(Reading time: 11 - 21 minutes)

சிறுகதை -  நீங்களே சொல்லுங்கள்! - ரவை

" த பாருங்கம்மா! என் கணவருக்கு எந்த கெட்ட பழக்கமும் கிடையாதே, அவருக்கு எப்படி இந்த வயதில் இருதய நோய் வந்தது, எதிர்த்த வீட்டுக் கிழவனுக்கு எல்லா கெட்ட பழக்கமும் உண்டே, அவனுக்கு வராத இந்த நோய், என் கணவருக்கு ஏன் வந்தது? என்பதையெல்லாம் பிறகு நிதானமாக யோசிக்கலாம், இப்ப உடனடியா இரண்டு மணி நேரத்திலே ஓபன் ஹார்ட் சர்ஜரி செய்தால்தான், அவர் பிழைப்பார்! உங்க உறவினர்களிடம் கலந்து பேசி முடிவை உடனே சொன்னால்தான் சர்ஜரியை செய்யமுடியும். லேட் பண்ணாதீங்க! கவுண்டரிலே, ஒரு லட்ச ரூபாய் அட்வான்ஸ் கட்டி ரசீதை கொண்டுவாங்க!

போங்க!"

 மூச்சு விடாமல், டாக்டர் பாப்பையா பேசி முடித்ததும், தாரிணி அவரிடம் எழுப்பிய சந்தேகம், " எப்படியோ பணத்தை கட்டி, உடனடியா சர்ஜரி செய்ய சம்மதித்தாலும், என் கணவர் உயிர் பிழைக்கிறதை உறுதியா சொல்ல முடியாது, ஐம்பது சதவிகிதம் தான், சான்ஸ்னு சொல்றீங்களே, டாக்டர்.......?"

 " அம்மா! நான் கடவுள் இல்லே, டாக்டர்தான்! என் அனுபவத்திலே, இந்தமாதிரி முற்றிப்போன நோயுடன், கடைசி நேரத்திலே வர்ற கேஸ்களுக்கு எந்த உத்தரவாதமும் தரமுடியாதும்மா! உங்களை உற்சாகப்படுத்துவதற்காக, நான் பொய் சொல்லத் தயாராயில்லே! எனக்கே இது சவாலான கேஸ்! டிலே பண்ணாதீங்க! கடவுளை நம்பித்தான், நானே இவருக்கு சர்ஜரி செய்யப்போறேன், நீங்களும் நம்புங்க! உங்க பதிலுக்காக, என் ரூமிலே காத்துக் கொண்டிருப்பேன், கிளம்புங்க!"

 டாக்டர் நகர்ந்துவிட்டார்.

 நாற்பதுவயதான தாரிணி, தன் நாற்பத்தைந்து வயதான கணவனரின் உயிரை காப்பாற்ற என்ன செய்வது என தெரியாமல் விழித்தாள்!

 நேற்றிரவு கணவன் சபாபதி திடீரென நெஞ்சுவலியென துடித்தபோது, தாரிணிக்கு கையும் ஓடலை, காலும் ஓடலை, ஏன் மூளையும் வேலை செய்யலை, பிரமை பிடித்து சிலையாக அமர்ந்திருந்தாள்!

 நல்லவேளையாக, பக்கத்து போர்ஷனில் வசிக்கும் பார்வதியும் அவள் கணவன் ராமனும், சத்தம் கேட்டு ஓடிவந்து பார்த்து, உடனே ஆம்புலன்ஸுக்கு போன் பண்ணி வரவழைத்து, சபாபதியை 'ஹார்ட் க்ளினிக்' கில் சேர்த்தனர்.

 உடனே சபாபதிக்கு ஆஞ்சியோகிராம் செய்து பார்த்ததில், இரத்தக் குழாயில் ஐந்து இடங்களில் ப்ளாக்குகள் இருப்பதை அறிந்தனர்.

 உடனே பிரபல ஹார்ட் சர்ஜன் பாப்பையாவை வரவழைத்தனர். அவரும் சபாபதியை

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.