(Reading time: 10 - 20 minutes)

சின்னுவுடன் ஒரு நாள் - ஜான்சி

ஹாய் குட்டீஸ், எல்லோரும் நல்லாயிருக்கிறீங்களா?.

நான் மறுபடியும் ஒரு கதையோடு உங்களைச் சந்திக்க வந்திருக்கிறேன். 

இன்றைக்கு நான் சொல்லப் போகும் கதை வனவூர் என்னும் இயற்கை எழில் கொஞ்சும் அழகிய ஊரில் இருக்கும் ராஜூ என்னும் குட்டிப் பையன் பற்றியது. என்னது ராஜூவா? அப்போ சின்னு யாருன்னு கேட்கறீங்களா ம்ம்...நீங்க எல்லோரும் ரொம்ப ஸ்மார்ட் தான். சின்னு பற்றி கொஞ்ச நேரம் கழித்துச் சொல்றேன் சரியா...........

Monkeyராஜூ எட்டு வயது சுட்டிப் பையன் (ரைமிங்க் நல்லா இருக்கில்ல....) அவன் அம்மாக்கும் அப்பாக்கும் அவன் ரொம்ப செல்லம் ....ம்ம் உங்களே மாதிரிதான். அப்பாக்கிட்ட மட்டும் கொஞ்சம் பயப்படுவான் அம்மா பேச்சு சுத்தமா கேட்கிறதே இல்லை....இதுவும் கூட உங்களே மாதிரிதான் இல்ல..

அவனோட அம்மாவிற்க்கு அவனைக் குறித்து எப்பவுமே கவலை அது ஏன்னா அவன் தன்னைப் போல சின்னப் பசங்கள் கூட கிரிக்கெட், கோலி,பம்பரம்னு விளையாடாமல் அந்த காட்டில அலையும் ஏதாவது பூச்சி, புழு, பறவை பின்னால போய்க் கொண்டிருப்பான்.

அவர்கள் ஊர் ஒரு மலையடிவாரத்தில் அமைந்து இருந்தது, அங்கே கொடிய மிருகங்கள் உலவுவதாக அடிக்கடி செய்திகள் வரும். மலையின் அந்தப் பக்கம் ராட்சதர்கள் இருப்பதாகவும் கூடச் சொல்லிக் கொள்வார்கள் அது உண்மையோ பொய்யோ தெரியாது ஆனால் பொதுவாக அங்கு யாரும் செல்வதில்லை. அதனால் அம்மா ராஜூவை அதிக தூரம் செல்ல அனுமதிப்பது கிடையாது.

ஆனால் ராஜூவிற்கு பயம் என்பதே கிடையாது, அம்மா சொல்கிற அறிவுரையும் அவன் மண்டையில் ஏறாது. தன் போக்கில் காட்டில் அலைவதும், புழு, பூச்சிகளைப் பிடித்து வருவதும் அவன் வழக்கம்.ஒரு நாள் பெரிய புழு வகை என நினைத்து ஒரு சின்னப் பாம்பை கையில் பிடித்துக் கொண்டு வந்து அம்மாவிடம் காண்பித்தான், அம்மா பயந்து நடுங்கி அதை அப்புறப் படுத்துவதற்க்குள் ஒரு வழியாகிவிட்டது. மற்றொரு நாள் கவண் கல்லெறிந்து புறாவையோ வேறு ஏதோ பறவையோ கொண்டு வருவான் இதுவே அவன் வழக்கம், இப்படி ஒரு பிள்ளையை வைத்துக் கொண்டு அவங்க அம்மா கவலைப் படாமல் இருந்தால் தான் ஆச்சரியம்.

தான் சொல்வதை கேட்காமல் நடந்துக் கொள்வதால் அம்மா இவன் செய்கின்றதை பார்த்து தினம் பயந்துக் கொண்டு இருப்பார்கள்.அவனை எப்போதும் தன்னுடனே வைத்துக் கொள்வார்கள். ஆனால், மதியம் அம்மா கண் அசரும் நேரம் பார்த்து அவன் எப்படியாவது வெளியே சென்று விடுவான்.

