(Reading time: 9 - 18 minutes)

குட்டிக்கொரங்கே..ரெங்கா..ரெங்கா.. - தங்கமணி சுவாமினாதன்

குட்டீஸ்..இன்னிக்கி நான் உங்களுக்கு ஒரு குட்டி குரங்கோட கதைய சொல்லப்போறேன்.குரங்கப் பாத்தா உங்களுக்கெல்லாம் புடிக்கும்தானே?சமத்தா கேளுங்க... என்ன கேக்குறீங்களா?

ஒரு நாளைக்கு ஒரு குட்டிக் குரங்கு என்ன பண்ணிச்சு அதும் அம்மாகிட்ட கோச்சிக்கிட்டு அம்மாகிட்ட சொல்லாம இப்பிடீ.. தனியா எங்கயோ போக ஆரம்பிச்சிது.அது குட்டிதானே? அதுக்கு எங்க போறதுன்னே தெரில.ரொம்ப தூரம் அம்மாவ விட்டு தனியா வந்திடுச்சி.திடீர்ன்னு அதுக்கு பசிக்க ஆரம்பிசிடுச்சு.பக்கத்துல அம்மா இருந்தா அம்மா பசிக்குதும்மான்னு சொன்னா ஒடனே அம்மா என்ன செய்வாங்க?பசிக்குதா செல்லக்குட்டிக்குன்னு ஏதாவது சாப்பிடக் கொடுப்பாங்க இல்லியா?ஒங்க எல்லாரோட அம்மாவும் நீங்க பசிக்குதுன்னு சொன்னா ஏதாச்சும் சாப்பிடக் கொடுப்பாங்கள்ள?அது மாதிரிதான் எல்லா விலங்குகளோட அம்மாவும் சரி,எல்லா பறவைகளோட அம்மாவும் சரி,எல்லா பூச்சி புழுக்களோட அம்மாவும்சரி தன்னோட கொழந்த பசிக்குதுன்னு சொன்னா ஒடனே எதுனாச்சும் சாப்பிடக் கொடுப்பாங்க.ஆனா பாவம் இந்த குரங்கு குட்டிதான் அம்மாவோட கோச்சிக்கிட்டு தனியா வந்திடுச்சே இப்ப இது பசிக்குதுன்னா யார் சாப்பிடக் கொடுப்பாங்க?அதுக்கு பசி தாங்க முடில.ம்ம்ம்ம்ம்..ம்...ம்...ம்..பசிக்குது..எனக்கு பசிக்குது..அம்மா..அம்மா அப்டின்னு அழ ஆரம்பிச்சிது.அதோட அம்மா என்ன பக்கத்துலயா இருக்காங்க ஒடனே சாப்படக் கொடுக்க?

இப்ப குட்டிக் கொரங்குக்கு அம்மா மேல இருந்த கோவம்லாம் போயிடிச்சு. அதுக்கு அம்மாட்டப் போகணும்ன்னு தோணிச்சு.சரி அம்மாட்ட போகலாம்ன்னு நெனெச்சப்போ அதுக்கு எப்பிடிப்போகணும்ன்னு வழி மறந்து போச்சு.அப்பிடியும் இப்பிடியுமா ஓடி ஓடி போச்சு ஆனா பாவம் அதுக்கு எப்பிடி போகணுன்னு தெரில.அதுக்கு பயம் வந்திடிச்சு.பயங்கரமான பசி வேற..ஓன்னு அழ ஆரம்பிச்சிடிச்சு.அம்மா..அம்மான்னு தேம்பி தேம்பி அழுதிச்சி.அதுனாலதான் குட்டிப் பசங்களா நீங்க யாரும் அம்மாட்டியோ அப்பாட்டியோ சொல்லாம தனியா எங்கியிமே போகக் கூடாது..சரியா?..

monkeyசரின்னு சொல்றீங்களா..வெரி குட்.

