(Reading time: 3 - 6 minutes)

வசந்தி வாழ்வின் வசந்தம் - தனு

வசந்தி வாழ்வின் வசந்தம்

ன்று டியுசன் வகுப்பிற்கு சென்று தோழிகளுடன் வீடு திரும்பிக் கொண்டிருந்தாள் வசந்தி. சாலையோரம் தோழிகளுடன் கதை பேசியபடி நடந்து கொண்டிருந்தவள் எதிரில் பெரிய ஆண்கள் பட்டாளம் வந்து கொண்டிருந்தது. அதுவும் டியுசன் சென்று திரும்பும் பையன்கள்தான். ஆனால் பெரிய பையன்கள் போல் தோன்றினார்கள். பெண்களும் பையன்களும் ஒருவரை ஒருவர் கடந்து செல்கையில் வசந்தியின் கையிலிருந்த புத்தகம் ஒருவனின் கை பட்டு தவறியது. என்ன திமிர் இவனுக்கு என்று ஆத்திரத்தில் திரும்பியவள் எதிரில் ‘சாரி’ என்றபடி நின்றிருந்தவனின் கண்களை சந்தித்த போது ஸ்தம்பித்து நின்றாள். அவனோ இவள் பதிலுக்குக் காத்திராது கீழே விழுந்த புத்தகத்தை எடுத்தவாறே

‘இந்தாங்க வசந்தி உங்கள் புத்தகம்’ என் இதழோர புன்னகையுடன் விடைபெற்றான்.

அந்த புன்னகைமுகம் அன்றே கற்சிலையாய் அவள் மனதில் பதிந்து போயிற்று. அவ்வாறே ஸ்தம்பித்து நிள்றவளின் தோளை தோழிகள் உலுக்க சுயநினைவுக்கு வந்தாள் வசந்தி. என் பெயர் இவனுக்கு எவ்வாறு தெரிந்தது? விரித்துக்கிடந்த தன் புத்தகத்திலிருந்து தெரிந்து கொண்டிருப்பான் என ஊகித்துத் தெளிந்தாள். மறுநாள் தோழிகளின் தகவல் திரட்டிலிருந்து அவன் பெயர் ஷங்கர் எனவும் அடுத்த வருடம் இறுதித்தேர்வு எழுதப்போபவன் எனவும் அறிந்தாள். அன்றிலிருந்து அடிக்கடி அவனை சந்தித்தாள் அவள் கனவுலகில் மாத்திரம்.                                                     

ன்றிலிருந்து நான்கு வருடங்களில் இறுதித்தேர்வு எழுதிய வசந்தி கல்லூரிக்குத் தெரிவாகியிருந்தாள்;.வீட்டிலிருந்து கல்லூரி தூர இடத்தில் இருந்த படியால் அவ் கல்லூரி விடுதியில் தங்கி கல்வி கற்க வேண்டிய சூழ்நிலை. வீட்டை விட்டு பெற்றோரை விட்டு முதன்முறையாக பிரிந்திருப்பது கவலையளித்தாலும் முதல் வருட மாணவியரை தேடிப்பிடித்து கூட்டத்தோடு கூட்டமாக கல்லூரிக்குச் சென்று சேர்ந்தாள். முதல்வருட மாணவர்களை சீனியர்  மாணவர்கள் வரவேற்றார்கள். அங்கிருந்த ஒருவன் திடீரென அவள் கரம் பற்றி

‘அந்த மரத்தடியில நிக்கிற வாசு வழியிற கேஸ் அந்தப்பக்கம் போகாதே’ என வழிநடத்திய படி சென்றான். அவன் கைப்பிடி இரும்புப்பிடியாக இருக்கவே கைகளின் வலியைத் தாங்காமல் வாய் ‘ஷ்…ஆஆஆ………..’ என முணுமுணுக்க கை அவன் சிறைப்பிடியிலிருந்து விடப்பட்டது. கையை உதறியவாறே அவனைப் பார்த்தாள். விழிகள் சந்தித்த நொடி மீண்டும் ஸ்தம்பித்துப் போனாள். என்ன மிகவும் வலிக்கிறதா வசந்தி? என்றபடியே இதழோர புன்னகையுடன் விடைபெற்றான் அவன். அவன் வேறு யாருமல்ல அதே ஷங்கர் தான். இப்போது அவளுக்கு சீனியர். இன்னமும் அவனுக்கு என் பெயர் ஞாபகம் இருக்கிறதே! ஏன வியந்தவள் மறு நொடி நமக்கும் தானே அவன் பெயர் இன்னமும் ஞாபகம் இருக்கிறதே இதன் காரணம் என்ன? என சிந்தித்தவள் முன்பொரு நாள்……. அன்றே அவள் மனதில் அவன் சிம்மாசனம் இட்டு அமர்ந்துவிட்டான் என்பதை அறிந்து உள்@ர மகிழ்ந்தாள்.

வ்வாறே நாட்கள் நகர திடீரென ஒரு நாள் ஷங்கர் அவளைக் காதலிப்பதாக கூற பதில் கூற முடியாது உடல் விறைத்து நின்ற படி அவள் பார்த்த பார்வையில் என்ன புரிந்து கொண்டானோ தெரியவில்லை எதுவும் பேசாது அவ்விடம் விட்டு அகன்றான். இவ்வாறு எண்ணிக் கொண்டிருந்தவளின் கைகளை தளிர்க்கரங்களிரண்டு வருட கண் விழித்துப் பார்த்தவள் மகன் வசந்தன் அருகில் நிற்கவே அவனை அணைத்துக் கொண்டாள்.

வசந்தன் வேறு யாருமல்ல ஷங்கர்,வசந்தி தம்பதிகளின் செல்வப்புதல்வன். மூன்றே வயது நிரம்பிய குட்டிப்பையன். ஷங்கர் வசந்தி மனதை கண்களாலே படித்து அவள் வீட்டிற்கே சென்று பெண் கேட்டு அவள் பெற்றார் சம்மதத்துடன் மணம் புரிந்து இன்று வரை அவள் மனம் புரிந்து நடந்து வர வசந்தியின் வாழ்க்கை வசந்தனுடன் வசந்தமாய் வீசியது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.