(Reading time: 11 - 21 minutes)

கற்பனை உலகம் - ஜான்சி

ஹாய் குட்டீஸ், 

எல்லோரும் எப்படி இருக்கீங்க?........ சூப்பர்……….நானா? நானும் ரொம்பவே நல்ல இருக்கேன்.இன்னிக்கு உங்களுக்கு ஒருக் கதைச் சொல்லப் போறேன்.

ரு ஊர்ல ஒரு பாட்டியும் அவங்களோட ரெண்டு பேத்திகளும் இருந்தாங்களாம்.அவங்க வீட்டில வேற யாருமே இல்லையாம். பாட்டி ரொம்ப கஷ்டப் பட்டு வேலைச் செஞ்சுட்டு வருவாங்க, வந்து வீட்டு வேலையும் செய்வாங்க. அவங்க ரெண்டு பேத்திகள்ல மூத்த பேத்தி ரொம்பவே சோம்பேறி, ஆனா சின்ன பேத்தி சுறு சுறுப்பா பாட்டிக்கு வேலைகளில் உதவி செய்வாள்.

வீட்டு வேலையில உதவி செய்யிறதோட இல்லாம பக்கத்தில இருக்கிற கிணத்துக்குப் போய் தண்ணீர் எடுத்துட்டு வர்றதையும் அவள் வழக்கமா செஞ்சுகிட்டு இருந்தாள்.

அன்னிக்கு காலையில குளிர்காலம் என்கிறதால எல்லோரும் நல்லா கம்பளிப் போர்வை எல்லாம் போர்த்திக் கிட்டு சுகமா தூங்கிட்டு இருந்தாங்க. அப்போது தூக்கம் கலைஞ்சு எழுந்த நிலா அதான் சின்னப் பொண்ணு தன் அக்கா கலாவை எழுப்பி,

‘அக்கா, அக்கா, நாம ரெண்டு பேரும் இப்பவே போய் இன்னிக்கு தேவையான தண்ணீரை எடுத்துட்டு வந்துடலாம். இப்போ கூட்டம் இருக்காது.” என்றுச் சொன்னாள்.

“ச்சீ ப்போடி, அதெல்லாம் நான் வர முடியாது. என்ன சுகமா கனவு கண்டுட்டு இருந்தேன் அதைக் கெடுத்திட்டியே” அப்படி சொல்லி மறுபடிப் போர்த்திக் கொண்டு படுத்து விட்டாள்.

“சரி அப்போ நாமே போகலாம்” என்று புறப்பட்ட நிலா அந்தக் கிணற்றில் தண்ணியிறைக்க வழக்கமாக கொண்டுச் செல்லும் வாளி உடைந்து விட்டதால் ஒருக் குடத்தையும், வாளியைக் கட்டியிருந்த கயிற்றையும் எடுத்துக் கொண்டு தண்ணீர் இறைக்க புறப்பட்டாள்.

கிணற்றருகே சென்றதும் குடத்தின் கழுத்தில் கயிற்றைக் கட்டினாள், அவளால் அதை இறுக்கக் கட்ட முடியவில்லை. அதுவரை நீர் இறைக்க மற்றவர்கள் யாரும் வராததால் யாரிடமும் உதவி கேட்கவும் முடியவில்லை. ஏதோ தனக்கு தெரிந்தபடி கட்டி ஒரு முறை நீர் இறைத்து வீட்டில் தண்ணீரைக் கொண்டு போய்ச் சேர்த்தாள். இரண்டாம் முறை நீர் இறைக்கும் போது குடம் கிணற்றின் பாதி உயரம் வந்த பின்னர், கயிற்றின் கட்டுக்கள் நெகிழவே சட்டென்று தண்ணீரோடு கிணற்றின் உள்ளாகவே விழுந்து விட்டது.

அது ஒரு ஆழமான கிணறு , அதன் பக்கவாட்டில் உள்ளே இறங்கிச் செல்ல படிகள் உண்டு. நிலா என்னச் செய்வது எனத் தெரியாமல் பயந்துப் போய் விட்டாள். வீட்டில் இருந்த ஒரே குடம் அது தான், அதைக் காணவில்லையென்றால் பாட்டியிடம் திட்டு வாங்க வேண்டுமே என்றுப் பயந்தாள். இப்படி ஆகுமென்று தெரிந்திருந்தால் கொஞ்சம் பொழுது விடிந்த பின் எல்லோரும் வந்த பின்னர் வந்திருக்கலாமோ? என்றெண்ணியவளாய் பட படவென கிணற்றின் படிகளில் விடிந்தும் விடியாத அந்த அதிகாலை வேளையில் இறங்கினாள்.

படி கீழே போய்க் கொண்டே இருந்தது. ஆனால் அவளின் குடத்தின் சுவடேக் காணவில்லை.எப்படியாவது தேடியே ஆக வேண்டுமென அந்த கிணற்றுத் தண்ணீரினுள்ளும் இறங்கிக் கொண்டு இருந்தாள். முதலில் தண்ணீரில் முச்சுப் பிடித்து இறங்கியவளுக்கு சற்றுக் கீழேச் சென்றதும் ஆச்சரியங்கள் காத்திருந்தன.

அது என்னவென்றுக் கேட்கிறீங்களா? அந்த இடத்தில் தண்ணீரே இல்லாமல் வெட்டவேளியாக இருந்தது. முழுவதும் பனித்துளிகளாக மழைப் பொழிந்து சுற்றிலும் இருந்த மரங்களில் பச்சை நிறத்தை மறைத்து பனித்துளிகள் மின்னிக் கொண்டிருந்தன.

சற்றுத்தூரம் சென்றதும் ஒரு அழகான அரண்மனைக் காணப்பட்டது. அதனுள்ளே சென்றதும் மிகவும் வெளிச்சமாக அந்த இடம் மிக அழகாக காணப்பட்டது.

கிணற்றினுள்ளே இப்படி ஒரு அதிசயமா? என்று வியந்தவள் இனிமையான பாடல் ஒலியில் கவரப் பட்டவளாக உள்ளேச் சென்றாள். உள்ளே பாடிக் கொண்டிருந்தது மரம் பாடுகின்றதே என விழி விரித்தவள் அதன் அருகேச் சென்றாள்.

“லாலலா………….லா……..லலா..

லல லா………….லல……லா……..லல………லா..

வாருங்கள் என்னிடம் வாருங்கள்……..

 

என்னிடம் ஏராளம் முத்துக்கள் உள்ளன..

வாருங்கள் என்னிடம் வாருங்கள்……..

 

வாருங்கள் என்னை அன்பாய் அசைத்தாலே…….

நானும் அழகு அழகு முத்துக்கள் தருவேனே……….

“லாலலா………….லா……..லலா..

லல லா………….லல……லா……..லல………லா..

 

“லாலலா………….லா……..லலா..

லல லா………….லல……லா……..லல………லா..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.