(Reading time: 2 - 3 minutes)

பரிகாரம் - சித்ரா

King

துவும்  திருவாளத்தான்  மற்றும் ராஜாவுக்கு  இடையே  நடக்கும் கதைத்தான் .

ராஜாவின்  அம்மா உடம்புக்கு முடியாமல் தன் வாழ்கையின் இறுதி கட்டத்தில் இருந்தார்கள் .ராஜா அவர் அம்மாவுடைய கடைசி ஆசை  என்னவென்று கேட்க , தனக்கு ஒரு மாம்பழம்  வேண்டும் என்றார். 

அவருக்கு மாம்பழம் வாங்க வென்று நாலா பக்கமும்  ஆட்கள் பறந்தனர் ,ஆனாலும் அவர்கள் மாம்பழத்துடன் வரும் முன்னே அந்த அம்மாவின் உயிர் பிரிந்தது,ராஜாவுக்கு மிகுந்த மன  உளைச்சல் ஏற்பட்டது , ஆதலால் சில அந்தணர்களை அழைத்து அவர் அம்மாவின் ஆத்மா சாந்தி அடைய ஒரு வழி  கேட்டார் , இந்த சந்தர்ப்பத்தை  தவறாக பயன் படுத்த எண்ணிய அவர்கள் , ராஜாவிடம் ஆளுக்கொரு  தங்க மாம்பழம்  செய்து கொடுத்தால்  தோஷம் நீங்கி விடும் என்றனர் .

ராஜாவும் அது போல செய்து அவர்களுக்கு கொடுத்து மகிழ்தார் .

தை கேள்விப்பட்ட திருவாளத்தான் அவர்களுக்கு பாடம்  கற்பிக்க எண்ணி    தகுந்த சந்தர்பத்துக்கு  காத்திருந்தான் . ஒரு நாள் அவன் அம்மாவும் மரணம்  அடைந்தார் , உடனே அதே அந்தணர்களை தன்  வீட்டிற்க்கு  அழைத்தான் ,,முதலில் அவர்களுக்கு விருந்து படைத்தான் , அடுத்து அவர்களை ஒவ்வொருவராக  ஒரு  ரூமுக்கு தனியே அழைத்து போய் , சூட்டுகோல்  போட்டு அனுப்பினான் .அவர்கள் இதை  அரசரிடம் போய் முறை இட்டனர் , அரசரும் திருவாளத்தானை  அழைத்து  விசாரித்தார் .

அவன் கூறிதாவது .... அரசே  என் அம்மாவிற்கு காக்க வலிப்பு நோய் உண்டு , அன்றும் அது வந்தது , அதற்கு சூட்டு கோல்  போட்டு இழுத்தால்  சரி ஆகி விடும் , ஆனால்  அப்படி நான்  போடும் முன்னே அம்மாவின் உயிர் பிரிந்தது , அதனால் தான்  அவர்களை அழைத்து பரிகாரம் செய்தேன் என்றன் அப்பாவியாக .

ராஜாவுக்கும் ,அந்த அந்தணர்களுக்கும்  தாங்கள் செய்த தவறு புரிந்தது, அவர்களும் இது போல் தவறை  இனி ஒரு போதும் செய்வதில்லை  என்று வாக்கு கொடுத்தனர் , ராஜாவும் தன மூட நம்பிக்கையை  விட்டார் . 

*Image used for illustration only!!!

{kunena_discuss:875}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.