(Reading time: 6 - 12 minutes)

ஒரு நாள் கைதி - மனோஜ்

ஒரு நாள் கைதி

த்தாம் வகுப்பு படித்து வரும் சூர்யா விளையாட்டு பையனாகவும் படிப்பில் ஆர்வமில்லாதவனுமாக இருந்தான். வாரவிடுமுறயன்று ஒரு நாள் காலையில் தம் கால் போன போக்கில் நடந்து செல்கையில் எதிரே சிறைச்சாலையைக் கண்டான்.

கற்பனை வளமிக்க சூர்யா உடனே சிறைச்சாலைக்குள் நடப்பவையைக் காண ஆவலுற்று உள்ளே செல்ல சித்தமானான்.

தமக்கு மிகவும் பழக்கமுள்ள நண்பர்கள் வீட்டுக்குச் செல்வதுபோல் சிறைச்சாலையின் பிரம்மாண்ட கதவுகளை யாருடைய அனுமதியின்றிக் கடந்து சென்றான். அங்கிருந்த வாயிற்காவலர் தம்மைக் கவனிக்காதது அவனுக்குச் சாதகமாக அமைந்தது.

வாசலைக் கடந்ததும் நீண்டதூரம் நீண்டுள்ள பளபளக்கும் தார் சாலையும் அதன் இருபுறமும் அசோக மரமும் சவுக்கு மரமும் ஓங்கி நின்று காலைச்சூரியனில் நனைந்தபடி காற்றோடு அசைந்து கொண்டிருந்தது. மரத்திற்கு அப்பால் இருபுறமும் படர்ந்த விளையாட்டு மைதானம் அவன் கண்களில் தென்பட்டது.

மேலும் காக்கிக் காற்சட்டையும் வெள்ளை உள் பனியனும் போட்டுக்கொண்டு ஆங்காங்கே குழு குழுவாக காவலர்கள் உடற்பயிற்சியிலும், கால்பந்து, கைபந்து, கபடி போன்ற விளையாட்டுகளிலும், துப்பாக்கி சுடுதல், கராத்தே போன்ற பயிற்சிகளிலும் ஈடுபட்டுக்கொண்டிருந்தர்கள். துப்புரவுத் தொழிலாளர்கள் அங்கும் இங்கும் கிடக்கும் குப்பைகளையும் மரச் சருகுகளையும் பொறுக்கிக் கொண்டிருந்தார்கள்.

கஜ கஜவென்று அனைவரும் சுறுசுறுப்பாய் இருந்த காலை வேளையில் அவன் கண்கள் கைதியையும் அவர்கள் அடைக்கப்பட்ட அறையையும் தேடிக்கொண்டே முன்னே கால்கள் நடைபோட்டது.

வலதுபுறம் மைதானம் முடிவடையும் இடத்தில ஒரு பழமையான கட்டிடம், அதில் ஆங்காங்கே சில கீரல்கள் சில சேதாரங்களோடும் இருந்தது. அந்தக் கட்டிடத்தின் உள்ளே சற்று உற்றுப் பார்த்தவாறு நின்ற சூர்யா சில வெள்ளை நிறக் கைச்சட்டையும், நீட் காற்சட்டையும் அணிந்துகொண்டு கைதிகள் நடமாடுவதைக் கண்டான்.

மைதானத்தையும் கைதிகளின் கட்டிடத்தையும் பிரிக்கும் வகையில் அமைந்த அந்த பெரிய மதில் சுவர் கோட்டைச்சுவர் போல் இருந்தது. அச்சுவரின் உச்சியில் உடைந்த கண்ணாடித் துண்டுகளையும் வைத்துக் கைதிகள் தப்பிக்காத வகையில் அமைத்திருந்தனர். அதைக் காணும் வரை அவனுக்கு முறைப்படி அனுமதி வந்கிவரவில்லை என்று தோன்றவில்லை.

உடனே சுதாரித்தவன் போல் தம்மைக் காவல் அதிகாரிகள் யாரும் பார்க்கமளிருக்கும் வகையில் உள்ளே செல்ல திட்டமிட்டான். இரண்டடி எடுத்து வைத்தவுடன் எதிரே இரண்டு பெண் அதிகாரிகள் வருவதைக் கண்டு நுழைவாயில் அருகே உள்ள மாடிப்படி அடியில் ஒளிந்துகொண்டான்.