ப்படித்தான் ஒரு முறை அவன் அம்மா மதியம் நன்கு தூங்கியவுடன் சத்தம் எழுப்பாமல் வீட்டை விட்டு வெளியேறி என்ன செய்யலாம் என்று பார்த்துக் கொண்டிருந்தான். அவன் நண்பர்கள் பாலு மற்றும் ராமு அவனை விளையாடக் கூப்பிட்டார்கள் அவனுக்கு அவர்களுடன் விளையாட விருப்பமில்லை அதனால் அப்படியே அடர்ந்தக் காட்டின் பக்கமாக முன்னேறிச் சென்றுக் கொண்டிருந்தான். வழக்கமாக காணப்படும் பறவைகள், அணில்கள் கூட ஏனோ இன்று அவன் கண்ணில் படவில்லை. இன்னேரம் அவைகளும் தூங்குகின்றனவா என்ன என்று எண்ணிக் கொண்டு இன்னும் முன்னேறியவனாக காட்டின் உள்ளேச் சென்றுக் கொண்டிருந்தான். அங்கே அவன் ஒரு குரங்கைப் பார்த்தான். அது அப்போது மரத்திலிருந்து பழம் ஒன்றைப் பறித்து தின்றுக் கொண்டிருந்தது.அந்தக் காட்டில் எத்தனையோ முறை அவன் அலைந்திருந்தாலும் அதற்கு முன்னால் ஒரு போதும் குரங்கை பார்த்திருக்காததால் அவனுக்கு அதைப் பார்த்து மிகவும் ஆச்சரியமாக இருந்தது.

" இவனுக்கு வாலு மட்டும் தான் இல்லை செய்யறது எல்லாம் குரங்கு சேட்டை" என்று அவன் அம்மா அடிக்கடி அவனை புகழ்ந்துச் சொல்வது (?!!) கேட்டு, கேட்டு ரொம்ப நாளாக குரங்கை பார்க்க அவனுக்கு ஆர்வமா இருந்தது. இப்போது நேரிலேயே பார்க்க கிடைக்கவும் அவனுக்கு சந்தோஷம் தாங்கவில்லை.உடனே அதன் கிட்டே போய்,

"ஹாய் என் பேர் ராஜூ உன் பேர் என்ன?"ன்னு கேட்டான். 

அது முதலில உர்ருன்னு முறைச்சாலும் கூட கொஞ்ச நேரம் கழித்து,

"என் பேர் சின்னு நீ இங்கே எங்க காட்டில என்ன செஞ்சுகிட்டு இருக்கிறே?'ன்னு கேட்டது.

அதற்கு ராஜூ," நீ ஏன் கோபமா பதில் சொல்றே? நான் உன் கிட்ட பேசின மாதிரி நீ என் கிட்ட ஏன் நல்லா பேச மாட்டேங்கிற?... என்றான்.

"நாங்க உங்க ஊருக்கு வந்தா நீங்க எல்லோரும் எங்களை கல்லை விட்டு எறிந்து விரட்டுவீங்க...நாங்க மட்டும் உங்க கிட்ட அன்பா பேசனுமா? நல்லா இருக்கு உங்க நியாயம். இது எங்க காடு பேசாம ஓடிப் போயிடு......இப்பல்லாம் நீங்க காட்டையும் கூட விட்டு வைக்கிறதில்ல, எங்க இடத்திலயே வீடுப் போட்டு வந்து இருந்துகிட்டு எங்களையே விரட்டுறது. இந்த மனுஷங்க தொல்லை தாங்க முடியலைப்பா'..ன்னு சின்னு புலம்பிக் கொண்டது.

அவ்வளவு விரட்டிய பின்னும் ராஜூ அங்கேயே நிற்கவும், 'ஏய் நீ இன்னும் போகலை? என்று மறுபடியும் அதட்டியது'.ராஜூ சின்னுவிடம்,"எனக்கு உன் கூட வர்றதுக்கு ஆசையா இருக்கு. நானும் இன்றைக்கு ஒரு நாள் உன் கூட வர்றேனே பிளீஸ்னு, கெஞ்ச ஆரம்பித்தான்."சரி வா "என்று சொல்லிய சின்னு தான் சொல்கிற மாதிரியே நடந்துக் கொள்ள வேண்டும் என்று அவனிடம் சொல்லி தன்னுடன் கூட்டிச் சென்றது.

