப்போ கடவுள் உன்னோட தவத்துக்கு வரம் குடுக்கலைன்னா என்ன? நாமளே அந்த வரத்தை தேடிப்போய் எடுத்துக்கிட்டோமே. இல்லைன்னு ஏன் நினைக்குற நம்மதேடி நமக்கு கடவுள் கொடுத்த வரமா உன்னோட கண் முன்னாடி இருக்கிர நம்ம குட்டி பாப்பாவே நமக்கு போதும்டா.  இவ நம்ம குழந்தையாதான வளர்றா நான்தான் அப்பா நீதானே அம்மா இத அவ்வளவு Easy-யா யாராலயும் மாத்திட முடியாது என்று சோபாவில் தூங்கிக் கொண்டிருந்த 5 வயது சிறுமி சர்மிளாவை கண்களால் வருடியவன் மனைவியின் பக்கம் திரும்பி குளிச்சிட்டு வந்து சாப்பிடுடா நா எடுத்து வைக்கிறேன் சீக்கிரமா வா என்று எழுந்து சென்றான்.

குளித்து உடை மாற்றி இரவு உணவு முடித்து சோபாவில் தூங்கிக் கொண்டிருந்த சர்மிளாவை அள்ளி அணைத்து முத்தமிட்டு உறங்கச் சென்றாள் பிருந்தா.

காலை 5 மணி

காயதிரி மந்திரம் அலாரமாக ஒலிக்க தனது மொபைலை எடுத்து அணைத்து வைத்தவள் பின் பம்பரமாக சுழன்று காலை வேலைகளை முடித்தாள் School செல்லும் சர்மிளாவுக்கும், railways-ல் பணிபுரியும் கணவருக்கும் டிபன் பாக்சில் உணவை அடைத்தவள் தனக்கும் எடுத்து செல்ல தயார் செய்தாள்.  வீட்டை பூட்டி இருவருக்கும் பறக்கும் முத்தத்தை பரிசாக தந்தவள் தனது Scooty-ல் மருத்துவமனைக்கு பறந்தாள்.

Dr. பிருந்தா. தனது கேபினை அடைந்தவள்  அடுத்ததாக 9 மணி rounds செல்ல ஆயத்தமாக Corridor ஒரே சத்தமாக இருந்தது என்னவென்று பார்க்க சென்றவள் general Ward ன் இடப்பக்கம் இருக்கும் கழிப்பறையின் வெளியே கூட்டம் தென்பட்டவே அங்கு சென்றால்.

அவளை கண்ட மற்றவர்களும் sweeper-களும் ஒருங்கி நிற்க்க உள்ளே சென்று பார்த்தவள் உறைந்து நின்றாள்.

நேற்று பிறந்து தாயிருந்தும் அனாதையாக தொட்டிலில் கிடந்த ரோஜா சென்டு இன்று கழிப்பறையில் இறந்தது கிடந்தது. Night duty nurse இடம் விசாரித்தபோது அவளுக்கும் சரியாக விவரம் தெரியவில்லை மானசியின் பெட் காலியாக இருந்தது.

துக்கம் அமிலமாய் நெஞ்சை நிரப்ப விடு விடு வென்று சென்று corridor-ல் நோயாளிகளுக்காக போட்டிருந்த இருக்கையில் அமர்ந்தாள். போலிசிடம் பேசியவாரே பிருந்தாவின் அருகில் வந்து நின்றார். மறுத்துவமனையின் Manager இவங்கதான் Dr. Brundha மானசியோட delivery-யை பார்த்தவங்க என்று ஒரியாவில் கூறியவர், பிருந்தாவிடம் திரும்பி Lavatory murdered baby யோட Investigation-க்காக வந்திருக்காங்க details குடுங்க என்று கூறி, எப்போபாரு இதே தொல்லையா போச்சு என்று முனகியபடி திரும்பி நடந்தார்.

Police-வுடன் அமைதியாக தனது கேபினை அடைந்த பிருந்தா அவர் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தாள். இத்தனை வறுடங்களாக மருத்துவ பணியில் இருந்து இதுபோல எத்தனையோ சம்பவங்களை பார்த்திருந்தாலும், ஏனோ நெஞ்சை அழுத்தும் பாரமும், கோபமும், இயலாமையும் போட்டிபோட கண்களில் கண்ணீர் கோடாக இரங்கியது. நேற்று தன் கையால் ஐனித்த உயிர் இன்று கொல்லப்பட்டதை மிகவும் கொடுமையாக உணர்ந்தாள் மருத்துவமனையில் அவளுக்கு மூச்சு முட்டியது போல இருந்தது.  கேபினை விட்டு வெளியேறி பைக் ஸ்டேன்டை அடைந்தவள் Scooty கிக்கரை கோபமாக உதைத்து சாய் பாபா மந்திரை நோக்கி செலுத்தினாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.