(Reading time: 9 - 18 minutes)

வெள்ளி மூக்கு சிங்கம்... - தங்கமணி சுவாமினாதன்

ஹாய்..குட்டீஸ் உங்களுக்கும் சின்னவங்க..கொஞ்சம் வளந்தவங்க..பெரியவங்க ,ரொம்ப பெரியவங்க எல்லாருக்கும் நான் ஒரு கதை சொல்லப்போறேன்.வெள்ளிமூக்கு சிங்கம்ன்னா" கழுதை"ன்னு ஒங்க எல்லார்க்கும் தெரியும்.ஒரு கழுதையோட நடிப்ப பத்திதான் இந்த கதை.

மாடாகுடி..மாடாகுடின்னு ஒரு ஊரு.அந்த ஊருல பொன்னன்... பொன்னன்னு ஒரு சலவைத் தொழிலாளி இருந்தான்அவனோட மனைவி பேரு பொன்னி.புள்ள பேரு கண்ணன்.பொன்னன் ரொம்ப நல்லவன்.ரொம்பவும் இரக்க சுபாவம் உள்ளவன்.துணி துவைத்துக் கொடுக்க யாரிடமும் அதிகமாய்க் கூலி வாங்க மாட்டான்.ரொம்ப நியாயமாய் இருப்பான்.ஊரில் அனைவருக்கும் அவனைப் பிடிக்கும்.அவனிடம் இரண்டுகழுதைகள் இருந்தன.அவற்றிடம் பொன்னன் மிகவும் அன்பாக இருப்பான்.அவற்றின் மீது அதிகமாக சுமையை ஏற்றமாட்டான்.அவற்றிற்கு வயிறார தீனி போடுவான்.மனிதர்களிடம் பேசுவது போல் கழுதைகளிடம் பேசுவான்.அவற்றின் முதுகை அன்போடு தடவிக் கொடுப்பான்.மொத்தத்தில் பொன்னன் கழுதைகளிடம் மிகவும் அன்பாக இருப்பான்.

ஒரு நாள் பொன்னன் ஆற்றில் துணி துவைத்துக் கொண்டிருந்தான்.கழுதைகள் இரண்டும் மேய்ந்து கொண்டிருந்தன.பொன்னனின் மனைவி பொன்னியும் அவனுக்கு உதவியாக இருந்தாள்.கண்ணன் விளையாடிக்கொண்டிருந்தான்.தோய்த்து முடித்தவுடன் தண்ணீர் இல்லா மண்ற்பரப்பில் துணிகளைக் காயப் போட்டான் பொன்னன்.துணிகள் காய்ந்ததும் நான்கு மூட்டைகளாகக் கட்டினான்.

Velli mookku singamஇரண்டு கழுதைகள் முதுகிலும் ஒவ்வொரு மூட்டையை ஏற்றினான்.அம்மூட்டைகள் அளவான கனமுள்ளவைகளாகவே இருந்தன.கழுதைகளால் அச்சுமையை ரொம்ப ஈஸியா சுமக்க முடியும்.

மற்ற இரு மூட்டைகளையும் பொன்னனும்,பொன்னியும் ஆளுக்கொன்றாய் தலையில் வைத்துக் கொண்டாரகள்.வீடு நோக்கிப் புறப்பட்டார்கள். முன்னால் கழுதைகள் நடக்க பின்னால் பொன்னன், பொன்னி,கண்ணன் மூவரும் நடந்தார்கள்.

கொஞ்ச தூரம் நடந்திருப்பார்கள்.மண்ணிற்குள் பாதியும் மண்ணின் மேல்பரப்பில் பாதியுமாய் வெளியே நீட்டிக்கொண்டிருந்த ஒரு கல்லில் கால் தடுக்கி நிலை தடுமாறி ஒரு சிறிய பள்ளத்தில் விழுந்தது முன்னால் சென்று கொண்டிருந்த கழுதை.விழுந்த வேகத்தில் அதன் முழங்காலில் அடிபட்டு ரத்தமா கொட்டிச்சு.வலி தாங்காமல் ஹூஹா..ஹூஹா என்று கத்தியது அந்த கழுதை.

