(Reading time: 2 - 3 minutes)

கருத்துக் கதைகள் – 37. மன அழுத்தம் - Chillzee Team

stress

ல்லூரியில் ஒரு பேராசிரியர் மனஅழுத்தம் மேலாண்மை (stress management) குறித்து பாடம் நடத்திக் கொண்டிருந்தார்.

ஒரு நீர் நிறைந்த கோப்பையை கையில் எடுத்தவர், மாணவர்களை பார்த்து, “இந்த கோப்பை எவ்வளவு கணம் இருக்கும் என்று நினைக்குறீர்கள்?” என்றுக் கேட்டார்.

மாணவர்கள் கால் லிட்டர் தொடங்கி ஏதேதோ விடைகளை சொன்னார்கள்.

அவர்களின் விடைகளை கவனித்த ஆசிரியர் புன்னகையுடன் தான் சொல்ல வந்ததை விளக்கினார்.

“என் பார்வையில், இந்த கோப்பையின் எடை ஒரு முக்கியமான விஷயமே இல்லை... எல்லாமே நான் எவ்வளவு நேரம் இந்த கோப்பையை கையில் வைத்திருக்கிறேன் என்பதை பொறுத்து இருக்கிறது... இதை ஒன்றிரண்டு நிமிடங்கள் கையில் பிடித்திருந்தால், இது கணமில்லாததாக தெரியும்.... மேலும் ஒரு, ஒரு மணி நேரம் இப்படியே கையில் வைத்திருந்தால் என் கை வலிக்கும்.... ஒரு முழு நாள் அப்படியே வைத்திருந்தால் என் கையை அசைக்க கூட முடியாத அளவிற்கு வலிக்கும்....

நம் வாழ்க்கையில் ஏற்படும் மன அழுத்தங்களும், கவலைகளும் கூட இந்த நீர் நிறைந்த கோப்பையை போன்றது தான்... சிறிது நேரம் அதை பற்றி சிந்திப்பதால் எதுவும் ஆக போவதில்லை.... கூடுதலாக சிறிது நேரம் அதை பற்றியே சிந்தித்தால் சிறியதாக வலி ஏற்படும்.... ஆனால் தொடர்ந்து நாள் கணக்கில் அதை பற்றியே யோசித்துக் கொண்டிருந்தால் வேறு எதையும் செய்ய முடியாத அளவிற்கு அவை உங்களின் வாழ்வை புரட்டி போட்டு விடும்...”

கவலைகள் மற்றும் மன அழுத்தம் ஏற்படும் விஷயங்களை உங்களின் மனதை விட்டு தூக்கி எரிய முயலுங்கள்...

ஒவ்வொரு நாளும், உங்களை அழுத்தும் அன்றைய நாளின் சம்பவங்களை மறந்து விட்டு இரவு தூங்க செல்லுங்கள்..!

ஒவ்வொரு நாளும் புதிது.... பழைய கவலைகளை மூட்டைக் கட்டி கொண்டு எடுத்து வர வேண்டாமே....!

Story # 36 - Pavathin ver

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.