(Reading time: 6 - 11 minutes)
Muthu Sippi
Muthu Sippi

Flexi Classics தொடர்கதை - முத்துச் சிப்பி (முதல் பாகம்) - 13 - சரோஜா ராமமூர்த்தி

1.13. அம்பலத்தரசன்

  

குந்த துணையின்றி வாடும் ஒரு அபலையின் வாழ்க்கையிலே. இன்பமும் அமைதியும் பார்ப்பதற்குக் கிட்டாது.

  

கல்யாணராமனின் வீட்டிலிருந்து கிளம்பி பவானி கொல்லைப் பக்கமாகவே தன் வீட்டுக்குள் சென்றாள். கொல்லையில் அடர்த்தியாகப் படர்ந்திருந்த நித்திய மல்லிகைப் பந்தலிலிருத்து 'கம்' மென்று மணம் வீசியது. மாலைத் தென்றலில் மலர்ந்து பசுமையான இலைகளின் ஓடையே அவை ஆடி அசைவதே வனப்பு மிகுந்த காட்சியாக இருந்தது.

  

பந்தலின் கால் ஒன்றில் சாய்ந்து பவானி சிறிது நேரம் வான வெளியையும், தொலைவில் மறையும் சூரியனின் அஸ்தமனத்தையும் பார்த்துக் கொண்டிருந்தாள். அக்கினிப் பிழம்பான ஆதவன் தன் வெப்பத்தைக் குறைத்துக் கொண்டு மேற்குக் கடலாகப் போய்க் கொண்டிருந்தான். வான வீதி எங்கும் பாவைகளின் பட்டம். தெருக்களில் மேய்ச்சலிலிருந்து திரும்பும் பமக்களின் குளம்பொலி. பசுமலைக் கிராமத்தில் எழுந்தருளி இருக்கும் பசுபதி கோவிலிலிருந்து மிதந்து வரும் பணியின் நாதம்.

  

'இன்னொருவருடைய மனதிலே என்ன இருக்கிறது? விஷம் இருக்கிறதா அல்லது அன்பெனும் அமுதம் நிறைந் திருக்கிறதா என்பதை எப்படித் தெரிந்து கொள்வது? கல்யாணராமன் வெள்ளை மனத்தவர். அன்புடன் பழகுகிறார். அந்த அம்மாள் பார்வதி கருணையே உருவானவள். அடக்கமானவள். ஆனால் அவர்? அந்த மூர்த்தி எப்படிப்-பட்டவர்? பேச்சும் செய்கையும் அவரைப் பலவிதமாக எண்ணத் தோன்றுகிறதே!' என்று குழம்பினாள் பவானி.

  

அப்பொழுது கோவிலிலிருந்து காற்றிலே ஒரு இசை கலந்து வந்தது. மணியின் நாதத்தோடு அந்த இசை பரவியது.

  

இசையின் ஆனந்தத்தில் லயித்துப் பவானி அப்படியே நின்றாள். மேற்கே

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.