(Reading time: 7 - 13 minutes)

இது உலகமகா காதல்டா சாமி..! - ஸ்வேதா சந்திரசேகரன்

குறிப்பு : இந்த கதையில் என் கண்முன்னே நடந்ததை கற்பனை கலந்து வடித்திருக்கிறேன். மறைமுகமாக பல கருத்துக்கள் அடங்கியிருக்கும் சிலது சின்ன விஷயமாகவும் படலாம். ஆனால் எதுவும் உடனே நடந்து விட வேண்டும் எண்ணும் எனக்கு  பொருமை அவசியமோ என்று எண்ணும்போதெல்லாம் இந்த சம்பவம் கண் முன் நிற்கும். உங்களுக்கும் உதவும் என்று நினைக்கிறேன்.

"முதா…….!! போன் ரொம்ப நேரமா அடிச்சிக்கிட்டே இருக்கு டி" மத்யான நேர தூக்கம்  கலைந்து அனு எரிந்து விழுந்தாள்.

யோசனையில் இருந்து மீண்ட அமுதா "ஆங்.. இதோ" என்று சொல்லிக்கொண்டே கைபேசியில் பேச தொடங்கினாள்.

IUMKDS"சரிங்கம்மா"

"சரிங்கம்மா......" 

இப்படியே நான்கு முறை "சரிங்கம்மா" சொல்லிவிட்டு  தந்தையை பற்றி விசரித்து விட்டு அழைப்பை துண்டித்தாள்.

தூக்கம் களைந்து அனு  "என்ன பூம்பூம் மாடு, என்ன விசேஷம்" என்றாள்.

"அதுவா, சுரேஷ் அத்தான் என்னை பார்க்க வருவாங்கலாம் நாளைக்கு, சேலை கட்டிட்டு போய் பார்க்க சொன்னாக அம்மா"

அனுவிற்கு புரிந்தது விஷயம் என்னவென்று. "அது மட்டும் தான் சொன்னாங்களா என்ன !!" என்று சந்தேக தொனியில் கேட்டாள் அனு.

ஏனோ குட்டை முடி, எப்போதும் ஓயாமல் பேசும் அனுவை எட்டவே வை என்று சொல்லும் அமுதாவின் அம்மாவிற்கும் அவர்களை பார்த்து பெண்ணடிமை இன்னுமும் இவுலகில் இருப்பது இம்மாதிரியான பெண்களால் தான் என்று நினைக்கும் அனுவிற்கும் பனிப்போர் தான்.

"இல்லை போகும் போது உன்னை அழச்சிட்டு போக வேண்டாம் என்றும் சொன்னாங்க"

கடுப்பாகி அனு "வேற என்ன சொன்னாங்க"

"அனு....., விடு அனு நாளைக்கு அத்தான் வரும் போது பார்த்துக்கொள்ளலாம்"

னுவும் அமுதாவும் கல்லூரியில் இறுதி ஆண்டு  பொறியியல் அதுவும்  நாகரீக வளர்ச்சியின் தன் பங்கை பலமாக  எடுத்து கொடுக்கும் தகவல் தொழில்நுட்ப துறையில் படிப்பவர்கள்.

அமுதா படிப்பில் சுட்டி. பெற்றோர் பேச்சை தட்டாமல் கேட்டு நடப்பவள். அவள் மனஉறுதி யாரையுமே மிரட்டும். நேர்மையும் கண்களில் பணிவும் பெண்மையை அழகாய் எடுத்துக்காட்டும். அனு குறும்பில் சுட்டி பெற்றோர் பேச்சை கேட்பாள் ஆனால் அவளுக்கு சரி என்று மனதில் படுவதை செய்பவள். தன்நம்பிக்கையும், நாகரீக வளர்ச்சியையும் அவளை எடுத்துகாட்டாக காட்டும். 

இருவருமே வெவ்வேறு துருவம் தான் ஆனாலும் நட்பு வலுவாக இருந்ததற்கும் காரணம் அதுவே.

அமுதா அவள் அன்னை போனில் சொல்வதை கூட அப்படியே செய்து முடிப்பவள். அனுவின் "அவங்க உன்னை என்ன இங்க வந்து பார்க்கவா போறாங்க என்னமோ அவங்க சொல்றதை எல்லாம் செய்ற??, நீ என்ன அவங்க பொண்ணா இல்லை அடிமையா" கேள்விக்கு அமுதா சிரிக்க மட்டுமே செய்வாள்.