சட்டென்று தலையிலிருந்த மூட்டையைக் கீழே போடுவிட்டு அதுங்கிட்ட ஓடினான் பொன்னன்.

அதோட முதுகில் இருந்த மூட்டை கொஞ்சம் தள்ளி விழுந்து கிடந்தது. கழுதையின் காலை நீவிவிட்டுத் தடவிக்கொடுத்தான் பொன்னன்.வலியினால் அதன் கண்களிலிருந்து கண்னீர் வழிந்தது.சப்தமிட்டு அழுதது கழுதை.அது அழுவதைப் பார்த்த பொன்னனுக்கும் அழுகை வந்தது.

அழுவாதே..அழுவாதே...சரியாயிடும்..அழுவாதடா என்று பெற்ற பிள்ளையிடம் சொல்வது போல்

கழுதைக்கு ஆறுதல் சொல்லி தடவிக் கொடுத்தான் பொன்னன்.கழுதையால எழுந்திருக்க முடில.

தெருவாசிகள்லாம் ஒண்ணா சேந்து ஒரு கயிற்றுக் கட்டில்ல அந்தக் கழுதை ஏத்தி தூக்கிக்கிட்டுப்  போய் பொன்னன் வீட்டுக்கொல்லைப்புரம் இருந்த ஒரு மரத்தின் கீழ் கொண்டுவந்து படுக்க வெச்சாங்க.

கால் நடை மருத்துவர் வந்து பார்த்தார்.கழுதையின் கால்ல மிக லேசான எலும்பு முறிஞ்சிருக்குன்னு  சொல்லிக் கட்டுப் போட்டு அடிபட்ட இடத்தில் மருந்து போட்டார்.இன்னும் பதினைந்து நாட்களில் சரியாகி விடும் என்று சொல்லிட்டுப் போனாரு.பொன்னன் ரொம்ப பரிவோட அந்த கழுதைய பாத்துகிட்டான்.தினமும் அதோட காலுக்கு மருந்து போட்டு,வேளாவேளைக்கு தீனி வெச்சு அத ரொம்ப கவனமா பாத்துகிட்டான்.

ழுதயோட காலு புண்ணு நல்லா ஆறிப்போயிடுச்சு.அத பாத்து பொன்னனுக்கு சந்தோஷமா இருந்திச்சு.அப்பாடி நம்ம கழுதைக்கு புண்ணு நல்லா ஆறிபோயிடுச்சு பொன்னி அப்பிடின்னு தன்னோட மனைவிகிட்ட சந்தோஷமா சொன்னான்.அப்பிடின்னா இனிமே இது மூட்ட தூக்க வருமா?

அப்பிடின்னு பொன்னி பொன்னன்ட கேட்டா.அதெப்பிடி சொல்ல முடியும் முறிஞ்ச எலும்பு கூடிடுச்சான்னு தெரியலயே..வைத்தியர் வந்து பாத்துல்ல சொல்லனும் அப்பிடின்னான் பொன்னான்.தன்னோட எஜமானும் எஜமானியும் பேசரத கேட்ட கழுதைக்கு சொரேர்னுது.ஐயையோ!..நமக்குக் காலு சரியாயிடுச்சின்னா நம்மள மறுபடியும் மூட்ட தூக்க வெச்சிடுவாங்களேன்னு அதுக்குக் கவல வந்துடுச்சு.காலுல அடிபட்டத காரணம் வெச்சு வேலையே செய்யாத வேளாவேளைக்கு நன்னா சாப்ட்டுட்டு மரத்தடில காத்துல நிம்மதியா தூங்கிதூங்கி எழுந்துகிட்டு ரொம்ப ஜாலியா இருந்த கழுதைக்கு அதுவே பழகிப் போயிடுச்சு.எப்பவும் அப்பிடியே வேலையே செய்யாம சாப்ட்டு சாப்ட்டு ஜாலியா தூங்கணும் போல இருந்திச்சு.எதாவது யோசிக்கணும்ன்னு நெனச்சு யோசிக்க ஆரம்பிச்சுது.

