(Reading time: 7 - 14 minutes)

குழந்தைகள் சிறப்பு சிறுகதை - கசப்பு நண்பனின் இனிப்பான கதை.... - ரேவதிசிவா

Veg Friends

இன்னைக்கு  உங்களுக்கு என்னோட  கசப்பு நண்பனின்  கதையதான் சொல்லப் போறேன்....அதுக்கு முன்னாடி, நீங்க  எனக்கு ஒரு சத்தியம்(அதான்  அந்த ப்ராமிஸ் பா) பண்ணனும், கதையோட  கடைசியில் நீங்களும் அவன உங்க நண்பனா ஏத்துக்கனும் சரியா? அப்பதான் நான் உங்களுக்கு கதை சொல்லுவேன்.

அட! எங்க போறீங்க? கதை வேண்டாமா.... சரிசரி சத்தியம் எதுவும் வேணாம். கதையக் கேட்டுட்டு நீங்களே! அவன உங்க நண்பனா ஏத்துக்குவீங்க, ஏனா? அவன் அவ்ளோ நல்லவன்! கதைக்கு போலாமா?

ரு நாள்,  நான் என்னோடப் பாட்டி வீட்டுக்குப் போயிருந்தேன். அங்க ஒரே குஷிதான் எனக்கு! எதுக்குத் தெரியுமா? பள்ளிக்கூடம் கிடையாது, புத்தகம் எடுத்துட்டுப் போல, பாட்டி-நான் என்ன பண்ணாலும் திட்டவே மாட்டாங்க, அங்க இருக்கும் நண்பர்களோட விளையாடலாம், தாத்தாக்கூட தோட்டத்துக்குப் போய் விளையாடலாம், அப்புறம் முக்கியமா எனக்கு எங்க தாத்தா பாட்டி ரொம்பப் பிடிக்கும்.....இதனாலயே எனக்கு பாட்டி வீட்டுக்குப் போறது  ரொம்பவும் புடிக்கும்.

என்னை மாதிரி  உங்களுக்கும் பாட்டி வீட்டுக்குப் போறதுப் பிடிக்கும்தான?

சரிசரி, நீங்க சொல்லறது  எனக்கு கேட்குதுப்பா! கத்தாதீங்க... நீங்க இப்படி கத்தினா, நான் எப்படி கதை சொல்றது?

ம்.... இதுதான் நல்ல பிள்ளைகளுக்கு அழகு..

அன்னைக்கு பாட்டி, தாத்தாவ தோட்டத்துக்குப் போய் கொஞ்சம் காய்கறிகளப் பறிச்சிட்டு வர சொன்னாங்களா, நானும் தாத்தாவோடத் தோட்டத்துக்குப் போனேன்.

அந்த தோட்டம் ரொம்ப அருமையா இருக்கும் நண்பர்களே! அங்க நிறைய காய்கறிகள் செடி இருக்கும், நிறைய மரங்கள் ...ஆஅ! பூச்செடிகள் எல்லாம் இருக்கும்பா... உங்களுக்கும் அதைப் பார்க்க ஆசையாய் இருக்குதான, நான் அடுத்த தடவை போகும்போது உங்களையும் கூட்டிட்டுப் போறேன்.

தாத்தா ஒவ்வொரு செடியிலிருந்து காய்கறிப் பறிக்க, கொஞ்ச நேரம் பையப் பிடிச்சிருந்துட்டு அப்பறம் தாத்தாகிட்ட சொல்லிட்டு தோட்டத்த சுத்திப் பார்க்கப் போனேன்...

ஒவ்வொரு செடியாப் பார்த்துகிட்டு வரும்பொழுது, தீடீர்னு பேச்சு சத்தம் கேட்க... முதல நான் திரும்பி சுத்திப் பார்க்க, யாருமே இல்லை. எனக்கு ஒரே ஆச்சிரியமாயிருந்தது, யாரு பேசறாங்க அப்படினு....

என்னப் பேயா!!!!ஹஹ்ஹா ஹாஹா.....