கொரங்கு குட்டி அழுகிட்டே இப்பிடீ நடந்து கிட்டே வந்துச்சு.அப்ப ஒரு எடத்துல ஒங்களமாரி குட்டிப் பசங்கள்ளாம் கிரிகெட் வெளையாடிக்கிட்டு இருந்தாங்க.அவங்க இந்த குட்டிக் கொரங்க பாத்ததும்ஹோ..ஹோன்னு சத்தம் போட்டுக்கிட்டே அத வெரட்டினாங்க.குட்டிக் கொரங்கு பயந்துகிட்டே ஓடி ஒரு மரத்துல ஏறிகிடிச்சு.அந்த மரம் ஒரு வீட்டோட தோட்டத்துல இருந்திச்சி..அந்த குட்டிக் கொரங்கு மரத்துல ஏதாவது பழம் கிடைக்குமா சாப்பிடன்னு பாத்துச்சி.ஊகூம்..அது ஒரு வேப்பமரம்.அதுல வேப்பழம் கூட இல்ல.அப்ப அந்த தோட்டமிருந்த வீட்டுலேந்து கம கமன்னு தோசையோட வாசனையும் மசாலா வாசனையும் அடிச்சிச்சு.ஒங்களுக்கெல்லாம் மசால் தோச புடிக்குமில்ல?அந்த குட்டிக்குரங்குக்கு வாசன தாங்க முடில.இன்னும் ரொம்ப பசிக்க ஆரம்பிச்சிது.அது மெதுவா மரத்துலேந்து எறங்கி அந்த வீட்டோட கிச்சன் இருக்கில்ல அந்த கிச்சன் ஜன்னல்ல  வந்து ஒக்காந்திச்சு.கிச்சன்ல தோச வார்க்குர(சுடுர) அம்மா இந்த குட்டிக் கொரங்க பாக்கல.அவங்க தோசய வாத்து வாத்து ஒரு தட்டுல போட்டுக்கிடே இருந்தாங்க.இந்த குரங்கு ரொம்ப ஏக்கமா ஆசையோடதோசையையே பாத்துக்கிட்டு இருந்திச்சு.அப்ப ..அம்மா ஸ்கூலுக்கு நேரமாயிடுச்சு அம்மான்னு சொல்லிக்கிட்டே ஒங்கள மாரி ஒரு குட்டிப் பையன் கிச்சனுக்கு வந்தான்.அவ இந்த குட்டிக்கொரங்க பாத்துட்டு..அம்மா..அம்மா..ஜன்னல்ல கொரங்கும்மான்னு கத்திகிட்டே அத ச்சூ..ச்சூன்னு வெரட்டினான்.குட்டிக்கொரங்குக்கு பயமா இருந்திச்சு.ஆனா அந்த பையனோட அம்மா ரொம்ப நல்லவங்க.ஏய்..சதீஷ் பாவம்டா..அந்த கொரங்கு..பாக்கரொம்ப குட்டியா இருக்கு..அதுக்கு பசிக்கிதோ என்னவோ?வெரட்டாத....இரு அப்பிடின்னி சொல்லிக்கிட்டே ஒரு தோசய எடுத்து ஜன்னல்ல வச்சாங்க. ஆசையோட லவுக்குன்னு எடுத்து லபக்..லபக்குன்னு சாப்பிட்டிச்சு அந்த குட்டிக் கொரங்கு.ஷ்ரீக்..ஷ்ரீக்ன்னு சத்தம் போட்டுக்கிட்டே (தேங்க்ஸ் சொல்லுதாம்)ஜன்னல்லேந்து கீழ குதிச்சிது.அதுக்கு பசி தீந்திடிச்சு.தூக்கமா வந்திச்சி.அப்பிடியே ஒரு மரத்தடில படுத்து தூங்கிடிச்சி.

