(Reading time: 9 - 17 minutes)

அனுபவம் புதுமை…!!! - R.ராஜலட்சுமி

Train வந்துடுச்சு  பாரு 2 நிமிஷம் தான் நிக்கும் லதா நீயும் அம்மாவும் முதல்ல ஏறுங்க அந்த கடைசியல் இருக்கு பாரு கோச் நம்பர் எஸ் 7. சீக்கிரம் அம்மு, வேலா இரண்டு  பேரும் இந்த பேக்கை தூக்கிகோங்க” என்று தனது 16 வயது மகனுக்கும் 15 வயது மகளுக்கும் கட்டளைகளை பிரப்பித்து கொண்டிருந்தார் சண்முகம்.

Trainஅவர் சொன்ன இடத்தை அடைந்த லதா, “கொஞ்சம் நகருங்க ஏன் வழியிலே நிக்கிறீங்க வயசானவங்க ஏறனும் இல்ல” என்று கத்திக் கொண்டுருந்தார்.

க்கியா general coach என்று கையை ஆட்டி இந்தியில் பதில் கூறினான், இதை கேட்ட லதா “ஐயோ sleeper class coach S7 எந்தப்பக்கம் என்று கேட்கவே பதினொரு பெட்டியைத் தான்டி பணிரெண்டாவது பெட்டி எனறு.  இதை கேட்ட அனைவரும் மீண்டும் அரக்கபரக்க அத்தனை பேகுகளையும் தூக்கிக்கொண்டு இடையில் இருந்த AC coach தாண்டி ஓடினர்.  பணிரென்டாவது பெட்டியை நெருங்கும் முன்பே Train கிளம்ப சத்தம் ஒலித்தது, இதைக் கேட்ட சண்முகம் லதா, சீக்கிரம் இதிலே ஏறுங்கள் என்றார் அது Coach number one

பிறகு அனைவரும் அத்தனை பேக்குகளையும் தூக்கிக்கொண்டு, 6 பெட்டியை உள்புரமாகவே  அத்தனைக் கூட்டங்களுக்கு இடையில் கடந்து சென்றனர்.

தனது இருக்கைக்கு அருகே சென்றால் அவர்கள் இருக்கைகளில் வேறொருவர் அமர்ந்திருந்தார். மூண்று பேர் அமரவேண்டிய இறுக்கையில் அமர்ந்திருந்தது 5 பேர், அதில் ஒருவருக்கு மட்டுமே seat confirm ஆகி இருந்தது. அவர்களிடம் கத்தி சண்டைப்போட்டு எழவைத்தார் சண்முகம். எதிர் இறுக்கையில் பார்த்தால் அங்கும் மூண்று பேருக்கு 7 பேர் அமர்ந்திருந்தனர். ஒருவழியாக இறுக்கை பிரச்சனை தீர்ந்து அவர்கள் அமர அரை மணி நேரம் பிடித்தது.

சீட் அணைவருக்கும் ஒரே இடத்தில் கிடைக்காமல் போனதால் மனோ பாட்டியும், சண்முகமும் ஓரிடத்திலும், அம்முவும், லதாவும் வேறிடத்திலும், வேலன் தனியாக அமர வேண்டியிருந்தது.

“லதா, தண்ணி எங்க வெச்சிருக்கான்னு பாருங்கம்மா கொஞ்சம் கொடுங்க” என்றவர், “கோச் நம்பர் Blinker-ஐ மாத்தி போட்டதுனால எவ்ளோ அழைக்கழைப்பு பாத்தீங்களாம்மா இந்த பக்கமும் அந்த பக்கமும் அலைய வேண்டியதா போச்சு, இதக்கூட சரியா செய்யாம என்னதான் பன்றாங்களோ தெரியல” என்று தண்ணீரை எடுத்துக் கொடுத்துவிட்டு, முட்டியை நீவிக் கொண்டிருந்த தனது அன்னையை பார்த்து சொல்லிக்கொண்டிருந்தார்.

“விடுப்பா இது தானே நமக்கு முதல் பயணம் அப்படித்தான் இருக்கும், ரெண்டு முறை போய் வந்தா பழகிடும்” என்று கூறினார் மனோ பாட்டி. “முதல் தடவை travel பன்றவங்களுக்குத்தானம்மா இதெல்லாம் சரியா புரியரமாதிரி இருக்கனும், நீங்க என்னடான்னா “கும்கி பட dialogue மாதிரி பழகிடும்னு சொல்றீங்க இதுலவேற Train எங்கயாவது நின்னா உள்ளேயும் வராம, வெளியேயும் போகாம வழியிலயே நிக்கிரானுங்க ஒரே தொல்லையா போச்சு என்று புலம்பித் தள்ளினார்.

