(Reading time: 11 - 21 minutes)

நேற்று முன்னிரவில் – புவனேஸ்வரி கலைசெல்வி

ர்ஜுன் நமக்கு கல்யாணம் ஆகி மூணு மாசம் தான் ஆச்சு .. ஆனா என்னம்மோ முப்பது வருஷம் ஆனா மாதிரி இருக்கு... நான் சொல்றதை நீ கேக்கவே கூடாதுன்னு முடிவு பண்ணிட்டியா? அப்படி என்னதான் இருக்கு உன் ஆபீஸ் லே ? நீ மட்டும்தான் அங்கே வேலை செய்றியா? எப்போ பார்த்தாலும் வேலை வேலைன்னு .... என் குடும்பத்தையே விட்டுடு நீதான் வாழ்க்கைன்னு வந்தேன். தனிக்குடித்தனம் பண்ணலாம்னு அத்தை மாமா சொன்னங்கன்னு இங்க வந்தோம் . ஆனா இங்க நான் மட்டும்தான் நீ இல்லாம தனிய குடித்தனம் நடத்துறேன்” எப்போதும் போல தனது சுப்ரபாதத்தை ஆரம்பித்தாள் நமது கதாநாயகி சுமித்ரா .

நேற்று முன்னிரவில்இதுக்கெல்லாம் சோர்ந்துபோகிற ஆளு நானில்லை என்பது மாதிரி “அடியே என் செல்லம் முப்பது வருஷம் இல்ல மூன்னூறு வருஷம் ஆனாலும் நீதான் என் செல்ல பொண்டாட்டி “ என்றபடி அவள் கன்னத்தில் முத்தமிட்டு விட்டு வேலைக்கு கிளம்பிவிட்டான் நம் கதாநாயகன் அர்ஜுன் . கணவனின் குறும்புத்தனத்தை ரசிக்க முடியாத நிலையில் அவள் இருப்பதின் காரணம் தனிமை . திருமணம் வாழ்வின் புது அத்தியாயம். அது ஒரு பெண்ணுக்கு அரவணைப்பையும் கணவனை சார்ந்திருக்கும் குணத்தையும் தருகின்றது . ஆணுக்கோ கடமை கற்பிக்கிறது . கடமைக்கும் கற்பனைக்கும் இடையில் பல திருமண வாழ்கை தத்தளிப்பது சகஜம் . இது சுமித்ராவுக்கு மட்டும் விதிவிலக்கா? அவ மனவோட்டத்தை கலைக்கும் விதமாக ஒரு குரல்...,

“அண்ணி "

“ஹே ராதிகா .. எப்படி இருக்கே? வீடுக்கு வர்றதா சொல்லவே இல்லையே ... "

“சும்மா ஒரு இன்ப அதிர்ச்சி தரலாம்னு தான் .. அவரும் வந்திருக்கார் "

“கிருஷ்ணாவா? எங்க?"

“அக்கா” என்றவாறு உள்ளே வந்தது சுமித்ராவின் தம்பியும் ராதிகாவின் கணவனுமான கிருஷ்ணா .

“எப்படி இருக்கே கிருஷ்ணா ? ராதிகா உன்னை கண் கலங்காம வெச்சு காப்பாத்துறாளா ?"

“ஹ்ம்ம் அதை ஏன் அக்கா கேக்குறிங்க ... அவ சமையல் கலைக்கு நான் தான் பலி அதுனாலேதான் உங்க கிட்டே உதவி கேட்டு வந்தேன் "

“என்ன சமையல் கத்து தரணுமா"

“ஐயோ மாமா படுற அவஸ்தை போதாதா? நான் ஒரு மீடிங்க்காக டெல்லி போறேன் . ரெண்டு நாள் என் செல்லத்தை பார்த்துக்கோ.. கண் கலங்காம! "

“டேய் உனக்கு மனைவி ஆகுறது முன்னாடி அவ என்னோட தோழி . என் கணவரோட தங்கச்சி ...எங்க ராதிகாவை நாங்க நல்ல பார்த்துப்போம் ..நீ சந்தோஷமா போய்ட்டு வா "

“அக்கா ,அக்காதான் ... ராது ரெண்டு நாளுலே வந்துடுறேண்டா . ஒழுங்கா சாப்பிடனும் நான் அப்பப்போ கால் பண்றேன் கண்ணம்மா "

“ம்ம்ம்ம் “என்று கலங்கிய விழிகளும் செயற்கை புன்னகையுடனும் காதல் கணவனை வழி அனுப்பினால் ராதிகா.

