(Reading time: 6 - 11 minutes)

01. கோக்கு மாக்கு கோபாலு - ஜான்சி

Gopaalu

ஹாய் குட்டீஸ்,

உங்க எல்லோருக்காகவும் நான் ஒரு கதைச் சொல்லப் போறேன். 

ரு ஊரிலே கோபாலு கோபாலுன்னு ஒரு பையன் இருந்தானாம். அவன் எந்த செயலைச் செஞ்சாலும் அது ஏதாவது பிரச்சினையில தான் கொண்டு போய் விடும். அவனை நினைச்சு அவன் அம்மா அப்பாவுக்கு ஒரே கவலைதான். கவலைனு மட்டுமில்ல இவன் எந்த நேரம் என்ன செஞ்சு வைப்பானோன்னு உள்ளூர ஒரே பயமும் கூட.

ஒரு நாள் அவன் மட்டும் வீட்டில் தனியாக இருந்தான். என்னச் செய்வது என்றுப் புரியாமல் வீட்டில் இருந்த அரிசிப்பொரியை எடுத்து நறுக் மொறுக்கென்றுச் சாப்பிடத் தொடங்கினான். அதே நேரம் அவர்கள் ஓலைக் கூரையில் இருந்த எலியும் ஓலையைக் கடிக்க ஆரம்பித்தது. இவன் வாயில் பொரியைப் போட்டு கடிக்கையில் எலியும் ஓலையைக் கடிக்கும், இவன் அமைதியாக இருக்கும் போது எலியும் அமைதியாகி விடும்.

நறுக் மொறுக்……

கர்ச் கர்ச்.

……………………

………….

நறுக் மொறுக்……

கர்ச் கர்ச்.

……………………..

……………….

நறுக் ……

கர்ச்………. 

மொறுக்……

கர்ச். 

நறுக் மொறுக்…… நறுக் மொறுக்

கர்ச் கர்ச்……. ……….. கர்ச் கர்ச்

………

…………………

நறுக் மொறுக்……

கர்ச் கர்ச்.

நறுக் மொறுக்…… நறுக் மொறுக்

கர்ச் கர்ச்……. ……….. கர்ச் கர்ச் 

நறுக் மொறுக்…… நறுக் மொறுக்……… நறுக் மொறுக்…… நறுக் மொறுக்

கர்ச் கர்ச்……. ……….. கர்ச் கர்ச்……… கர்ச் கர்ச்……….. கர்ச் கர்ச் 

எலி தன்னை நக்கல் செய்வதாக அவனுக்கு தோன்றிவிட்டது. கையில் இருந்த பொரியை தின்ன வேண்டும் என்ற எண்ணம் மாறி அந்த எலியை கொல்லாமல் விடக் கூடாது என்ற முடிவுக்கு அவன் வந்து விட்டான்.

உடனே வீட்டிலிருந்த கிண்ணம் கிளாஸை கூரையில் எறிந்துப் பார்த்தான். ஆனால், அந்த எலி அங்கிருந்து நகருவேனா? என அவனுக்கு போக்குக் காட்டியது. கோபம் தாங்காமல் அவன் அடுப்படியில் இருந்த எறிந்துக் கொண்டிருந்த கொள்ளிக் கட்டையை பிடுங்கி கூரையில் எறிந்தான். உடனே தீ வீட்டின் கூரையில் பற்றி விடவே வீடு முழுவதும் எரிந்துச் சாம்பலானது.

வயலில் வேலைச் செய்து திரும்பிய கோபாலின் பெற்றோர்கள், வீடு இருந்த இடமே தெரியாமல் கன்னங்கரேலென்று வெற்றுச் சுவர்கள் இருப்பதைக் கண்டு அதிர்ந்தார்கள். இது தங்களுடைய மகன் வேலையாக இருக்கும் என்பதால், அவனிடம் பேசுவதும் எரிந்துப் போன அவர்கள் வீட்டின் அந்த கன்னங்கரிய சுவற்றில் முட்டுவதும் ஒன்றுதான் எனத் தெரிந்ததால் அவனிடம் ஒன்றுமே கேட்கவில்லை.

வீட்டை மறுபடிக் கட்டி ஓலைக் கூரைப் போடுவதற்கு தேவையான கம்புகளைச் சேகரிக்க அருகாமையிலுள்ளக் காட்டிற்கு செல்ல வேண்டியிருந்தது. எனவே, அடுத்த நாள் தங்கள் வயலில் இருந்த மற்ற வேலைகளையெல்லாம் விட்டு விட்டு, பக்கத்து வயல்காரரிடம் தங்கள் வயலுக்கும் சேர்த்து நீர் பாய்ச்ச சொல்லி உதவியைக் கேட்டுக் கொண்டு, கட்டுச் சோற்றைக் கட்டிக் கொண்டு புறப்பட்டனர். கோபால்  அவர்களிடம் மிகவும் அடம் பிடிக்கவே அவனையும் கூட்டிச் செல்ல வேண்டியதாயிற்று. ஆனால், ஏற்கெனவே அவன் மேல் அவர்களுக்கு கோபம் இருந்ததால்,

“எங்க கூட வர்றது எல்லாம் சரிதான் ஆனால் அங்க வந்து ஏதாவது கோக்கு மாக்கு வேலைச் செஞ்சே மகனே, முதுகு தோலை உரிச்சு புடுவேன், ஆமா” என அவன் தந்தை அவனை மிரட்டித் தான் கூட்டிக் கொண்டுப் போனார்.

அவனா அமைதியாக இருப்பது??? அதானே…….. போகிற வழியிலேயே கேள்வி மேல் கேள்வி கேட்டு அவர்களை திணறடித்துக் கொண்டிருந்தான். அவர்களும் பதில் சொல்லி சொல்லி களைத்துப் போனார்கள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.