(Reading time: 7 - 13 minutes)

உறவுகள் - வளர்மதி

ன்றோடு இந்த வீட்டிற்க்குள் தான் வர முடியாது என்று நினைக்கையில் வந்தனாவின் மனம் கனத்தது. கடந்த ஆறு மாத காலமாக தொழில் ரீதியாக இங்கே வர நேர்ந்தது. இனிமேல் தூரத்தில் இருந்தே பார்க்க முடியும் என நினைக்கும் போதே அவள் கண்கள் கலங்கின. அந்த வீட்டில் இண்டேரியர் டிசைன் மூலம் அவள்  செய்த மாற்றங்களை ஒவ்வொன்றாக இடத்தை பார்த்தப்படியே புகைப்படம் எடுத்துக்கொண்டாள்.

Uravugal“ரொம்ப நன்றி மிஸ் வந்தனா, நீங்க செய்த இந்த மாற்றங்கள் அருமையாக இருக்குமா. என் மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் ரொம்ப பிடிச்சி இருக்கு. யு ஹவ் ப்ரைக்ஹ்ட் பிவ்சேர் இன் திஸ் பீல்”

“உங்க பாராட்டுக்கு நன்றி சார். உங்க கோரிக்கையின் படி நாங்க மாற்றி அமைத்திறிக்கிறோம் . அந்த கடைசி ரூமில் மட்டும் பணிச்சர் செட் வைத்து விட்டால் வேலை முடிந்துவிடும். அப்பறம் நான் இன்னொரு இடத்துக்கு போகணும்,  நீங்க ஒரு தடவை சரி பார்த்திங்கனா எனக்கு நிம்மதியாக இருக்கும்” 

“எனக்கு உங்க கம்பெனி மேலும் உங்க வேலை மீதும் நம்பிக்கை இருக்கு, நானும் எல்லாவற்றையும் பார்த்துவிட்டேன், அதனால நீங்க கவலை இல்லாமல் கிளம்புங்க”

“சரி சார்” என்றவள் ஒரு கைகுலுக்கலுடன் விடை பெற்றாள்.

கேட் அருகே சென்றவள் கடைசி முறையாக அந்த வீட்டை பார்த்து  மனதில் படம் பிடித்த்க்கொண்டவளின் பார்வையில் துரத்தில் சந்திரன் தன் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக சிரிந்து கொண்டிருப்பது தெரிந்தது, அவர் தோளில் உரிமையும் சலுகையும்மை அவர் மகள் சாய்த்து இருப்பதை பார்த்தவளின் மனதில் ஏக்கம் குடிபுகுந்தது. இதற்க்கு மேல் தான் இங்கு இருந்தால் அழுதுவிடுவோம் என்ற பயத்தில், மீண்டும் ஒருமுறை  அந்த வீட்டை பார்த்தபடி உடனடியாக அவ்விடத்தை விட்டு வெளியேறினால்.

தன் போக்கில் நடந்தவள் ஒரு வளைவின் திருப்பத்தில் ஹோண் சத்தத்தை கேட்டு திடுக்கிட்டு சாலை ஓரம் நகரும் முன், மின்னல் வேகத்தில் ஒரு கார் அவளை மோதி சென்றது.

ந்தனா கண் விழித்தபோது முதலில் அவளுக்கு தான் எங்கே இருக்கிறோம் என்று புரியவில்லை. சுற்றும் முற்றும் பார்த்தால், தான்  ஏதோ  மருத்துவமனையில் இருக்கிறோம் என்று அவளுக்கு புரிந்தது. உடல் முழுவதும்  அசைக்க சிரமமாக இருக்க தலை வின் வின் என வலித்தது. “அம்மா” என முனங்கினால் .

முனங்கள் சத்தம் கேட்டு அவள் அருகே வந்த மதன் “என்ன வந்தனா ரோட்டில் நடந்து போகும்போது கவனக போக வேண்டாம், நல்ல வேலை பெரிய அடி ஏதும் இல்ல”

“நான் இங்க எப்படி? நீங்க இங்க பண்ணறிங்க மதன்”

"ஏன்மா கேட்ட மாட்ட.  வளைவில் நான் வரத்தை நீ கவனிக்கல, நானும் காரை நிறுத்த முடியாமல் உன்னை மோதிவிட்டேன். நான் டாக்டர்கிட்ட பேசிட்டேன் நீ ஒரு இரண்டு நாள்களுக்கு இங்க தான் இருக்கணும் சொல்லிதங்க. இப்போ உனக்கு எப்படி இருக்கு, நான் உன்கிட்ட கொஞ்சம் பேசலாமா?”

