(Reading time: 5 - 9 minutes)

கையில் இருக்கும் பொக்கிஷம் - வளர்மதி

கொடியில் இருந்து காய்ந்த துணிகளை குடையில் வைத்து வீட்டினுள் நுழைந்த வனிதாவின் பார்வையில் சத்தம் இல்லாமல் ஒவ்வொரு அடியும் எடுத்து வைத்து மேஜை மேல் ஏறிய சாரு தென்ப்பட்டாள்.

Kaiyil irukkum pokkishamஇவ ஏதுக்கு இப்படி பம்மி நடந்தது போற மனதில் நினைத்துக் கொண்டு அமைதியாக தன் மூன்று வயது மகளை கண்ணால் பின் தொடர்ந்தாள்.

சுற்றும் முற்றும் பார்த்து வனிதாவின் கைதொலைபேசியை எடுத்து, சத்தம் இல்லை இறங்கி நேராக அவளின் அறையில் உள்ள துணிகளின் இடையே மறைத்து வைத்து மீண்டும் நல்ல பிள்ளை போல் தொலைகாட்சி முன்பு அமர்ந்து கார்ட்டூன் பார்க்க அமர்ந்த்துக்கொண்டாள்.

மகளின் செய்கை அவளுக்கு சிரிப்பை வரவைத்தாலும் என்னுடைய போனை கண்டால் இவளுக்குன் ஏன் பிடிக்கவில்லை யோசித்தவளுக்கு பதில் கிடைக்கவில்லை, மாறாக நேற்று சாரு சமத்து பிள்ளையாக இருதால் அவளுக்கு கரடி பொம்மை வாங்கி தருவதாக சொல்லி இருந்தது நினைவில் வந்தது.

சாருவை மடியில் அமர்த்தி “என் செல்ல குட்டிக்கு அம்மா மேல என்ன கோபம்”.

“என் பொம்மி எங்கே?” தன் மழலை மொழியில் கோபமாக கேட்ட மகளை பார்த்து அவளுக்கு சிரிப்பு வந்தது.

மகளை செல்லம் கொஞ்சி, இப்போது போகலாம் சொல்ல பிறகே அவள் சமாதானம் செய்யப்பட்டது.

ரு கையில் தொலைபேசியும் இன்னும் ஒரு கையில் ஸ்டேரிங்கை பிடித்த படி காரை செலுத்திவளை பார்த்து “ம்மா போன் பேசி நோ கார்” தன் மகள் சொல்லுவதை பொறுமையாக கேட்டும் நினையில் வனிதா இல்லை. அவளின் கவனம்முளுக்க அலுவகத்திலே இருந்தது.

நகரத்தின் மைய பகுதில் இருந்த அந்த மோலில் காரை பார்க் செய்து, நடக்க ஆரம்பிக்கும் போது வனிதாவின் கையை பிடித்து இழுத்து சாரு அவளின் தலையை ஒரு புறமாக சரித்து ஒரு கையால் அவளிடம்  வரும் படி சைகை செய்தாள்.

சாருவின் செய்கையை மனதில் ரசித்த படி புன்னகையுடன் அவளது அருகே மண்டியிட்டு அமரும் போது வனிதாவின் கன்னத்தில் முத்தமிட்டு ஐ லவ் யு ம்மா சொன்னவரை ஆச்சரியத்துடன் பார்த்து அவளும் தன் மகளை வாரி அனைத்து முத்தமிட்டால். வனிதாவின் மனதில் இன்று ஏதோ நடக்க போகிறது என உணர்த்த, என்னவென்று சொல்லமுடியாத உணர்வுடன் மகளின் கையை பற்றி யோசைனையுடன் சென்றாள்.  

இரண்டாம் தளத்தை அடையும் போது வனிதாவில் கைத்தொலைபேசி அலறியது காலையில் இருந்து ஒரு முக்கியமான ஒரு அழைப்புக்காக காத்திருந்ததால், அதை எடுக்க சாருவின் கையை விட்டு தன் கைப்பையில் போனை தேடி எடுத்து பேசியபடி மெல்ல நடக்க தொடங்கியவளின் கவனம் அவளுடன் பேசிக்கொண்டிருந்தவரின் மீது இருந்தது.

பத்து நிமிடம் போனில் பேசிக்கொண்டிருந்தவளின் முன் ஏதோ  தொத்தேன்று ஒரு விழுந்தது. முதலில் அது ஓர் பொம்மை என நினைத்தவளுக்கு, ஒரு சில விநாடியிலே அது ஒரு சிறுமி என அவளுக்கு புரிந்தது.

அச்சிறுமியின் பின் தலையில் இருந்து இரத்தம் வெளியேற, அசையாமல் இருந்தவளை சுற்றி பலர் சூழ்ந்து அவளுக்கு உதவ முயன்றனர்.