கொஞ்ச தூரம் போய் மலையில் ஏற ஆரம்பித்தனர். ராஜீ ஆர்வ மிகுதியில் முன் பின் பார்க்காமல் சின்னுவை பின் தொடர்ந்தான். கொஞ்ச தூரம் கடந்துச் சென்ற போது வழியோரம் மிகவும் கனத்த ஒரு கை அளவு பருமன் கொண்ட கயிற்றின் நீளத்துண்டு ஒன்றுக் கிடந்தது. அது ராஜூவின் உயரத்தை விட இரண்டு மடங்கு இருக்கும்.சின்னு அதை கையில் சுற்றி எடுத்து வைத்துக் கொண்டு,

" இதோ பார் ராஜூ இந்த கயிறை உன்னிடம் வைத்துக் கொள்" என்று அதை ராஜூவிடம் கொடுத்தது.அதை ராஜூவால் தூக்கவே முடியவில்லை,

"இந்த கயிறு எவ்வளவு தடியா இருக்கு நீளம் எங்க அப்பா ஹைட் அளவுக்கு இருக்கு இதை என்னால தூக்கவே முடியாது இங்கயே நாம போட்டுட்டு போயிடலாம்" என்று சொன்னான். 

சின்னுவோ இங்க பாரு இதை தூக்கிக் கொண்டு வருவதானால் என் கூட வா இல்லை இப்படியே உங்க வீட்டுக்கு திரும்ப போயிடுன்னு சொல்லி விட வேறு வழியில்லாமல் அதை தூக்கிக் கொண்டு சின்னு பின்னாலேயே செல்ல ஆரம்பித்தான்.கொஞ்ச தூரம் கழித்து வழிப்பாதையில் ஒரு பன்றிக் குட்டி வழியில் தனியே காணப் பட்டது.

"அந்த குட்டி எனக்கு வேணும் அதைத் தூக்கிக் கொண்டு வா" என்று சின்னு கூறியது.

" வேண்டாம் அதன் குட்டி நம்மிடம் இருப்பதை அம்மாப்பன்றி கண்டால் நம்மை சும்மா விடாது" என்று ராஜூ சொன்னதை சின்னு கேட்க தயாரில்லை, வேறு வழியில்லாமல் அந்த பன்றிக் குட்டியையும் தூக்கிக் கொண்டு நடக்க ஆரம்பித்தான்.

ன்னும் கொஞ்சம் தூரம் சென்றதும் ஒரு அட்டை தாள் வழியில் கிடந்தது. சின்னு அதையும் கொண்டு வரச் சொல்ல, ராஜூவோ தற்போது கயிறு, பன்றிக் குட்டி & அட்டைத் தாள் சுமந்துக் கொண்டு மூச்சிரைக்க சின்னுவின் பின்னே சென்றுக் கொண்டு இருந்தான்.

ஒரு மரம் விடாமல் தொங்கிக் கொண்டும், ஏறி தாண்டிக் கொண்டும், குதித்துக் கொண்டும் இருந்த சின்னுவைப் பார்த்தே ராஜூவுக்கு களைப்பாகி விட்டது. இப்போது அவர்கள் காட்டில் வெகு தூரம் வந்து விட்டிருந்தார்கள். அவனுக்கு பசி மயக்கம் கண்ணை சுழற்ற ஆரம்பித்தது.சின்னுவோ அவனிடம்," பொறு எனக்கு தெரிந்த ஒரு அக்கா வீடு இங்கே தான் இருக்கு உனக்கு சாப்பாடுக்கு ஏற்பாடு செய்கிறேன்" என்று சொல்லி ஒரு வீட்டிற்க்கு அழைத்துச் சென்றது.

அங்கே ஒரு அக்கா பெரிய பெரிய அண்டாக்களில் சமையல் செய்ய ஆரம்பித்து இருந்தாள். சமையல் வாசனையிலேயே ராஜூவுக்கு இன்னும் அதிகமாக பசிக்க ஆரம்பித்தது. சின்னு அந்த அக்காவிடம் போய்," அக்கா இந்த பையனுக்கும் எனக்கும் கொஞ்சம் சாப்பாடு தர்றீங்களா? ரொம்ப பசிக்குது" என்று மிக பாவம் போல கேட்டது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.