அப்படி நடப்பது அடிமை தனம் அல்ல, நம்பிக்கையை காப்பாற்றுவது என்பது அமுதாவின் கூற்று. அதில் அனுவிற்கு சிறிதும் உடன்பாடில்லை.

போன மூன்று ஆண்டுகளாக இருவரும் ஒரே அறை. அனுவின் கூச்சலுக்கும் அமுதாவின் அமைதிக்கும் எப்படி ஒத்துப்போகிறது அந்த விடுதியே அதிசயிக்கும்.

"அமுதா, உன் அத்தான் எதுக்கு வாராங்க என்று புரியுதா உனக்கு"

"ஓ.. நல்லாவே அனு என்னை பார்த்து பேச, கல்யாணம் செய்துக்க சம்மதமா என்று கேட்க" 

"ஏண்டீ உனக்கு பயமா இல்லை, படபடப்பா இல்லை"

"இல்லை"

"ஏன் இல்லை???!, இன்ஜினியரிங் புடிச்சு அதை புரிஞ்சி படிச்சி சாதிக்கணும் நினைக்கிறவ நீ, இதுல கல்யாணம் எப்படி அமுதா? உன் கனவு லட்சியம் எல்லாம் என்ன ஆகும்"

அமுதா பேசவே இல்லை. மணி ஆறு என்று காட்டவும். முகம் கழுவ சென்றுவிட்டாள். அதற்கு பின் சாமி கும்பிட்டு, சிறிது நேரம் படிப்பு, பின் இரவு சாப்பாடு, அதற்கு பின் தோழிகள் அரட்டை பின் தூங்கவும் சென்றுவிட்டாள் சலனமே இன்றி.

அனுவிற்கு தான் மனம் குமுறியது. அமுதாவிற்கு இந்த துறையில் சாதிக்க எவ்வளவு ஆசை என்று. அவள் கனவுகள் அதிகம். ஆனால் இந்த கல்யாணம் அதுவெல்லாம் கெடுத்து விடுமோ என்ற அச்சம்.

அனு அம்மாவே சொல்லியிருக்கிறாள் "நான் கலெக்டர் ஆக ஆசைப்பட்டேன் அனும்மா ஆனால் சீக்கிரம் கல்யாணம், பொறுப்பு என்று வந்த பின் முடியவில்லை ஏதோ என்னால் முடிந்த அளவு உன் அப்பாவின் ஊக்கத்தில் வருமான வரி துறையில் வேலை எனக்கு"என்றும் இளமையிலே, கல்யாணத்தின் முன்பே  வேண்டும் என்பதை செய்துமுடித்திட வேண்டும் என்றெல்லாம் பலவாறு கேள்விப்பட்டு இருக்கிறாள்.

இப்படி இருக்க அமுதாவிற்கு உதவ வேண்டுமே. நாளை கட்டாயம் அவளோடு சென்று அவனிடம் பேச வேண்டும் என்று முடிவு செய்துகொண்டு உறங்கி போனாள். 

காலை பத்து மணி அளவில் அமுதா அனுவை உலுக்கி எழுப்பினாள் "அனு அத்தான் ரெண்டு மணிக்கு வராங்களாம் எந்திரி" என்று.

தூக்கத்தை கெடுத்து விட்டாளே  என்று எரிச்சல் வந்தாலும் கவலை தொற்றிகொண்டது அனுவிற்கு அவள் உயிர் நண்பியின் நிலைமையை பார்த்து.

அமுதா பண்ணிரெண்டு மணியளவில் அவள் அம்மா தொலைபேசியில் அழைத்து அவளை தயாராக சொல்லவும் அமுதா சேலை கட்ட தொடங்கி விட்டாள்.

அணுவின் பரிதாபமான முகம் அமுதாவை அசைத்திருக்க வேண்டும் அவள் பேசினாள் "அனு நான் சிறு வயதிலிருந்தே இப்படி அவர்கள் பேச்சை கேட்டே வளர்ந்துட்டேன், நான் வளர்ந்த விதமும் அப்படி தான், ஒரு வகையில் நிறைய இழந்தும் இருக்கேன் அவங்க பேச்சை எதிர்க்க முடியாம, ஆனால் எனக்குள் தன்னம்பிக்கை, சாதிக்கணும் என்ற வெறி குறைந்ததேயில்லை" என்றாள்.

அனு முகம் தெளிந்தாலும் அவள் அகல நெற்றியில் கோடுகள் அவள் குழப்பத்தை பறைசாற்றின.