பேய் அப்படினு எதுவும் இல்லைனு எங்க ஆசிரியர்கள் சொல்லி இருந்ததால, நான் பேய்னு நினைக்கவும் இல்ல  பயப்படவும் இல்ல... உங்களுக்கும்  சொல்லறேன், எப்பவும் எதுக்கும் பயப்படவே கூடாது, தைரியமா இருக்கனும்...

மறுபடியும் சத்தம் கேட்கவே, நல்லா கவனிச்சப்பதான் தெரிஞ்சது, காய்கறிகள்தான் பேசிட்டு இருந்ததுனு....

அவங்க என்னை கவனிக்காம, ரொம்ப தீவிரமாகப்  பேசிகிட்டு இருந்தாங்க...

அவங்கப் பேசினத அப்படியே உங்களுக்கு சொல்றேன்....

தக்காளி: இருப்பதிலே நான் தான் சிறந்த காய்கறி. என்னை புடிக்காதவங்க அப்படினு யாருமே இல்ல. பார்க்கவும் நான் ரொம்ப  சிவப்பா அழகா இருக்கேன்.

( இப்படி தக்காளி தன்னைப் பற்றிப் பெருமை பேச, அதப் பார்த்துட்டு அமைதியா இருக்குமா? நம்ம பச்சை மிளகாய்....அதுவும் நல்லா காரம்சாரமா பேச ஆரம்பித்தது....)

பச்சைமிளகாய்: இங்கப் பாரு தக்காளி ! சும்மா பெரும பேசாதே! உன்னை சாப்பிட்டா சளிப் புடிக்கும், கீழ விழுந்தாலே நசுங்கிப் போயிடுவ.பார்க்க பசுமையான  பச்சைக் கலரா இருக்கற  நானே!  பழமான சிவப்பா மாறிடுவன்..காரமா இருந்தாலும் என்னையும்தான் எல்லாத்துக்கும் பயன்படுத்தறாங்க. அதனால ரொம்பவும் ஆணவமாப் பேசாத.

(இருவரின் பேச்சையும் கேட்டுக்கிட்டு இருந்த நம்ப வெண்டைக்காய் தன்னோட அறிவின் பெருமைய கூறத் தொடங்குச்சு...)

வெண்டைக்காய்: மூடர்கள் மாதிரி ஏன் நீங்க சண்டைப் போடறீங்க? அறிவிலும் அழகிலும் சிறந்தவன் நான்தான், என்னை சாப்பிடறவங்களுக்கு அறிவாற்றல்ல நிறைய தரேன். அதனால்  நான்தான் சிறந்த காய்கறி.

( வெண்டையோட  தற்பெருமை பேச்ச கேட்டு கத்திரிக்காய்க்கு படும் கோவம் வந்துட்டது,அதுவும் தன் பங்குக்கு பேச...

கத்தரிக்காய்: சரியான கர்வி நீ. உன்ன அரிஞ்சா பிசுபிசுனு அழுவ... அதுக்காகவே உன்னை பலபேர் வாங்க மாட்டாங்க. ஆனா, என்னை ஏழை மக்களோட நண்பன்னு சொல்வாங்க.

( கத்தரியின்  பேச்சைக் கேட்ட நம்ப  புடலங்காய் நடனமாடிக்கிட்டே பதில் பேச ஆரம்பித்தது...)

புடலைங்காய்: நீ முதல பேசறத நிறுத்து கத்தரி!  பொய் பேசறவங்களுக்கு உன்னைத்தான் எடுத்துக்காட்டா சொல்வாங்க. என்னைப் பாரு, நான்தான் நீளமான காய்கறி. அதனால நான்தான் சிறந்த காய்கறி.

(புடலைங்காயோட பேச்சைக்  கேட்ட நம்ப பூசணிக்காய் உட்கார்ந்திருந்த இடத்தவிட்டு நகராம, புடலைங்காயப் பார்த்துப் பகடி(கேலி) பேச ஆரம்பித்தது...)

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.