Comedy Stories - ஆம்பளை மூளையா, பொம்பளை மூளையா?
“உங்க தாத்தாக்கு ப்ரெயின் ட்ரான்ஸ்பிளான்ட் செய்தா தான் சரியா இருக்கும்.”
டாக்டர் சொன்னதும் உறவினர்கள் அதற்கு சம்மதம் சொன்னார்கள்.
“உடனே செய்யலாம் டாக்டர்.”
“இது ரொம்ப காஸ்ட்லியான வேலை.”
“மூளைக்கு அப்படி எவ்வளவு பணம் தேவைப்படும் டாக்டர்?”
“ஆம்பளை மூளைக்கு 3.5 கோடி ஆகும். பொண்ணோட மூளைன்னா 1.4 கோடி ஆகும்.”
அங்கே இருந்த ஆண்கள் முகத்தில் பெருமை எட்டிப் பார்த்தது. சிலரின் முகத்தில் புன்னகை கூட வந்தது.
ஆனால் தாத்தாவின் பேத்திக்கு விலையில் இருந்த வித்தியாசம் புரியவில்லை.
“அது ஏன் டாக்டர் ஆம்பளை மூளைக்கு ஒரு விலை, பொண்ணு மூளைக்கு வேற ஒரு விலை?”
“இது தான் நாங்க பொதுவா பாலோ செய்ற விலை. பொண்ணுங்க மூளையை பயன்படுத்துவாங்க, அதனால அது யூஸ்ட். ஆம்பளைங்க மூளை அப்படி கிடையாது. அதான் அதுக்கு விலை அதிகம்.”
😆😆 😆😆 😆😆
😀😀😀😀😀