அமுதாவிற்கு வருகையாளர் என்று விடுதி ஒலிபெருக்கியில் சொல்ல இருவரும் இரண்டாம் தலத்திலிருந்து கீழ் இறங்கினர். விசிட்டர் ஏரியாவில் ஒரு குடும்பமே அமர்ந்திருந்தது. அந்த பையன், அவன் தாய், தந்தை, பாட்டி, தாத்தா, மற்றும் இரண்டு சின்ன பிள்ளைகள் அந்த பையனை சித்தப்பா என்று அழைத்தது.

எப்படி பேசுவது என்று அனு யோசித்துகொண்டிருக்க அமுதா எல்லோரையும் தனி தனியாக நலம் விசாரித்துகொண்டிருந்தாள். அந்த சுரேஷ் அத்தான் என்பவன் அமுதாவை விழுங்குவது போல் பார்த்துக்கொண்டிருந்தான். அனுவிற்கு ஐயோ என்றிருந்தது. 

வள் பேச்சிற்கு அவன் மதிப்பளிப்பான் என்ற எண்ணமே அவளை விட்டு தொலைதூரம் சென்றுவிட்டிருந்தது.அப்போது அந்த பெரியவர் "கண்ணா, தனியா போய் பேசிட்டு வாங்க நாங்க இங்க இருக்கோம்" என்றார்.

காத்திருந்தவன் எழ,அனு தயங்கிகொண்டிருக்க அமுதா படபடப்பு வெளிபடியாகவே தெரிய அங்கே இன்னொரு அம்மாள் அனுவிடம் "நீயும் போ கண்ணு" என்று சொல்ல மூவரும் சற்று தூரத்தில் தெரிந்த மரத்தின் நிழலில் போட்டிருந்த பெஞ்சில் அமர்ந்தார்கள்.

சிறு தயக்கத்துடன் பெஞ்சில் இருந்து இறங்கியவள் "இங்க பாருங்க மிஸ்டர் சுரேஷ் " என்று ஆரம்பிக்க சுரேஷ் "அப்படியே நில்லுங்க " என்று சொல்லிவிட்டு அமுதாவின் கையை பிடித்தான் 

"ஐயோ என்ன பண்றீங்க அத்தான்? அப்பா அம்ம்மா எல்லாரும் அங்க இருக்காங்க"

"பரவாயில்ல அம்மு, நான் இன்னும் மூணு மாசத்துல அமெரிக்கா போறேன், நீ வெளிநாட்டுல படிக்க தேவை படுகிற எக்ஸாம் எல்லாம் எழுதி வை, கல்யாணம் முடிஞ்சதும் அங்கே படிக்க போயிடலாம்"

அனுவிற்கு ஆச்சர்யம் என்றால் அமுதாவிற்கு கண்களில் கண்ணீர் எட்டி பார்க்க, அவன் "டேய் மாமா இருக்கும் போது நீ ஏன் கவலை படுற ம்ம்ம் ??" என்று சொல்லிக்கொண்டே எழுந்து நடக்க தொடங்கி விட்டான்.

பெற்றோரிடம் சென்று "எனக்கு பிடிச்சிருக்கு, அடுத்து நீங்க எப்போ சொன்னாலும் கல்யாணம் வெட்சிடலாம்" என்றான் கம்பீரமாக. மிடுக்கான தொனியில். ஏன் அதில் மரியாதையும் கலந்து தான் இருந்தது.

அணு கண்களை அகல விரித்து பார்க்க, ரகசியமாய்  " இது ரூரல் சைடு லவ், உங்களுக்கு புரியாது" என்று சொல்லி கண்ணடித்து விட்டு அகன்றான் சுரேஷ்.

அயர்ந்து நின்று விட்டாள் அணு. வெட்கத்தில் தலை குனிந்துக்கொண்டாள் அமுதா.

அனு "அப்போ.. இது.. நீ…… லவ் ??" என்று தடுமாறினாள்.

சாதரணமாக அமுதா   "எனக்கு சின்ன வயசுலே இருந்தே  சுரேஷ் அத்தான பிடிக்கும். அம்மா அப்பா பேச்சை கேட்டு நட வேளை வரும் போது நானே எல்லாம் செய்றேன் என்று சொன்னாங்க!! செஞ்சிட்டாங்க" என்று காதலும் பெருமையுமாக சொன்னாள் அமுதா.

இரண்டு உள்ளங்கள் சேர்வதற்கு மட்டுமல்ல வாழ்கையில் பலதிற்க்கும் பொறுமை ரொம்ப அவசியம்ங்கோ..!!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.