"பேசலாம், இப்போ பரவயில்லை மதன், கால் தான் வலிக்குது"

"ம்ம்ம் நீ ஏன் ரோட்டில் பித்து பிடித்த மாதிரி நடந்து வந்த, கொஞ்சம் மிஸ் அகிருந்தாலும் இந்த நேரத்துக்கு நீ பரலோகம் போய் சேர்ந்து இருப்பே”. அவனின் கேள்விக்கு என்ன பதில் சொல்லுவது யோசிக்கும் முன்பே அவன்  அடுத்த கேள்வியை கேட்ட ஆரம்பித்தான்.

“உனக்கு இதற்க்கு முன்பே சந்திரன் குடும்பத்தை தெரியுமா? ஏன்னா நீ அவங்களை எல்லாம் ரொம்ப ஏக்கமாக பார்க்கறதை நான் பல முறை பார்த்து இருக்கேன்”

மதனின் அந்த கேள்விக்கு அதிர்ந்து போய் அமர்ந்து இருந்தவள் சிறிது நேரம் கழித்து அவளாகவே பேச ஆரம்பித்தாள்.

“அவர் என் அப்பா”

“என்ன” அந்த தகவல் அவனுக்கு அதிர்சியாக இருந்தது.

திருமணம் ஆன சில மதங்களுக்கு பின் சந்திரன் நளினி தன்பதியர்களுக்கு  இடையே வரும் கருத்து வேறுபட்டால் இருவருக்கும் எப்பொழுதும் சண்டையிட்டு கொள்வர். பெற்றவர்களின் சண்டையில் வந்தனாவை கவனிக்க தவறியதோடு, அவளுக்கு வேண்டிய  அன்பும் அரவணைப்பும் கொடுக்க தவறினர். இவர்களில் சண்டையை பார்த்தே வளர்த்தவளுக்கு தன்னிடம் அன்பாக ஒரு வார்த்தை பேச மாட்டர்களா ஏங்க நேரத்தில், அதிக மன அழுத்தத்தில் நளினி காரை செளித்திய போது வாகனத்தை கட்டு படுத்த முடியாமல் அந்த விபத்தில் பலியானர். கடைசி வரைக்கும் அவளுக்கு பெற்றவளின் அறைவனைப்பு கிடைக்கவில்லை, இனி அப்பாவின் அன்பாவது கிடைக்குமா என்று ஏங்கிய போது அவர் அதை அவளுக்கு தர வில்லை. நளினி இறந்து மூன்று  மாதம் பின்னர் வந்தனவிடைய அப்பா அவளை ஒரு அசரமத்தில் விட்டு சென்றவர் அதன் பின் அவளை பார்க்க வரவே இல்லை.

இந்த ப்ராஜெக்ட் மூலமாகதான் அவரை மீண்டும் சந்திக்க நேர்ந்த்தது.  பெற்ற பிள்ளையை அவர்க்கு அடையாளம் தெரியவில்லை. பாவம் வந்தனாவிற்கு நான் உங்களின் மூத்த மகள் என்று சொல்ல மனம் வரவில்லை காரணம்  அவள் மேல் பாசம் இருந்தால் அவள் இல்லத்தில் இருந்த போது வந்து பார்த்து இருக்கலாம், தொலைபேசியில் பேசி இருக்கலாம். இன்னொரு திருமணம் செய்தது கொண்டு மகிழ்ச்சியாக இருக்கிறார். அவள் பிறந்து வளர்ந்த  வீட்டை தான் அவள் கடைசியாக பார்த்து வெளியேறினது.

“உனக்கு அவங்க கூட இருக்கணும் தோனுதா? நான் ஒன்று சொல்லவா, அவர்கள் உன்னை எர்த்துக்கொண்டால் உனக்கும் எல்லாம் கிடைக்கும் ஒரு பாதுகாப்பும் இருக்கும். ஒரு வேலை இல்லையென்றால்  நீ உன் சொந்த வீட்டில்  யாரும் இல்லாமல் தான் இருப்பாய். உன் அப்பா உன்னிடம் அன்பாக இருந்தால் தானே அவர்கள் உன்னை ஏற்றது கொள்ள முடியும். அவரே கண்டு கொள்ளாமல் இருக்கும் பொது உன் சித்தியும் அவர்கள் பிள்ளையும் உன்னை மதிப்பர்களா? பெற்றவர் உன்னை ஒதுக்கும் போது  மற்றவர்கள் உன்னிடம் எப்படி நடந்ததுகொள்வார்கள்? சரி அவர்கள் எல்லாரும் ஒன்றாக இருக்கும் போதும் உன்னை மட்டும் ஒதுக்கி வைத்திருந்தால் இப்போது நீ வருத்தபடுவதை விட ஆயிரம் மடங்கு உன்னை பாதிக்கும். ஒரு விதத்தில் நீ  சந்தோஷ படனும் அதை விட்டு எப்படி வருத்தப்பட கூடாது”.