ண்ணா எங்க அண்ணி ? "

“ஆபீஸ்... ஏண்டி எத்தனை தடவை சொல்றது பேரு சொல்லி கூப்பிடுன்னு... இந்த உறவுகளுக்கு முன்னாடியே நாமே நல்ல தோழிகள் மறந்துபோச்சா? "

“ஹா ஹா கோபம் வேணாம் தாயே ... சரி சொல்லு சுமி எப்படி இருக்கே ? "

“ஹ்ம்ம்ம்ம் இருக்கேண்டி எப்போதும் தனியாவே... உனக்கும் கிருஷ்னாக்கும் என்ன பிரச்சனை ? "

“பிரச்சனையா? யாரு சொன்னது? "

“சொன்னதான் தெரியனுமா ? அவன் ஏன் உன்னை டெல்லிக்கு கூட்டிட்டு போகலே ? "

“அடிப்பாவி நல்ல கதையா இருக்கே ? அவர் மீட்டிங் விஷயமா போறார் . நானும் அங்கே போயி என்ன செய்ய சொல்லுறே "

“எல்லா ஆம்பளைங்களும் இப்படிதானாடி? வேலைதான் முக்கியம்னா அப்போ கல்யாணம் எதுக்கு "

“ஹே சுமி என்னாச்சு உனக்கு ? அவங்க வேலைக்கு போறது நமக்காகத்தானே"

“நாமே கேட்டோமா ? நமக்கு தேவை அவங்களோடு நேரமும் அன்பும் . அதில்லாமல் பணம் எதுக்கு "

“சரி சப்போஸ் எனக்கு நாளைக்கு எனக்கு விபத்து நடந்துச்சுன்னு வெச்சுக்கோ "

“ஹே என்னடி ...? “அதிர்ந்தாள் சுமி .

“ஒரு பேச்சுக்கு சொல்றேன் . டாக்டர் கிட்டே பணம் கொடுத்து என்னை காப்பாத்துவியா இல்ல பாசம் அன்பு வெச்சு காப்பத்துவியா ? கற்பனை வேற எதார்த்தம் வேற சுமி.. சரி விடு... இன்னைக்கு என்ன சமையல் ? வா நானும் சமைக்கிறேன் "

“பாருடா இவளுக்கு பொறுப்பு வந்துருச்சு “

கலகலப்பான உரையாடலோடு அன்றைய நாள் போக மாலை வேளையில்,

“அடடே வீணை ... அண்ணா சொன்னமாதிரி உனக்கு வாங்கி தந்துட்டான் போலிருக்கே... ஹ்ம்ம் ஹேய் சுமி ஒரு பாட்டு பாடுடி ,. எவ்ளோ நாள் ஆச்சு நீ பாடி கேட்டு “ என்றாள் ராதிகா

கண்டநாள்முதலாய்காதல்பெருகுதடி

கையினில்வேல்பிடித்தகருணைசிவபாலனை

கண்டநாள்முதலாய் "

தன்னையே மறந்து சுமித்ரா பாட அங்கே புன்னகையுடன் ரசித்துக்கொண்டிருந்தது ராதிகா மட்டுமல்ல . அவளின் அன்பு அண்ணன் அர்ஜுனனும் தான் !

ன்றிரவு,

“ஹே கண்ணம்மா "

“ம்ம்ம்? "

“மித்ரா .... என் சுமித்ரா "

“சொல்லு "

“இன்னைக்கு பாடுனியே பாட்டு சூப்பர் டி "

“பொய் சொல்றே "

“ஹே நீ பாடினாலே எனக்கு ரொம்பே பிடிக்கும் . அதுவும் இந்த பாட்டு எனக்கு எவ்ளோ ஸ்பெஷல் தெரியுமா? உன்னை முதல் முதல்ல பார்த்தப்போ இந்த பாட்டுதான் நீ பாடிகிட்டு இருந்தே "

“இந்த பாட்டா? இல்லையே நீ பெண் பார்க்க வந்தப்போ நான் வேற பாட்டு பாடினேனே”

“ஹஹ என் மக்கு பொண்டாடி இத பாரேன்.. ஹே இங்க பாருடி "

“என்னடா ? .............. ஹேய் இந்த போட்டோ உனகெப்படி கிடைச்சது ? இது வசு அக்கா கல்யாணத்துக்காக நானும் ராதிகாவும் ஒரே மாதிரி டிரஸ் எடுக்க போனபோது எடுத்தது”

“ஹஹ அப்போ மேடம் என்ன பாட்டு பாடிகிட்டு இருந்திங்க?"

கண்கள் விரிய தன கணவனை பார்த்தாள் சுமித்ரா.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.