(Reading time: 5 - 10 minutes)

நம்பிக்கை - வளர்மதி

Nambikkai

‘’ர்த்தி, அப்பாவுக்குத் தெரிந்தவர் முலமா ஒரு வரன் வந்து இருக்கு. நல்ல இடம் போல தெரியுது. கொஞ்சம் யோசித்து சொல்லுமா’’ என்று சொல்லி விட்டு தன் முகத்தையே பார்த்த அம்மாவிடம்

‘’அம்மா ஈவனிங் வேலை முடிந்து வந்த பிறகு பேசிக்கிலாம், இப்போ நான் கிளம்புறேன்’’.

அலுவலகத்தில் ஆர்த்தி வேலையில் கவனம் செலுத்த முடியாமல் தடுமாறினாள்.

சுரேஸ்க்கு போன் பண்ணலாமா வேண்டாமா என்று  காலையில் இருந்து  நூறு தடவை யோசித்து விட்டாகியது. ஆனால் இன்னும் ஒரு முடிவும் எடுக்க முடியவில்லை.

என்னதான் வேலையில் கவனம் செலுத்த முயன்றாலும் ஆர்த்தியின் எண்ண  அலைகள் பின்நோக்கி செல்லுவதை அவளாள் தடுக்க முடியவில்லை.

ல்லூரி இரண்டாம் ஆண்டு படிக்கும் போது, கல்லூரி விடுதியில் இரவு பன்னிரண்டு மணிக்கு மேல் தனது அறைத் தோழிகளிடம் நியு இயர் வாழ்த்தையும், அரட்டையிலும் களித்த அந்த நேரத்தில் ஓரு புதிய எண்ணில் இருந்து வந்த நியு இயர் குறுந்தகவலுக்கு ஏதும் யோசிக்காமல் விஷ் டு தி சேம் என்று ரிப்லை அனுப்பினாள்.

சிறிது நேரத்தில் மீண்டும் அந்த எண்ணில் இருந்து குறுந்தகவல் வந்தது.

‘’சாரி ஐ சப்போஸ் சென்ட் தி மெசேஜ் டு மை ஃபெரன்ட், உங்களுடைய எண்ணுக்கும் அவனுடைய எண்ணுக்கும் ஓர் எண் தான் வித்தியாசம். தவறாக உங்களுக்கு மெசேஜ் அனுப்பிட்டேன் ப்ரொம் சுரேஷ் . அவனுடைய மெசேஜ் ஆர்த்தி படித்தாலும் அவளது கருத்தில் பதியவில்லை.

அதன் பின் தினமும் காலை 8 மணிக்கு குட் மோர்னிங் என்று ஆரம்பித்து இரவு குட் நைட் சொல்லும் வரை சென்றது. இருவரின் சிந்தனையும் ரசனையும் ஒத்து போவதால் இவர்கள் பேசிக்கொள்ள நிறைய இருந்தது. ஒரு நாளுக்கு குறைந்தது நூறுக்கு மேற்ப்பட்ட குறுந்தகவல்களை இருவரும் பகிர்ந்துக்கொண்டனர். எதிர்ப்பாரத சில நேரத்தில் ஆர்த்தி தன் தோழிகளுடன் வெளிய செல்லும் போது சுரேஷும் அதே இடத்தில் இருந்தால் இருவரும் சந்தித்துக் கொள்வார்கள்.

ல்லூரி இறுதி ஆண்டில் இருக்கும் போது சுரேஷ் அவளை பார்க்க வந்து இருந்தான்.

‘’என்ன மேடம் ரொம்ப பிஸியா? போன் கால்க்கும் மெசேஜ்க்கும் ரிப்லை வரது இல்லை. அப்படியே வந்தாலும் பிஸியா இருக்கேன்னு பதில் வருது.’’

‘’சார் உண்மையிலே நான் பிஸி தான். இது எனக்கு கடைசி செமஸ்டர், நிறைய ப்ரொஜெக் சம்மிட் பண்ணவேண்டும் அண்ட் ப்ரேசெண்டதியனக்கு ரெடி பண்ணவேண்டும், அண்ட் எக்ஸாம்க்கு இன்னும் ஒரு மாதம் தான் இருக்கு அதுக்கு வேற படிக்கனும். இதுக்கு நடுவில் உங்க மெசேஜ்க்கும் ரிப்லை பண்ணனும், என்னை பார்த்த உங்களுக்கு பாவமா தெரியலே?’’ சொல்லி விட்டு அவன் முகத்தை பார்த்தாள்.

‘’தெரியலியே. இப்போ நீ ப்ரீயா ஆர்த்தி உன்னிடம் நான் கொஞ்சம் பேசனும்.’’

‘’ம்ம்ம் இன்னைக்கு என் லேச்றேர் ஒரு டைட்டில் குடுத்து அதை நாளைக்கு ப்ரேசெண்டதியன் பண்ண சொன்னாறு, அது நைட் தான் ரெடி பண்ணனும். இப்போதைக்கு ப்ரீ சொல்ல முடியாது, ரொம்ப சோர்வாக இருக்கு. நான்கு நாட்களா சரியா தூங்காமல் என்னுடைய ப்ராஜெக் முடித்து  இப்போ தான் சம்மிட்  செய்து வரேன்.’’