சூர்யாவின் இதயம் பட படவென வேகமாக அடிக்க, பயத்தில் வியர்க்கத் தொடங்கியது. இப்படியோர் நிலையிலும் அவன் மனம் பின்வன்காமல் உள்ளே செல்லத் திட்டம் தீட்டிக் கொண்டிருப்பது அவன் ஆர்வத்தையும், அவளையும் காட்டுகிறது. அந்தப் பெண் அதிகாரிகளின் பேச்சைக் கேட்டுக் கொண்டே அசையாமல் படி அடியில் இருந்தான்.

மேடம் நாளைக்கு காலைல 702ஆ நம்பர் கைதிக்கு தூக்கு தண்டன......

நீங்க நாளைக்கு எந்த சிப்ட்ல வர்றீங்க....??

நா நாளைக்கு மதியம் தான் வருவேன் சரோஜா......

என்று அவர்கள் பேசுவது இவன் காதுகளுக்கு கேட்டுக் கொண்டே சிறிது சிறிதாய் சத்தம் மங்கத் துவங்கியது.

இப்போது அமைதி நிலவிய சூழலைக் கண்டதும் யாரும் இல்லை என்று உறுதி செய்து படி அடியில் இருந்து வெளியே வந்து மெதுவாக உள்ளே நடந்தான். அவனைக் கடந்து சென்ற பெண் அதிகரிகள் சற்று தொலைவில் நின்று பேசிக் கொண்டிருந்ததை கவனிக்காத சூர்யா நடக்கலானான்.

அந்த பெண் அதிகாரிகள் சூர்யாவைக் கண்டதும் வேகமாக உள்ளே வந்து... 

ஓய்......

யாரு டா நீ...?

இங்க எப்ப வந்த...?. எப்படி வந்த..???

என்று பளீர் குரலில் பெண் அதிகாரி ஒருவர் கேட்டுக்கொண்டே அவன் கையைப் பிடித்தாள்...

அவரின் குரல் கேட்டுப் பயந்ததோடு வியர்த்த முகத்தோடும் சட்டென்று திரும்பினான்.

ஓடிவிடவேண்டுமென்றோ துளி கூட எண்ணம் அவனுக்கு இல்லை. உடனே சூர்யா...

அக்கா....நா பக்கத்து ஏரியால இருக்கேன்...

உள்ள எப்படி இருக்குனு பாக்கலாம்னு வந்தேன்...

நா........போயிருறேன்.....என்ன வுட்ருங்க....

என்று சொல்லிக்கொண்டே அந்தப் பெண் அதிகாரியின் பிடியிலிருந்து கையை எடுக்க முயற்சித்தான் சூர்யா...

அனால் அந்த பெண் அதிகாரியோ அவன் கையை விடாது......மேலும் கேள்விகளைக் கேட்டாள்...

எப்படி டா உள்ள வந்த..?

என்று கேட்டுக்கொண்டே...அருகிலிருந்த பெண் அதிகாரியை

ஏய் சரோஜா...

ஜெயிலர் ஆறுமுகம் அண்ணன அர்ஜெண்டா இங்க வரச்சொல்லு....என்றார்...

சற்று நேரத்தில் விரைந்து வந்தார் ஆறுமுகம். ஜெயிலரைக் கண்டதும் சூர்யாவுக்கு மேலும் பயந்து வந்தது.

மேலதிகரிகளைக் கண்டதும் காவலர் முறைப்படி வணக்கம் வைத்தார் ஆறுமுகம். உடனே அந்தப் பெண் அதிகரி....ஆறுமுகத்தைப் பார்த்து...

அண்ணே....

இவன் யாரு.......என்னனு விசாரிங்க.....

அப்படியே கேட்ல யாரு இருக்காங்களோ அவங்கள என்ன வந்து உடனே பார்க்க சொல்லுங்க....

என்று அதிகாரத் தோரணையில் கூறி சூர்யாவை ஆறுமுகத்திடம் ஒப்படைத்துச் சென்றார்...

ஆறுமுகம் பிடித்த பிடியிலே சூர்யாவிற்கு கண்ணிர் மல மலவென்று வரத் தொடங்கியது...

மேலும் ஆறுமுகத்தின் உயரமும் கம்பீர உருவமும் கையில் இருக்கும் தடி ஆகியவை அவனை மேலும் மிரள வைத்தது.

