(Reading time: 26 - 51 minutes)
சிறுகதை - சாரங்க் - அசிந்த்ய குமார் சென் குப்தா (சு.கிருஷ்ணமூர்த்தி)

போய்விடுவான். "கடைத்தெருவிலே ஒனக்கு ஒரு துணிக்கடை வச்சுத் தந்துடறேன்," என்ற சொல்வான் தகப்பன்.

  

"அதுக்குப் பதிலா எனக்கு ஒரு படகு வாங்கிக் குடுத்துடு. நெலத்தை விடத் தண்ணி தான் எனக்கு ரொம்பப் பிடிக்கும்," என்பான் நசீம்.

  

ஆனால் அப்பனுக்குப் படகு வாங்க வசதியில்லை. படகை வாடகைக்கு எடுத்து ஓட்டிப் பணம் சம்பாதிக்கும் அளவுக்குப் பெரியவனாகவில்லை நசீம்.

  

நசீமின் வலை அறுந்து போய் வெகு காலமாகிவிட்டது. இருந்தாலும் அதன் பாசம் அவனை விடவில்லை. அவன் ஆற்றங் கரையில் மௌனமாக மணிக் கணக்கில் உட்கார்ந்திருப்பான். கண்ணீர் அவனுடைய கன்னங்களில் வழிந்தோடும்.

  

அம்மா கஹ்ராலியை நிக்காஹ் செய்துகொள்ளப் போவதாகக் கேள்விப்பட்டான் அவன். அவர்களிருவரும் ஒரே அறையில் இருப்பார்கள். நசீமுக்கு இடம் எங்கே? வாசல் திண்ணை அல்லது புறக்கடை தான். அவனுடைய அம்மாவிடம் யாராவது "இவன் யாரு?" என்று கேட்டால், அவள் "என் முதல் புருஷனோட புள்ள," என்று சொல்வாள். யாராவது அவனை "உனக்கு யாரு சோறு போடறாங்க?" என்று கேட்டால் "கஹ்ராலி," என்று சொல்ல வேண்டும் அவன். நசீமுக்கு நெஞ்சு பற்றியெரிந்தது.

  

🌼🌸❀✿🌷

  

அங்கிருந்து சுமார் ஒரு மைல் தூரத்தில் சணல் வயல்களுக்கு அருகில் நீராவிப் படகு வந்து நிற்கும். படகுத் துறை எதுவும் கட்டப் பட்டிருக்கவில்லை. கரையிலுள்ள வாதா மரத்தின் அடித் தண்டையொட்டி, ஆனால் அதனுடன் மோதிக்கொள்ளாமல், படகு நிற்கும். படகிலிருந்து கரையைச் சேர்க்கப் படிக்கட்டை இறக்குவார்கள். படிக்கட்டின் ஒரு மூலையிலிருந்து மறு மூலைக்கு ஒரு மூங்கில் தடியைப் பிடித்துக்கொண்டு இரண்டு படகு ஊழியர்கள். பிரயாணிகள் படிகள் வழியே ஏறி இறங்குவார்கள். டிக்கெட் குமாஸ்தா வாதா மரத்தடியில் ஒரு தகரப் பெட்டியில் டிக்கெட்டுகளை வைத்துக்கொண்டு விற்பான். படகிலிருந்து இறங்குபவர்களிடமிருந்து டிக்கெட்டுகளை வாங்கிக் கொள்வான், டிக்கெட்டில்லாமல் பிரயாணம் செய்தவர்களோடு பேச்சு வார்த்தை நடத்திக் கொள்வான். பிறகு, படகுக்குள் வந்த கணக்கனிடம்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.