(Reading time: 5 - 10 minutes)

சிறுகதை - இந்தா பிடி! ஒரு கோடி! - ரவை

oneCrore

ந்த அரசியல் கட்சி வேட்பாளர் தேர்வுக்குழுவின் முன், வேட்புமனு செய்திருந்த நான்குபேரும் அமர்ந்திருந்தனர்.

 நால்வரில் யாருக்கு வாய்ப்பு என்பதிலே தீவிர போட்டி!

 நால்வரிலே ஒருவர், தற்போதைய எம்.எல்.ஏ.! நான்குமுறை அந்த தொகுதியிலே தொடர்ந்து வெற்றி பெற்றவர்.

 அடுத்தவர், கட்சித் தலைவரின் மைத்துனர்!

 மூன்றாவது நபர், மாற்றுக்கட்சியிலிருந்து நான்குபேருடன் கட்சி மாறி வந்தவர்!

 நான்காவது நபர், அந்த தொகுதியில் பெருவாரியாக வாழ்கிற சாதியினரின் சங்கத்தலைவர்!

 தேர்வுக்குழுவுக்கு தலை சுற்றியது. யாரை தேர்ந்தெடுப்பது என புரியாமல் விழித்தனர்.

 அப்போது, தேர்வுக்குழு தலைவரின் கைபேசி ஒலித்தது!

 எடுத்துப் பேசினார். 

"தலைவா! போயிடுச்சி, எல்லாம் போயிடுச்சி! நாம, வேலூருக்கு காரிலே அனுப்பிச்ச பத்துகோடி ரூவா பணத்தை வழியிலே தேர்வாணையக்குழுவின் படை மடக்கி எடுத்துக்கிட்டுப் பூட்டாங்க! வருமானவரி இலாகாவுக்கும் தகவல் கொடுத்துட்டாங்க!"

 " சரி, சரி! போனை வை! இனிமே இந்தமாதிரி தகவலை நேரிலே வந்து சொல்லு! போனிலே வேண்டாம். என் வீட்டை ரெய்டு பண்ணிடுவாங்க!"

 வந்த செய்தியை மற்றவர்களுடன் பகிர்ந்துகொண்டார்.

அப்போது தேர்வுக்குழுவிலிருந்த உறுப்பினர் ஒருவருக்கு ஒரு யோசனை வந்தது.

 " இத பாருங்க! நீங்க நாலுபேருமே கட்சிக்கு வேண்டியவங்க! ஆனா, இருக்கிறதுஒரு சீட்! உங்க நாலுபேருக்குள்ளேஒரு பரிட்சை வைக்கப்போறோம். அதிலே யார் ஜெயிக்கிறீங்களோ, அவங்களுக்குத்தான் சீட்! சரியா?"

 நால்வரும் உடனேயே 'சரி' என்றனர்!

 " தேர்தல்லே, ஜெயிக்கணுன்னா, வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தாகணும்! கட்சி பணம் கொடுத்து உதவ தயாராயிருக்கு! ஆனா, அந்தப் பணத்தை வழியிலே இந்தமாதிரி பிடிபடாம எடுத்துக்கொண்டுபோக, உங்க நாலுபேரிலே யார் முதல்லே நல்ல ஐடியா தராங்களோ, அவங்களுக்குத்தான், சீட்! கிளம்புங்க! நல்ல யோசனையோட வாங்க!"

 நாலுபேரும் அடுத்த கணம் அங்கே இல்லை!

 ஒவ்வொருவரும் தங்கள் கூட்டாளிகளை அழைத்து யோசனை கேட்டனர்.

 " ஐயா! காரிலேயோ, லாரியிலேயோ, போனால்தானே பிடிப்பாங்க! டூவீலரிலே எடுத்துண்டு போயிடுவோம்!"

 " நெடுஞ்சாலையிலே போகிற எல்லா வாகனங்களையும் சோதனை போடறாங்களாம்! டூவீலரிலே போனாலும் மாட்டிப்போம்!"

 " பணத்தை பெட்டியிலே நிரப்பி நம்ம ஆளுங்க பத்துபேர் மூலமா கொடுத்தனுப்பிடலாம்........."

 " ஊரைவிட்டு ஊர் ஒருத்தன் பெட்டியை தூக்கிண்டு நடந்துபோறான்னா, சந்தேகப்பட்டு, பின்னாலேயே வந்து, கையும் களவுமா பிடிச்சிடுவாங்க!"

 " ஒரு ஐடியா! பொம்பளைங்க வயத்திலே பணத்தை வைச்சுக் கட்டி காரிலே அனுப்புவோம், கேட்டால் கர்ப்பமாயிருக்காங்கன்னு சொல்லிடுவோம்......"

 " உனக்கு ஐடியாவே இல்லை, எத்தனை கோடி பணம் இடம் மாறியாகணும்னு! கேட்டுக்க! இந்த தேர்தல்லே, ஏழைங்க மட்டுமில்லே, நடுத்தர வர்க்க வாக்காளர்களும், நேரிடையாகவே பணம் கேட்கிறாங்க, அதுவும் எவ்வளவுஒரு ஓட்டுக்கு பத்தாயிரம் ரூவா!

 ஒரு தொகுதியிலே மொத்தம் மூணுலட்சம் வாக்காளர்கள் இருந்தால், வாக்களிக்கிறவங்க ரெண்டு லட்சம் பேர்னு வைச்சிப்போம். அதிலேஒரு லட்சம் பேருக்கு கொடுத்தால்தான் ஜெயிக்கமுடியும். ஒரு ஆளுக்கு பத்தாயிரம்னாஒரு லட்சம்பேருக்கு எத்தனை கோடி தேவை? அத்தனை பணம் இங்கிருந்து நாற்பது தொகுதிக்கும் போயாகணும்! என்ன வழி இருக்கு?"

 நெடுநேரம் யோசித்துவிட்டு ஒருவர் மிகுந்த உற்சாகத்துடன் பேசினார்.

 " ஒவ்வொரு தொகுதியிலேயும் உள்ள வியாபாரிங்களை நம்ம கைக்குள்ளே போட்டுக்குவோம். அவங்க பேருக்கு, வியாபார சம்பந்தமா, பணம் அனுப்பறாப்பல, பேங்க் மூலமா பணத்தை டிரான்ஸ்ஃபர் செய்திடுவோம். யாருக்குமே தெரியாது, தெரிந்தாலும், வியாபாரத்துக்குன்னு சொல்லிடுவோம். எப்படி இந்த ஐடியா?"

 மற்றவர்கள் சிரித்தார்கள். 

" தேர்வாணைக் குழுவுக்கு இது தெரிந்துதான், பேங்க்மூலமா பெருந்தொகை டிரான்ஸ்ஃபர் ஆச்சுன்னா, பேங்க் அதிகாரிங்க வருமானவரி இலாகாவுக்கு தகவல் சொல்லணும்னு உத்தரவு போட்டிருக்காங்க! மீறினா பேங்க் அதிகாரி வேலைக்கே உலை வைச்சிடுவாங்க! தவிர, நம்ம பணம் எல்லாம் கறுப்புப் பணம்! அதை பேங்க் மூலமா அனுப்பமுடியாது........"

 சோர்ந்துபோய், அனைவரும் மௌனமாயினர்!

 திடீரென ஒருவர் குதூகலமாக எழுந்து நின்று கைகளை உயர்த்தி 'சீட் நமக்குத்தான்' என்று கத்தினார்.

 " வழி தெரிஞ்சிடுச்சி! ரொம்ப சுலபமான வழி!"

 " என்ன? என்ன? சொல்லு!"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.