(Reading time: 3 - 6 minutes)

அவன் - கண்டு கொண்டதை நானும் அறிந்து கொண்டேனடி வானில் இறக்கையின்றி பறக்கிறேனடி

அவள் - என்னை உன் விழியில்  சிறை செய்து என் உயிரை விடுதலை செய்யும் மாயம்  செய்தாய்

அவன் - தொலைவதன் இனிமை
உணர்ந்தேன் உன்னுள் புதைகையிலே

அவள் - உன்னுள்  நானும்  என்னுள்  நீயும் புதைந்ததன்  விளைவு  ,நம் காதல் இன்று விருட்ஷமாய்

அவன் - விருட்ஷத்தின் வேராய் நம் காதல் நீண்டு வாழும் நம் காலம் தாண்டியும்

அவள் - அதில் பயன் பெறுவர் நம் சந்ததியரும்...

'உன் குரலில்  என் உயிர் உருகி வழியுதடா' 
இவ்வொற்றை வரியில்
அவனின் குரலால் சொக்கி
தான் மெய்மறந்து
தன் பாடல் வரியை 
மறப்பதாய் கூறி
அவனை சொக்க வைத்தால் 
அவனவளும்...

இதுவே தனிக்குரல் 
இனி ஒலிக்குமென 
அவள் கூறினதன் காரணமென
அறிந்தான் துணைவனும்....

தங்கள் பாடலால் 
விழிவிரித்து
சுற்றம் மறந்து
பார்வையில் சிறை 
செய்துக்கொண்டனர்
அவர்களின் இணையை...

பாடல் வரிகளாய் நீயும்
இசையாய் நானும் 
இசை உலகில் ஜோடிக்குரலாய்
இணைபிரியாது பயணிப்போம்
துணையாய் நான் இருப்பேன்
கண்மணியே என வாக்களித்தான்
அவள் மணாளனும் 
தன் காதல் பார்வையை
மையல் பார்வையாய்
அவள் மீது செலுத்தி...... 

{kunena_discuss:785}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.