னோ பாட்டி மனசாட்சியோ இவன் பக்கத்துல 1 மணி நேரமே கஷ்டம் இதுல ஒரு பகல் ஒரு ராத்திரி travel பண்ண வெச்சிட்டியே முருகேசா, சரியான tension party ஒழுங்கா விசாரிச்சி இருந்தா coach நம்பர் தேடியிருக்கலாம் எல்லாம் தனக்குத்தான் தெரியும்னு எல்லாத்துலயும் அவசரம் ம்ம்ம்….. இவன் அவசரத்துல என் கால் முட்டி உடைஞ்சதுதான் மிச்சம் என்று லேட் முருகேசனான தனது கணவரிடம் புகார் சொல்வதில் இரங்கினார்.

நீ எந்த class பா படிக்கிற” என்று கேட்ட பக்கத்து இறுக்கைக்காரருக்கு 11th std ஏன் கேட்குறீங்க ??? நீங்க தமிழா ?? என்று பதில் சொல்லி பதில் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தான் வேலன். அவனுக்கு இந்த ஒருநாள் train பயணம் புது உற்சாகமாக இருந்தது அதுவும் குடும்பத்தோடு கும்மியடிக்காமல் தனியாக சன்னலோர இறுக்கை வேறு மிகவும் சுவாரஸ்யமாக உணர்ந்தான்.

ஆமாம்பா நீங்க எந்த ஊருக்கு போகனும் என்று கேட்டார். அவரை சந்தேகமாக பார்த்த வேலன் அமைதியாக திரும்பிக் கொண்டான்.  பிறகு அவர் எவ்வளவொ பேச்சுக் கொடுத்தும் அவன் எதுவுமே பேசவில்லை அன்று முழுவதுமே ஒன்றிரண்டு வார்த்தகைளோடு நிறுத்திக் கொண்டான்.

ம்மா, எதிர்ல உட்கார்ந்து வர Auntyயோட dress வெலகியிருக்கு நான் அவங்ககிட்ட சொல்லவா? என்று கேட்ட அம்முவிடம் உனக்கேன்டி அமைதியா வா… என்று கூறினாள் லதா.

சிறிது நேரத்தில் ஒருவன் நொறுக்கு தீனி விற்றுச் சென்றான் அவனிடம் ஒரு Lays packet ஒன்னு குடுப்பா என்று வாங்கிக்கொண்டு 5 ரூபாயை நீட்டிய லதாவிடம், எட்டு ரூபாய் கொடுங்க என்றான் இந்தியில், அது அவருக்கு புரியாததால் MRP rate -ஐ பார்த்தார் 5 ரூபாயாக இருந்தது, என்னடி சொல்றான் இவன் என்று மகளிடம் விசாரித்தார் “எட்டு ரூபாயாம்மா” என்றாள் எப்படியெல்லாம் சம்பாதிக்கரானுங்க பாரு என்று கருவிக்கொண்டே காசை எடுத்து நீட்டினாள் லதா.

ஆங்காங்கே அமர்ந்தவர்களை வேடிக்கை பார்த்தவாரே 2 மணி நேரம் சென்றது, அப்போது இரண்டு கால் இல்லாத ஒருவன் சட்டையால் Compartment எல்லாம் சுத்தம் செய்து கொண்டு வந்தான் அதை பார்த்ததும் அம்முவுக்கு பாவமாக இருந்தது, தனது Seat-ன் நடைபாதையை சுத்தம் செய்தவன், காசுக்காக கையேந்த ஓரிருவர் கொடுத்தார்களே தவிர மற்றவர்கள் அமைதியாக இருந்தனர்.  தனது அன்னையிடம் கை நீட்டினான் அவன், அப்போதுதான் லதா எதையோ தனது மொபைலில் ஆராய்ந்து கொண்டிருந்தாள்.  ஏனோ அம்முவுக்கு கஷ்டமாக இருந்தது, அம்மாவின் மடியில் இருந்த பர்சை திறந்து 5 ரூபாயை எடுத்து அவன் கையில் கொடுத்தாள், அவன் காசிறுந்த கையால் சலாமடித்துச் சென்றான் அதை கவணித்த லதா ஏண்டி அவனுக்கு காசு போட்ட எனக்கு தெரியாமலா நான் சும்மா இருந்தேன் எத்தனைப் பேருக்குதான் இப்படி போடறது என்று கடிந்து கொண்டாள்.  அம்மா அவன் நம்ம சாப்பிட்டு போட்ட குப்பையையும் சேர்த்துதான் சுத்தம் செய்தான் பிச்சை எடுக்குறவங்களுக்கு காசு போடுறது அவங்களை ஊக்குவிப்பது போலாகும்.  இந்த மாதிரி வேலை செஞ்சு காசு கேட்டுக்கும் போது நாம மறுக்குறது அவங்களை அவமானப் படுத்துறது மாதிரி இல்லையா?. ஒரு நொருக்குத்தீனிக்கு மூணு ரூபாய் அதிகம் கொடுக்கும் போது இந்த மாதிரி விஷயத்துக்கு கொடுக்க ஏன் யோசிக்கனும் என்று கேட்டாள் அவள் சொல்வது நியாயமாக இருக்கவே அமைதியானார்.