‘’சரி ஆர்த்தி நான் நேரடியாக விசயத்திற்க்கு வரேன், உன்னை எனக்கு முன்று ஆண்டுகளாக தெரியும், கடந்த இரண்டு மாதமாக நீ என்னிடம் பேசமால் இருந்தப்போது  ஐ வாஸ் மிஸ்ட் யு அலோட், இ டோன்ட் நோ சின்ஸ் வென் ஐ ஸ்டார்ட் டு லவ் யு நொவ் ஒன்லி இ பீல் இட். நீ இப்பவே பதில் சொல்லணும்னு இல்லே, டேக் யுவர் ஓன் டைம்’’ என்று சொன்னாலும் அவனின் முகத்தில் ஒரு எதிபார்ப்பு இருந்தது.

ஆர்த்திக்கு அதிர்ச்சியாக இருந்தபோதும் கொஞ்சம் நேரம் கழித்து ‘’சாரி சுரேஷ் இதுவரைக்கும்  அப்படி ஏதும் நான் யோசித்தது இல்லே. என்னாலே யோசிக்கும் முடியாது’’.

‘’ ஆர்த்தி ஏன்னு நான் தெரிஞ்சிக்கலமா’’?

......

‘’ஆர்த்தி’’

‘’என் பெற்றோர்’’.

‘’புரியலே’.

நான் ஸ்கூல் படிக்கும் போது என் அக்கா ஒருத்தனை காதலித்து வீட்டுலே யாருக்கும் தெரியமே அவனை கல்யாணம் பண்ணி போய்டங்கே. ஒரு வருஷத்துலே அவன்  என் அக்காவை விட்டுத்து வேற பொண்ணை தேடி போய்ட்டான். என் அக்கா ஏமாற்றம் தாங்காமல் விஷம் குடித்து  இறந்துதங்க, அப்போ அவங்களுக்கு எட்டு மாதம். என் அக்காவால் என் பெற்றோர்க்கு எவ்வளவு தலை குனிவு தெரியுமா? யார் வீட்டு விசேஷத்துக்கும் போக முடியாமல் ஒதுங்கி இருந்தாங்க. யாரும் வேண்டாம் அவன் மட்டும் போதும்னு நினைச்சதுனால் எத்தனை இழப்பு. நான் இங்க படிக்க வரதுக்கு எவ்வளவு கஷ்ட்டபட வேண்டி இருந்தது. கெஞ்சி கூத்தாடி இங்க படிக்க வந்தேன். அன்னைக்கு நினைச்சேன் என்னால என் பெற்றோருக்கு எந்த தலை குனிவும் வரக்குடாதுன்னு’’.

‘’என் மேல் உள்ள நம்பிக்கையில் தான் என்னை இவ்வளவு தூரம் படிக்க வைக்கிறாங்க. அவங்க நம்பிக்கையை என்னால் பொய்யாக்க முடியாது சுரேஷ். என் வாழ்க்கைக்கு எது நல்லதுனு அவங்களுக்குத் தெரியும்’’ உறுதியான குரலில் சொல்லி முடித்தாள்.

சுரேஷ்க்கு என்ன சொல்லுவது தெரியமால் அமைதியாக அமர்ந்திருந்தான்.

‘’எனக்கு உன் நிலமை புரியுது, ஆனா மனசுக்கு புரியல. நீ உன் பேரன்ஸ் மேல வச்ச நம்பிக்கையை கொஞ்சம் என் மேல வை. எனக்கு  ஒரு வருஷம் டைம் கொடு ஆர்த்தி, நான் முதலில் என் வேலையில் செட்டேல் ஆகிவிட்டு, என் பெற்றோரை அழைத்து வந்து உன் பெற்றோரிடம் பேசி திருமணம் செய்துக்கொள்கிறேன். எனக்காக நீ கொஞ்சம் காலம் காத்திருந்தால் போதும். கண்டிப்பாக நான் வருவேன். அதுவரைக்கும் நாம் எப்போதும் போல் மெசேஜ் அனுப்பலாம்’’.

காத்திரு சொல்லி சென்றவனுக்கு இன்று போன் செய்து என்ன பேசுவதென்று தெரியவில்லை. இன்றைக்கு வேலை முடிந்து வீட்டிற்குச் சென்று அம்மாவிடம் பேச வேண்டும்.

‘’என்னடி இன்னைக்கு சீக்கிரம் வந்துவிட்டாய்’’.

‘’தலைவலி மா அதான் வந்துடேன்’’.

‘’உனக்கு ஒரு லெட்டெர் வந்து இருக்கு. அது பார்க்க கல்யாண பத்திரிக்கை மாதிரி இருக்கு ‘’.

‘’ம்ம்ம் மா பத்திரிக்கையே தான் மொய் போட இப்பவே காசை ரெடி பண்ணிக்கணும் போல இருக்கே’’ சொல்லிக்கொண்டே யாருக்கு திருமணம் பார்த்த போது அவளுடைய  இதயம் ஒரு நிமிடம் நின்று துடித்தது. அதில்

சுலோச்சனாவெட்ஸ்சுரேஷ்  

இருந்தது. அவரசமாக திருமணம் எப்போ பார்த்தால், இன்னும் நான்கு நாட்களில் திருமணம். சொல்ல முடியாத ஒரு உணர்வுடன் அந்த பத்திரிக்கையை கீழே வைத்தாள்.

‘’அம்மா நான் மேல படிக்கப் போறேன், இப்போதைக்கு கல்யாணத்தை பற்றி பேச வேண்டாம். அவங்கள வேற இடம் பார்க்க சொல்லுங்க’’, சொல்லிக்கொண்டே குளியல் அறைக்குள் நுழைந்தாள்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.