(Reading time: 15 - 30 minutes)
Couple

சிறுகதை - ஏழையின் வாழ்வில் ஒரு நாள் - ரவை

சுகுணா நல்ல உடையணிந்து படிப்பு, பிறப்பு, தொடர்பான சான்றிதழ்களை சரிபார்த்து எடுத்துக்கொண்டு, மறைந்த தந்தையின் புகைப்படத்தின்முன் நின்று, கையெடுத்துக் கும்பிட்டு கண்ணீர் விட்டாள்.

 " அப்பா! நீ என்னையும் அம்மாவையும் அனாதையாக்கிவிட்டு மேலே போய், பதினைந்து ஆண்டுகள் ஆகிவிட்டன.

 நீ பிரிந்தபோது, நான் ஐந்து வயது சிறுமி! விவரம் தெரியாத பருவம்! என்னை படிக்கவைத்து ஆளாக்குவதற்கு, அம்மா பட்ட கஷ்டத்தை தெருநாய்கூட அனுபவித்திருக்காது.

 நீ சாதிவிட்டு, வேற சாதியிலே பிறந்த, அம்மாவை காதல் திருமணம் செய்துகொண்டாய், சமுதாயத்தை எதிர்த்து நின்று வென்றாய்.

 அந்த சமுதாயம், நீ போனபிறகு, எங்களை பல விதங்களில் பழி வாங்குகிறது. பாவம், அம்மா! என்ன செய்வாள்?

 சோறில்லாமல் பட்டினி கிடந்திருக்கிறாள். என்னையும் தன்னையும் காப்பாற்றிக் கொள்ள, வீடுகளில் சமையல் வேலைக்கு சென்றபோது, எத்தனை எத்தனை பலவந்தங்கள், பரிகாசங்கள், அவமானங்கள், அப்பப்பா! சொல்லி மாளாது!

 அவளுடைய சுமையை பகிர்ந்துகொள்ளவே, நான் நன்றாகப் படித்து பட்டதாரி ஆகிவிட்டேன். இதோ, இப்போது வேலைக்கான நேர்காணலுக்குச் செல்கிறேன், அப்பா! இது பேங்க வேலை! இது கிடைத்தால், அம்மா இனி வேலைக்குப் போகவேண்டாம். என் வருமானத்திலேயே குடும்பச் செலவுகளை சமாளித்துவிடலாம். இந்த வேலை எனக்கு கிடைக்க வேண்டுமென ஆசிர்வதியுங்கள், அப்பா!" என்று கண்ணீர் மல்க வணங்கினாள்.

 புகைப்படத்தை தொட்டு கண்ணில் ஒற்றிக்கொண்டு வணங்கியபோது, புகைப்படத்தில் மாட்டியிருந்த பூமாலையிலிருந்து, ஒரு மலர் சுகுணாவின் தலையில் விழுந்தது!

 " அம்மா! அம்மா! எனக்கு அப்பாவின் ஆசிகள் கிடைத்துவிட்டது, இதோ பார்! என் தலையில் பூ விழுந்திருப்பதை! நிச்சயம் எனக்கு இந்த வேலை கிடைத்துவிடும். இனி நீ வீட்டுவேலைக்கு போகவேண்டாம்......"

 எனக்கூறி, தாயை இறுக கட்டியணைத்தாள்.

 தாய் தனக்குள் சிரித்துக்கொண்டு, மகளை வழியனுப்பி வைத்தாள்.

 இப்போது, புகைப்படத்தின்முன் நின்றது, தாய்!

 " ராசா! நம்ம குழந்தையை நீ எத்தனை ஆசையுடன் வளர்த்தாய். நீ உயிருடன் இருந்தவரையில், அவள் என்னிடம் இருந்ததைவிட, அதிகநேரம் உன்னுடன்தானே இருந்தாள். அவளையும் என்னையும் பிரிய உனக்கெப்படி மனம் வந்தது? எமனுடன் போராடி நீ உயிர்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.