திய உணவு முடிந்தவுடன் மனோ பாட்டி மிகவும் களைப்பாக உணர்ந்தார் நெடுநேரம் கால்களை கீழே விட்டு பயணித்ததால் கால்கள் வீக்கமடைந்து இருந்தது.  எனவே தான் ஒதுங்கி இறுக்கையின் ஓரம் அமர்ந்து பாட்டி படுக்க வழி செய்தார் சண்முகம்.  அவரும் அமர்ந்த படியே உறங்கிவிட்டிருந்தார், பாட்டியிடம் அசைவு தெரியவே கண் விழத்தவர் அவர் முகத்திர்க்கு படும்படி எதிர் இருக்கையில் இருப்பவன் தன் இருக்கையில் கால்களை வைத்து உறங்கிக் கொண்டிருந்தான். இருமுறை எழுப்பி கால்களை எடுக்கும்படி சொன்னார் சண்முகம் அவன் கண்டுகொண்டதாகவே தெரியவில்லை எனவே இவர் கத்த ஆரம்பித்துவிட்டார்.  அவன் கால்களை எடுத்த பின்பே தன் இருக்கையில் அமர்ந்தவரை பார்த்து ஏன் இப்படி கத்துற பாரு குழந்தையெல்லாம் இருக்கு தொல்லை கொடுக்காம அமைதியா பேசு என்று அறிவுறுத்தினார்,  நாம அடுத்தவங்களுக்கு தொல்லையா இருக்கக்கூடாதுன்னு எல்லா பயணிகளும் யோசிச்சா சரிதான் என்று பதில் அளித்தார் சண்முகம்.

அதர்க்குள் train அடுத்த junction-ல் நின்றது வெளியே சென்று bottle-ல் களில் தண்ணீர் நிறப்பிக்கொண்டு வரவும் train கிளம்ப announcement வந்தது சண்முகம் தண்ணீர் bottle களுடன் தன் இறுக்கையில் வந்தமர்ந்தார் train மெல்ல மெல்ல வேகமெடுக்க பயணிகளில் ஒருவன் ரன்னிங்கில் ஏற கால் இடறி train-ல் படியில் முட்டி platform-ல் விழுந்தான் அவன் கூட வந்தவர்களில் ஒருவன் மட்டும் இறங்கி விட train வேகமெடுத்து மறைந்தது, உள்ளே வந்தவர்களில் சிலர் இந்த சம்பவத்தைப் பற்றி பேச விஷயமறிந்த சண்முகம் கடுப்பானார். எத்தனை பேப்பரில் படிச்சாலும் புத்தி வரவே வராது என்று முனுமுனுத்தார்.

அம்மா அங்க பாருங்க என்று காட்டி சிறித்தாள் அம்மு, அவள் காட்டிய திசையில் நான்கு அரவாணிகள் அழகாக உடையணிந்து வந்து கொண்டிருந்தனர், அவர்கள் அனைவரும் இளைஞர்களிடம் பணம் கேட்டு அடாவடி அடித்துக் கொண்டிந்தனர் பணம் கொடுக்க மறுத்தவர்களிடம் மிகவும் அசிங்கமான சேட்டைகளை செய்தனர், இவர்களுக்கு பயந்து, தூங்குவது போல நடித்த இளைஞர்களின் தலையில் தட்டி அவர்கள் விழித்தவுடன் இரண்டு மடங்காக பணம் பிடுங்கினார்கள் இதை பார்த்த அம்முவிற்கு கோபமாக வந்தது.  உடனே எழுந்து தனது அண்ணன் இருக்கும் இருக்கைக்கு ஓடினாள், ஆனால் அவனோ உண்ட மயக்கம் தொண்டனுக்கும் உண்டென்று இழுத்துப் போர்த்திக் கொண்டு அப்பர் பர்த்தில் settle ஆகி விட்டிருந்தான்.