னிதாவின் கால்கள் அங்கயே வேர் உன்றி நிற்க, முளை செயல் இழந்து போன நிலையில் அவள் கண்கள் மட்டும் அச்சிறுமியை பார்த்து கொண்டிருக்கையிலே அந்த சின்ன சிறு உடலில் இருந்து உயிர் பிரிந்தது.

கண் முன்னே நிகழ்ந்த ஒரு மரணம் அவளை செயல்யிழக்க செய்ய, தள்ளாடிய அவளை அங்கே இருந்த ஒருவர் வனிதாவின் கையை பற்றி ஒரு இருக்கையில் அவளை அமரவைத்தனர். வெகு நேரம் அசையாமல் அமர்த்து இருந்தவள், அச்சிறுமியின் அம்மா கதறி அழும் சத்தத்தால் சுயநினைவுக்கு வந்தாள்.

தன் உணர்வு பெற்று சில நொடிகளில் அவளுக்கு புரிந்தது இந்த களபரத்தில் அவள் சாருவை கவனிக்கவில்லை என்பது. அந்த இடத்தை சுற்றி நிறைய ஆட்கள் நிற்க, ஒரு நிமிடத்தில் பல எண்ணங்கள் அவளுக்கு வந்து போனது.

அந்த ஐந்து மாடி கட்டிடத்தில் சாருவை எங்கே சென்று தேடுவது என்று அவளுக்கு புரியவில்லை. மீண்டும் அவள் நடந்து வந்த பாதையில் வழி தேடிக்கிக் கொண்டு சென்றவளின் கண்களுக்கு சாரு ஏங்கும் தென்படவில்லை. கண்களில் இருந்து வழிந்த கண்ணீரை துடைத்து மனதில் உலகத்தில் உள்ள அனைத்து கடவுள்களையும் வேண்டிய படி சாருவை தேடினாள்.

செல்லும் வழியில் உள்ளுணர்வு ஏதோ உணர்த்த தன் பக்க வட்டில் திரும்பி பார்த்த போது சாரு அவளைவிட இரண்டு மடங்கு பெரிய கரடி பொம்மையுடன் பேசிகொண்டிருந்தாள்.

சாருவை மீண்டும் பார்த்த மகிழ்ச்சியில் கன்னங்களில் வழிந்த கண்ணீரை துடைத்து, மெல்ல மகளின் அருகே சென்று சாருவை இருக்க அனைத்துக்கொண்டவளுக்கு ஒரு விலையுள்ள பொக்கிஷம் மீண்டும் அவளுக்கு கிடைத்தது போன்ற ஓர்  உணர்வு.

வனிதாவின் மனநிலையை பற்றி தெரியாமல் சாரு தனக்கு இந்த பெரிய பொம்மை வேண்டும் தன் அம்மாவிற்கு இரண்டு கண்ணகளில் முத்தமிட்டு தாஜா செய்து கொண்டிருந்தாள்.

“சாரு நீ எப்போம்மா  இந்த கடைக்கு வந்திங்க”

“ம்ம்ம் அம்மா தான் போனில் பேசிக்கொண்டு அப்படி நடந்து போனிங்க, நான் இந்த பொம்மையை பார்த்து இங்கே வந்தேன். எப்ப போன் பேசினாலும் நீங்க பாப்பாவை கவனிக்கறது இல்ல”.

மகளின் அந்த கடைசி வார்த்தையில் இருந்த உண்மை வனிதாவின்  மனதை சுட்டது. இது நாள் வரை மற்றவர்கள் சொன்னதை அவள் புரிந்துக்கொள்ளாமல் இருந்தது, சற்று முன் கண்முன்னே நடந்தத விபத்தினால் அவளுக்கு புரிந்தது.

சாரு கேட்ட அந்த பொம்மையை வாங்கி கொடுத்து எப்படி பத்திரமாக வீட்டிற்கு வந்து மீண்டும் என்று அவளுக்கு தெரியாது.

றுநாள் செய்தித்தாளிள் பெற்றோரின்கவனகுறைவால்ஷாப்பிங்மால்மாடியில்இருந்துதவறிவிழுந்தசிறுமிமரணம் செய்தி முதல் பக்கத்தில் வெளியானது.

அதை பார்த்தவளின் மனதில் அந்த சிறுமிக்கு பதில் சாரு விழுந்தது இருந்தால் இந்நேரம்  தன் நிலை என்னவென்று யோசிக்கையில் நெஞ்சம் பதறியது.

ஒரு நிமிட கவன குறைவால் ஏற்படும் உயிர் இழப்பிற்கு பின்பு வருந்துவதில் என்ன பயன்?

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.