ஆறுமுகம் இவனை விசாரித்துக் கொண்டே ஜெயிலுக்குள் கூட்டிச் சென்றார்.

இப்படியொரு சுழலில் தான் உள்ளே செல்வோம் என்று சூர்யா கொஞ்சமும் நினைக்கவில்லை.

யாரு டா நீ......?? என்றார் ஆறுமுகம்.

சூர்யாவோ.....அண்ணே நா தேரடித் தெருவில இருக்கேன்........பெரு சூர்யா......ணே

ஆறுமுகம்......அப்பா என்ன பண்ணுறாரு...? என்றார்.

சூர்யா.......அப்பா பெரு பகவதி.....பாங்க்ல கேஷியரா இருக்காரு...

ஆறுமுகம்........இங்க ஏன்டா வந்த....?

உள்ள பார்க்கணும்னு அசையா இருந்துச்சு அது தான் வந்துட்டேன்......ணே...

என்ன வுட்ருங்க....நான் போறேன்...என்றான் சூர்யா அழுதுகொண்டே....

ஆறுமுகம் மனதுக்குள் சிரித்துக் கொண்டும் வெளியில் முறைத்துக் கொண்டும்

உள்ள வந்துடேல.....இனி நீ வெளிய போகவே முடியாது.....என்று மிரட்டினர்.

சூர்யா......எங்க மாமா முதுகளத்தூர்ல இன்ச்பெச்டரா இருக்காரு...என்ன வுட்ருங்க என்றான் அழுதுகொண்டே.

சிறிதுதூரம் போனதும் கைதிகளின் அறைகள் வந்தது.

சூர்யாவை அழைத்துச் செல்லும் பாதையின் இரு பக்கமும் சின்னச் சின்னதாய்க் கைதிகளின் அறைகளும். ஒவ்வொரு அறைகளின் உள்ளே ஒரு கைதியும், சோகத்துடனும் வெறுப்புடனும் இருப்பதைக் கண்டான்.

கடைசியாக ஒரு அரை காலியாக இருந்தது. அதில் சூர்யாவை அடைத்து விட்டு எதுவும் சொல்லாமல் ஆறுமுகம் சென்றுவிட்டார்.

இரண்டு, மூன்று நிமிடம் அழுத சூர்யா பின்னர் அதை மறந்து அந்த அறையைச் சுற்றி கவனிக்கத் தொடங்கினான். அந்த அறை மிகவும் சின்னதாய் இருந்தது. அதில் ஒருவர் தான் தங்க முடியும்.

12அடி நீளமும் 4அடி அகலமும் உள்ள அந்த அறையில், தமிழ்ப் படங்களில் காண்பது போல் கம்பிகளால் ஆன கதவுகள் இல்லாமல் மரத்தால் ஆன பழைய கதவுகள் இருந்தது.

ஒருபுறம் படுப்பதற்கும் மறுபுறம் கழிவறைக் கோப்பையும் அதன் அருகில் சின்னதாய் எட்டிப் பார்த்த குழாயும் சின்னக் கப்பும் இருந்தது.

அருகில் உள்ள ஜன்னல் வழி எட்டிப் பார்த்தபடியே மற்ற கைதிகளின் நடவடிக்கைகளை கவனித்தான் சூர்யா.

சிறிது நேரத்தில் ஆறுமுகம் அங்கு வந்தார்.

 வந்தவர் சூர்யாவைப் பார்த்து தம்பி நீ கிளம்பு என்றார்...

உடனே சூர்யா....

அண்ணே இன்னும் பத்து நிமிஷம் இருந்துட்டு போறேன் என்று சொன்னதைக் கேட்ட ஆறுமுகம் சிரிக்கத் தொடங்கினர்.

உனக்கு இன்னிக்கு நல்ல நேரம் டா தம்பி.........

புதுசா ஒரு கைதி வந்திருக்கன்......அவன அடைக்க ரூம் இல்ல......முதல்ல நீ வெளிய வா........என்றார் ஆறுமுகம்.

மறுபடியும் வந்த வழியே சூர்யாவை அழைத்துச் சென்று வீட்டுக்கு அனுப்பினர்.

தமது தேவையற்ற ஆசையினால் விபரீதம் நேர்ந்ததையும் இன்று ஒரு நாள் கைதியின் வாழ்க்கையை வாழ்த்த சூர்யா மிகவும் வருந்தினான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.