ரவு உணவு train-ல் வாங்கிக் கொண்டனர் சண்முகத்தின் குடும்பத்தார், வேலனுக்கு அந்த உணவு ஒத்துக்கொள்ளாததால் அதை கீழே போடப்போனவனை தடுத்தார் சண்முகம். இங்க குடு train-ல் பிச்சை காரங்களுக்கு கொடுத்துட்டு வரேன், லதா வேலனுக்கு பழம் கொடு என்று சொல்லி அவன் கையில் இறுந்த உணவை வாங்கிச் சென்றார்.  இரவு 9 மணியளவில் தனது தாயை படுக்க சொல்லி மகளையும் மனைவியையும் பார்க்கச் சென்றார் அவர்கள் ஏற்கனவே படுத்துவிட்டிருந்தனர் பிறகு மகனுடைய Compartment-ஐ சென்று பார்வையிட்டு, அவரும் உறங்கச் சென்றார்.

அதிகாலை 3 மணியளவிலேயே விழித்துவிட்டான் வேலன் யாரும் எழாததால் கண்களை மூடியபடி படுத்திருந்தான் அப்போது lower பர்த்தில் சத்தம் கேட்க்கவே படுத்தபடியே கீழே எட்டிப் பார்த்தான்.  அங்கே உறங்கிக் கொண்டிருந்த பெண்னின் கழுத்தில் இருந்த சங்கிலியை கத்தரித்துக் கொண்டிருந்தான் ஒருவன் அதைபார்த்த அவன் சத்தம் எழுப்புவதற்க்குள் நேற்று முழுவதும் வேலனின் பக்கத்தில் அமர்ந்து வந்தவர் அந்த திருடனின் கைகளை பின்னோக்கி பிடித்துக் கொண்டு திருடன்…… திருடன் என்று கத்தினார். வேலன் light-ஐ போட்டு கீழே இறங்க அந்த compartment-ல் இருந்த அனைவரும் விழித்துவிட்டனர். பிறகு railway police-டம் அந்த திருடனை ஒப்படைத்தவர் police-ன் விசாரனையின் போது தன்னை ஆசிரியர் என்று அறிமுகம் செய்துகொண்டார். அதை கேட்ட வேலனுக்கு ஒரு மாதிரியாக இருந்தது.  இவரைப்போய் சந்தேகப்பட்டோமே என்று குற்ற உணர்வோடு அவரைப்பார்த்து நட்பாக புன்னகைத்து நாங்க Howrah போகனும் sir என்று நேற்று கேட்ட கேள்விக்கு இன்று பதில் கூறினான்.  அவனது தோலில் கைப்போட்டு உன்னைப் போல் விழிப்புணர்வோடு இருப்பது என்றைக்குமே நல்லதுதான் என்று கூறிச் சிரித்தார் அந்த ஆசிரியர்.

காலை 9 மணியளவில் Howrah-வில் வந்திரங்கினர் சண்முகத்தின் குடும்பத்தார் “அந்த பக்கமாக போகனும் வாங்க” என்று கூறி Exit-ஐ நோக்கி முன்னே சென்றார் சண்முகம்.  தனது சகோதரனுடன் பேசியபடியே வந்த அம்முவின் எதிரில் வந்தவன் புச்…. என்று பான்பராக் எச்சிலை நடைபாதையில் துப்பியவாறு கடந்து சென்றான். அவன் செய்தது அறுவெறப்பைத் தர அதை முகத்தில் காட்டி நின்றனர் வேலனும், அம்முவும்

“ஏய்…… அங்கயே நின்னுட்டா எப்படி இன்னும் போக வேணாமா” வாங்க என்று கத்தி அழைத்தாள் முன்னே சென்ற லதா….

ரயில் பயணத்தின் போது கடந்து வந்த சாதாணமான நிகழ்வுகளை, கதையாக தங்களுடன் பகிர்ந்து கொண்டேன். நன்றி!!! - R.ராஜலட்சுமி

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.