“நீங்க இப்படி சொல்லறது ரொம்ப ஈசி மதன் ஆனால் அடி பட்டவர்களுக்கு தான் அதன் வலி தெரியும் சுத்தி நின்று பார்பவர்களுக்கு அதன் வலி புரியாது”. 

“நானும் அடிபட்டவன் தான் வந்தனா எனக்கு அந்த வலி நன்றாகவே தெரியும்”.

ள்ளி விடுமுறையில் மதன் குடும்பத்தினர் வெளியே சென்று திரும்பி வரும் வழியில் அவர்கள் வந்த வேன் ஒரு லோரியுடன் மோதி விபத்துக்கொள் ஆனதில் அவனை தவிர அவன் குடும்பத்தில் உல்ல அனைவரும் இறந்தனர். ஒருரே நாளில் அவனின் தலைவிதி மாறி போனது  மதன். உறவினர்கள் அவர்களுடையே குடும்ப சுழல் காரணமாக ஏற்த்துக்கொள்ளவில்லை. மருத்துவமையில் இருந்து அவனை ஒரு அசரமத்திற்கு அனுப்பட்டான்.

அவன் இருந்த மருத்துவமனையில் நர்சாக வேலை செய்து வந்த சாரதா அம்மா அவனை ஒரு சட்ட படி தத்து எடுத்துக்கொண்டார். ஒரு சமயம் சாரதா அம்மாவிடம் இதை பற்றி அவன் கேட்ட போது நானும் உன்னை போல் ஒரு விபத்தில் என் கணவர் மற்றும் பிள்ளைகளை இழந்து விட்டேன். உன்னை அந்த அசரமத்தில் விட எனக்கு மனம் வரவில்லை அதன் உன்னை என் மகனாக இந்த விட்டிற்கு அழைத்து வந்தேன்.

தன் பின் இருவரும் பேசிக்கொள்ளவில்லை. அவள் மருத்துவமையில் இருந்து வெளியேறும்போது மதன் அவளை அழைத்து செல்ல வந்து இருந்தவன். 

“என் அம்மா உன்னை பார்க்கணும் சொன்னங்க அவங்களை பார்த்து விட்டு பிறகு உன் வீட்டிற்கு அழைத்து செல்கிறேன்”.

அவர்களுக்குக்காகவே காத்து இருந்த சாரதா அம்மா அவனின் காரை பார்த்த உடனே விரைவாக வாசலுக்கு வந்தவர் .

“இந்த பையன் இன்னைக்கி காலையில் தான் உன்னை பற்றி சொன்னான். அதான் ஹோச்பிடலில் வெளியேறி உடனே இங்க வர சொல்லிடேன். இவன் சின்ன பையன இருக்கும் போதே எனக்கு பெண் பிள்ளை மீது ரொம்ப ஆசை. அப்போ இருந்த சூழ்நிலையிலே இவனை மட்டும் தான் பார்த்துக்க முடிந்தது. நீ இந்த அம்மா கூட இந்த விட்டில் இருப்பியா”? எதிர்பார்போடு கேட்டார்.

இப்படி ஒரு கேள்வியை காரை விட்டு இறங்கிய நேரத்தில் கேட்ட போது என்ன சொல்வது தெரியாமல் அமைதியாக இருந்தவளை பார்த்து

“என்னமா ஏன் இப்படி பார்க்கிறாய்?” பரிவாக அவளது தலையை கோதிய நேரத்தில், சாரதா அம்மாவின் தோளில் சாய்ந்து “நீங்க எப்போதும் என் கூட இருப்பிங்களா அம்மா” கேட்டு தனது சம்மதத்தை தந்தாள் வந்தனா.

உறவுகளை இழந்தவர்களுக்கு புரிகின்ற அருமையை, அவர்கள் அருகில் இருக்கும் போதே நேசிப்போம்!!!!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.