(Reading time: 2 - 4 minutes)

கருத்துக் கதைகள் – 34. அன்னையே முதல் ஆசான்... - தங்கமணி சுவாமினாதன்

mom

வள் பெயர் முனியம்மா.கணவன் இல்லை.அவளுக்கு ஒரு மகன் இருந்தான்.அவன் சிறுவன்.ஒரு நாள் அவன் கடையிலிருந்து ஊசி ஒன்றைத் திருடி வந்தான்.தாயான இவள் மகனின் செயலைக் கண்டிக்கவில்லை.மாறாக அவனைப் பாராட்டினாள்.பள்ளியிலிருந்து சக மாணவர்களிடமிருந்து புத்தகம் பென்சில் பேனா என்று தினம் தினம் திருடி வந்தான்.தாய் அவனை மெச்சினாள்.அவ்வளவுதான் வெளியிலும் பாத்திரம் பணம் உடைகள் என்று திருட ஆரம்பித்து பெரிய திருடனானான் மகன்.திருட்டால் பெரும் பொருள் சேர்ந்தது.மகிழ்ந்தாள் தாய் முனியம்மா.

ஒரு நாள்  பெரும் பணக்காரர் வீட்டில் விலை உயர்ந்த நகையைத் திருடிவந்தான்.மகிழ்ச்சியோடு அன்னகையை அணிந்து அழகு பார்த்தாள் தாய்.

இப்படியே திருடித் திருடி மோசமான திருடனானான் முனியம்மாவின் மகன்.ஒரு சமயம் வங்கி ஒன்றில் லட்சக் கணக்கில் திருடும் போது கையும் களவுமாகப் பிடிபட்டான்.போலீஸார் அவனின் கைகளில் விலங்கு மாட்டி அடித்து இழுத்துச் சென்றனர். ஐயோ..ஐயோ என் பிள்ளை.. என் பிள்ளை என்று தலையில் அடித்துக் கொண்டு ஒப்பாரி வைத்தாள் முனியம்மா.

திருட்டு மகனோ அறிவில்லா அன்னையே..இப்போது அழுது என்ன பயன்?நான் சின்னஞ்சிறு பிள்ளையாய் இருந்த போதே என்னைக் கண்டித்து நல்வழிப் படுத்தியிருந்தால் நான் இப்படி கைவிலங்கிடப்பட்டு கொடுஞ்சிறை செல்ல நேர்ந்திருக்குமா?நீயெல்லாம் ஒரு தாயா?..என்று தாயைப் பார்த்து ஏசினான்.உண்மை புரிந்ததால் வெட்கித் தலை குனிந்தாள் முனியம்மா.

பிள்ளைகளை வளர்ப்பதில் பெற்றோர் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.சிறு பிள்ளைகளிடம் தோன்றும் தீய குணங்களை முளையிலேயே கிள்ளி எறிந்திட வேண்டும்.

பெற்றோர் தமக்கு எவ்வளவுதான் தேவை இருந்தபோதும் தம் பிள்ளைகளை எவ்வித பாதகச் செயல்களிலும் ஈடுபடுத்தக் கூடாது.இல்லாவிடில் பிள்ளைகளுக்கு மட்டுமல்ல பிள்ளைகளின் செயலால் பெற்றவருக்கும் அவமானம் நேரிடும்.எந்தக் குழந்தையும் நல்லக் குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே...அவன் நல்லவனாவதும் தீயவனாவதும் அன்னை வளர்ப்பினிலே என்ற பாடலுக்கு ஏற்பவே பிள்ளைகளின் குணம் அமையும்.

 

கதை சொல்லும் கருத்து:

ன்னையே முதல் ஆசான்..

Story # 32 - Vazhvil sikkanam... Thevai ikkanam

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.