கொரங்கு குட்டியோட அம்மா கொரங்கும் அப்பா கொரங்கும் குட்டிய காணுமேன்னு அழுகிட்டே எங்கபாத்தாலும் தேடி அலஞ்சுதுங்க பாவம்.

ந்த குட்டிக் கொரங்கு இந்த வீட்டுக்கு வந்து ஒரு வாரம் ஆயிடிச்சி.இப்ப குட்டிக்கொரங்கும் அந்த வீட்டுப் பையன் சதீஷும் ரொம்ப ஃப்ரண்ட் ஆயிட்டாங்க.குட்டிக் கொரங்கு அம்மாவ னெனச்சு அழும்போதெல்லாம் சதீஷ் அழாத..அழாத குட்டிக்கொரங்கே..ஒங்கம்மா வந்துடுவாங்கன்னு சொல்லுவான்.இப்ப அந்த வீட்டுல இருக்குற எல்லாருக்கும் குட்டிக்கொரங்க ரொம்ப புடிச்சிப்போயிடுச்சு..அத எல்லாரும் ரெங்கா ரெங்கான்னு பேர்வெச்சு கூப்பிட ஆரம்பிச்சாங்க.

இப்பிடீ கொஞ்ச நாள் போச்சு.ஒரு நாளைக்கு என்ன ஆச்சு தெரியுமா?வீட்டுலஇருந்த எல்லாரும் சொந்தக்காரங்க வீட்டு கல்யாணத்துக்குப் போய்ட்டாங்க.குட்டிக் கொரங்கு மட்டும் தனியா இருந்திச்சி.ராத்திரி மணி ரெண்டு இருக்கும் குட்டிக் கொரங்குக்கு தூக்கம் வரல.அம்மாவ நெனச்சு அழுதுக்கிட்டே படுத்துக்கிட்டு இருந்திச்சு.அது எங்க தெரியுமா படுக்கும்..தோட்டத்துல வீட்டு ஒரு ரூமோட ஜன்னலுக்கு பக்கத்துல படுக்கும்.குட்டிக்கொரங்கு அப்பிடி தூக்கம் வராம படுத்துக்கிட்டு இருந்தப்ப அது படுத்திருந்த ரூம் ஜன்னல்லேந்து ஏதொ சத்தம் கேட்டுச்சி.இங்கியும் அங்கையும் வெளிச்சம் போய்ட்டு போய்ட்டு வந்திச்சி..இதபாத்த குட்டிக் கொரங்கு எழுந்து ஒக்காந்திச்சி.அதுக்கு ஏதோ சந்தேகமா இருந்திச்சி.என்ன செய்யலாம்ன்னு யோசன பண்ணிச்சி.மெதுவா வீட்டு வாசலுக்கு வந்திச்சு.வாசக்கதவோட பூட்டு ஒடஞ்சு கீழ கெடந்துது.அதுக்குப் புரிஞ்சு போயிடுச்சு.யாரோ திருட்டுப் பய திருடிக்கிட்டுப் போக உள்ள வந்திருக்கான்னு.சட்டுன்னு வாசக்கதவ இழுத்து தாப்பா போட்டிச்சு.கிடு கிடுன்னு தான் தினமும் படுக்கும் இடத்துக்கு வந்திச்சு.அதுக்குமேல என்ன செய்யரதுன்னு அதுக்குப் புரியல. அப்ப அந்த திருடன் எதுக்காகவோ அவன் திருடிக்கிட்டிருந்த ரூமோட ஜன்னல் கதவ தொறந்தான்.சட்டுன்னு குட்டிக்கொரங்கு என்ன செஞ்சுது தெரியுமா அந்த ஜன்னலோட கம்பிக்கு இடுக்கால உள்ள தாவி குதிச்சிடுச்சு.அது குட்டிதானே அதால கம்பிீ இடுக்குல நுழைய முடிஞ்சிது.அந்த குரங்குகுட்டி நெனெச்சது சரிதான்.அங்க திருடன் ஒருத்தன் பீரோவுலேந்து நிறைய தங்க நகைங்க கட்டுக் கட்டா பணம் எல்லாத்தியும் ஒரு பையில போட்டு கட்டிக்கிட்டு இருந்தான்.திடீர்ன்னு ஒரு குரங்கு உள்ள பாஞ்சதும் பயந்து போனான்.ச்சூ..ச்சூன்னு வெரெட்டினான்.