ஒரு ப்ளான் அதுக்கு தோணுச்சு.

தினஞ்சு நாள் ஆயிடுச்சி.டாக்ட்டர் வந்தாரு.கழுதயோட கால சோதிச்சுப் பார்த்தாரு.புண்ணு நல்லா ஆறிடுச்சுன்னு சொல்லிக்கிட்டே கழுதயோட காலெலும்பு முறிஞ்ச எடத்தத் தொட்டாரு.கழுத தன்னோட ப்ளான்படி நடிக்க ஆரம்பிச்சிச்சு.டாக்ட்டர் எலும்பு முறிஞ்சஎடத்த தொட்ட ஒடனேயே வலிதாங்க முடியாதது போல ஹூஹா ஹூஹான்னு கத்திச்சு.கஷ்டப்பட்டு கண்ணுல கண்ணீர கொண்டுவந்தது.வலியால துடிக்கிறமாரி பண்ணிச்சு.ஓலமிட்டுச்சு.டாக்டருக்கு ஒண்ணும் புரியல.

பொன்னன் கழுத அழுது துடிக்கிறதப் பார்த்து என்னாச்சு டாக்டர் ஐயா...என்னாச்சு..என்னாச்சுன்னு கவலயோட கேட்டான்.

பொன்னன்....கழுதய நிக்கவைப்போம் வாங்கன்னு டாக்டர் சொன்னாரு.ரெண்டு பேருமா கழுதய எழுந்திருக்க வைக்கப் பாத்தாங்க.ஆனா கழுத வேணும்னே தொபுகடீர்..தொபுகடீர்ன்னு நிக்கமுடியாத மாதிரி கீழ கீழ விழுந்திச்சு.வலிக்கிற மாரி அழுது கத்திச்சு.டாக்ட்டருக்கு சுத்தமா ஒண்ணும் புரியல.

 பொன்னன்... கழுதைக்கு சரியாயிட்டா மாதிரிதான் எனெக்குத் தோணுது ஆனாலும் அது ஏன் இப்பிடி அழுவுதுன்னு தெரியல.இன்னும் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கட்டம்.அடுத்த வாரம் வரேன்னு சொல்லிட்டுப் போய்ட்டாரு.

பொன்னன் கழுதய தடவிக்கொடுத்தான்.ஏண்டா அழுவுர..இன்னும் ஒனக்கு வலிக்குதா..?கவலப்படாத.சரியாயிடும்.ரெஸ்ட் எடுத்துக்கோன்னு சொல்லிட்டு அத படுக்க வெச்சான்.கழுதைக்கு ஏக குஷி.அப்பாடா நல்லா ஏமாந்தாங்க அப்பிடின்னு மனசுக்குள்ள நனெச்சுது.மறுபடியும் வேல ஏதும் செய்யாம நல்லா சாப்ட்டு சாப்ட்டு தூங்கிச்சு.அதும் ஒடம்பு நல்லா குண்டா ஆயிடுச்சி.

ஒரு நாளு இன்னோரு கழுத இருக்குல்ல அது வேல செஞ்ச களைப்புல கண்ணமூடிண்டு படுத்துக்கிட்டு இருந்திச்சு.அனா தூங்கல.இந்த நடிக்கிர கழுத இருக்கில்ல அது அந்த கழுத தூங்கரதா நெனெச்சு மெல்ல எழுந்துக்கிட்டுபொய் கொஞ்ச தூரத்துல கிடந்த காகிதத்த தின்னுச்சு.லேசா கண்ணத்தொறந்த படுத்துக்கிட்டிருந்த கழுத இது நடந்து போய் காயிதம் தின்னரதையும் மறுபடியும் நடந்து வருவதையும் பாத்துச்சு.அடப்பாவி...நீ காலு சரியா போகாதமாரி நடிக்கிறயா?அப்பிடின்னு நெனெச்சுக்கிச்சு.ஒனக்கு ஆண்டவந்தான் தண்டன கொடுக்கனும்ன்னு நெனெச்சுது.அது பேசாம கம்முன்னு இருந்துடிச்சு.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.