ஆனா குட்டிக் கொரங்கு பயப்படல ஓடவும் இல்ல.அந்த திருடன் மேல பாஞ்சிது.அவன கடிக்க ஆரம்பிச்சிது.ஒடம்பு முழுக்க பிராண்டிச்சு.அவன் ஐயோ   ஐயோன்னு கத்துனான்.அவுனும் தான் கொண்டுவந்திருந்த கத்தியால குட்டிக்கொரங்க காயப் படுத்தினான்.குட்டிக்கொரங்கு ஒடம்புலேந்து ரத்தமா கொட்டிச்சு.சட்டுன்னு அது திருடன் மேலேந்து குதிச்சிது.கண்ணு இமைக்கும் நேரத்துக்குள்ள அந்த ரூமுலேந்து வெளில போயி அந்த ரூம் கதவ பட்டுன்னு தாப்பா போட்டிடுச்சி.திருடனுக்கு தேளு கொட்டின மாரி ஆயிடிச்சு.இனிமே தன்னால தப்பிக்க முடியாதுன்னு அவனுக்கு புரிஞ்சி போச்சு.

குட்டிக்கொரங்குக்கு காயத்தால ஒடம்பு ரொம்ப வலிச்சிது.ஆனாலும் அது பொறுத்துக்கிட்டு பேசாம ஒக்காந்து இருந்திச்சு.காலம்பர பொழுது விடிஞ்சதும் ஹால்ல இருந்த ஜன்னல் கண்ணாடிய ஒடச்சிக்கிட்டு வெளியே வந்திச்சி.ஏன்னா அதுதான் வாசக் கதவ வெளியே தாப்பா போட்டிடுச்சே.

வெளியே வந்த குட்டிக்கொரங்கு னேரா போலீஸ் ஸ்டேஷனுக்கு போச்சு.ஒடம்பெல்லம் ரத்தமா கொரங்குகுட்டி வரத இன்ஸ்பெக்டர் பாத்தாரு.அவருக்கு ஏதோ விஷயம் இருக்குன்னு தோணிச்சு.

குட்டிக்கொரங்கு அவர பாத்து ஷ்ரீக்..ஷ்ரீக்குன்னு கத்திக்கிட்டே அவரோட பேண்ட்ட புடிச்சி இழுத்திச்சு.அந்த இன்ஸ்பெக்டர் ரொம்ப நல்லவர்.அதுனால அவர் கொரங்க வெரட்டாம ரெண்டு மூணு போலீஸ அழைச்சுகிட்டு குட்டிகொரங்கு பின்னாலயே போனாரு.

குட்டிக்கொரங்கு அழைச்சிக்கிட்டுப் போன வீட்டு வாசப்படிகிட்ட பூட்டு ஒடன்சி கிடக்கிறதப் பார்த்த இன்ஸ்பெக்டருக்கு மேட்டர் என்னன்னு புரிஞ்சி போச்சு.தாப்பாள தொறந்துகிட்டு இன்ஸ்பெக்டர், மூணு போலீஸ்காரங்க குட்டிக்கொரங்கு எல்லோரும் உள்ள போனாங்க.கொரங்குகுட்டி திருடன் இருந்த ரூமுக்கு முன்னாடி போய் ஷ்ரீக்..ஷ்ரீக்குன்னு கைய காட்டி கத்திச்சு.துப்பாக்கிய நீட்டிக்கிட்டே இன்ஸ்பெக்டர் உள்ளே நுழைய மூணு போலீஸும் பின்னாடியே போனாங்க.போலீஸ பாத்ததும் ரெண்டு கையையும் மேலே தூக்கினான் திருடன்.அவனைப் புடிச்சிடிச்சி போலீசு.

அந்த வீட்டுல மேஜை மீது போன் இருந்திச்சி.சின்ன நோட்டுல நிறைய போன் நம்பருங்க இருந்துது.

வீட்டு வாசல்ல மருதனாயகம் அப்பிடின்னு பேரு பலக இருந்தத இன்ஸ்பெக்டர் உள்ள நுழையரப்ப  பாத்திருந்ததால அந்த பேருள்ள நம்பருக்கு போன் செஞ்சாரு.

ங்களோட வீட்டுல நடக்கவிருந்த கொள்ளைய ரொம்ப புத்திசாலித்தனமாவும்,சாமர்த்தியமாவும் தடுத்த குட்டிக்கொரங்க அந்த வீட்டச்சேர்ந்த எல்லாரும் பாராட்டினாங்க..அத ஆளாளுக்குக் கொஞ்சினாங்க.போலீஸ் டிபார்ட்மெண்ட்டே குட்டிக்கொரங்க பாராட்டிச்சு. எல்லா தினசரி பத்திரிகையிலும் சரி.எல்லா டிவி சேனல்களிலும் சரி குட்டிக்கொரங்கு ரெங்காதான் ஹீரோ.

சீக்கிரமே எப்பிடியோ குட்டிக்கொரங்கோட அம்மாவும் அப்பாவும் ரெங்காவ தேடி வந்துட்டாங்க.

அம்மாவையும் அப்பாவையும் பாத்த கொரங்குகுட்டிக்கு ரொம்ப சந்தோஷம்.அதோட சந்தோஷத்தப் பாத்து அந்த வீட்டுல எல்லாருக்கும் சந்தோஷம்.ஆனாலும் குட்டிக்குரங்கு ரெங்கா தங்கள விட்டுப்

பிரிஞ்சிடுமேன்னு ரொம்ப வருத்தம் அவங்க எல்லாருக்கும்.அம்மா குரங்கு அப்பாகுரங்கு குட்டிக்குரங்கு மூணுக்கும் அவங்க வீட்டுல விருந்து வெச்சாங்க.ரொம்ப ரசிச்சு ருசிச்சு சாப்ட்டுச்சி மூணு குரங்கும்.தங்களோட கொழந்த குட்டிக் கொரங்கோட ரெண்டு குரங்கும் கிளம்பும்போது எல்லாருக்கும் அழுக வந்திடுச்சி.குட்டிக்கொரங்கு ரெங்காவுக்கும்தான்.அடிக்கடி வாங்க அப்பிடின்னு அதுங்ககிட்ட எல்லாரும் சொன்னாங்க. அதுங்களும் சரின்னு சொல்ரமாதிரி ஷ்ரீக்..ஷ்ரீக்குன்னு சொல்லிச்சுங்க.எல்லாரும் கைய அசச்சு டாடா..பைபை..சொன்னாங்க.அந்த மூணு குரங்கும்

கண்ணுலேந்து மறையும் வர பாத்துக்கிட்டே நின்னாங்க எல்லாரும்..

குட்டி பசங்களா கத புடிச்சிருக்கா ஒங்க எல்லாருக்கும்? ரொம்ப புடிச்சிருக்கா.. ரொம்ப தேங்க்ஸ்..

ரொம்ப தேங்க்ஸ்...

கதைய படிச்ச உங்களுக்கு தேவர் பிலிம்ஸ் படம் பாத்த எஃபெக்ட் வந்துச்சா?எப்பிடியோ உங்களுக்கு கதை புடிச்சா சரி..குட்டீஸ்..மற்றும் கொஞ்சம் பெரியவங்களே  கதை  எப்பிடிகீது ?நன்றி

{kunena_discuss:875}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.