(Reading time: 23 - 45 minutes)

என் வானிலே - பாலா

ல்யாணம் ஆகி இன்னைக்கு மூன்றாவது நாள். மத்த பொண்ணுங்களுக்கு எப்படி இருக்குமோ தெரியலை. ஆனா எனக்கு சுத்தமா நல்லா இல்லை. இதுல இந்த பொண்ணுங்க வேற. இவங்களால நான் இன்னும் எவ்வளவு நேரம் தான் ஒளிஞ்சி மறைஞ்சி இருக்கணுமோ தெரியலையே என்று நொந்தவாறு அமர்ந்துக் கொண்டிருந்தாள் நந்தினி.

En vanile“நந்தினி அம்மாடி நந்தினி, இங்க ஏன்மா வந்து உட்கார்ந்திருக்க. அங்க என் தங்கச்சியும் அவ பொண்ணுங்களும் ஊருக்கு கிளம்பராங்கலாம். வா. அவ உன் கிட்ட சொல்லிட்டு போக தான் காத்திட்டு இருக்கா. நீ என்னடான்னா சாப்பிட கூட இல்லாம இங்க வந்து உட்கார்ந்திருக்க. வா வா”

(ஓ ஒரு வழியாக கிளம்பிட்டாங்களா, இனி யாரும் கிண்டல் பண்றேன்னு நினைச்சிட்டு என்னை கஷ்டபடுத்த மாட்டாங்க) என்று எண்ணியவாறு “இதோ வரேன் அத்தை” என்றவாறு அவரை பின் தொடர்ந்தாள் நந்தினி.

ஒரு வழியாக கல்யாணத்திற்கு வீட்டிற்கு வந்த அனைவரும் கிளம்பி விட்டனர். ஆனால் மனதிற்கு நிம்மதி மட்டும் கிடைப்பதாக இல்லை.

கடிகாரத்தில் மணியை பார்த்தாள். தனக்கு பிடிச்ச மியூசிக் ஷோ போடும் நேரம். அதையாவது பார்க்கலாம் என்று டிவியை ஆன் செய்தாள்.

அதற்குள் அங்கு வந்த நந்தினியின் மாமியார் காவேரி “ஐயோ டைம் ஆகிடுச்சா. அந்த ரிமோட் எங்க. இந்நேரம் சீரியல் ஆரம்பிச்சிருப்பான்” என்று டிவியை மாற்றி சீரியலை வைத்தார்.

தனக்கு பிடித்த ஷோவைக் கூட பார்க்க இயலவில்லையே என நந்தினி மனதிற்குள்ளே வருந்தினாள். இதுவே பிடித்த திருமணமாக இருந்து கணவனும் சரியாக இருந்தால் தனக்கு இதெல்லாம் பெரிய விசயமாக தெரிந்திருக்குமா என்று எண்ணி மேலும் வருந்தினாள்.

சிறிது நேரத்தில் அங்கு வந்த வருணை பார்த்து காவேரி “டேய் வருண் உன் பொண்டாட்டியை எதாவது படத்துக்கு கூட்டிட்டு போயேன் டா” என்றார்.

“வேண்டாம்ம்மா. இன்னொரு நாளைக்கு போயிக்கறோம்” என்று கூறிவிட்டு விடுவிடுவென்று போய்விட்டான்.

இதையெல்லாம் தன் அறைக்கு சென்று கொண்டிருந்த நந்தினி கேட்டு, “இது மூன்றாவது இன்சல்ட்” என்று நினைத்துக் கொண்டாள்.

முதல்ல கல்யாணம் முடிஞ்சி மறு வீட்டிற்கு அழைத்ததற்கு முடியாது என்று மறுத்து விட்டான்.

தனக்குமே அங்கு போக இஷ்டம் இல்லை என்றாலும், ஒரு பெண்ணிற்கு திருமணம் முடிந்து அதை ஏத்துக்கறதுக்கு ஒரு சின்ன அவகாசம் தானே இந்த மறுவீடு, அவன் கையால தாலியை கட்டிக்கிட்ட நான் என்ன பீல் பண்ணுவேன்னு கூட அவன் நினைக்கலையே என்று தான் வருந்தினாள் நந்தினி.

சரி அதுவாவது போகட்டும். அதில் தான் தன் விருப்பத்தை அவன் மதிக்கவில்லை, ஆனால் முதலிரவிலும் “இப்போது இதெல்லாம் வேண்டாம், படுத்து தூங்கு” என்று தன் முகத்தை கூட பார்க்காமல் அவன் கூறியது அவளுக்கு மிக பெரிய அவமானமாக தான் இருந்தது.

“இன்னும் எத்தனை அவமானங்களை சந்திக்க வேண்டி இருக்குமோ கடவுளே”

நந்தினி அவள் வீட்டை எண்ணி பார்த்தாள். அவள் வீட்டில் எதுவாக இருந்தாலும் ஒவ்வொருவர் விருப்பத்தையும் கேட்டே நடப்பர்”.

“எல்லா விஷயத்துலயும் என் விருப்பத்தை கேட்டு கேட்டு செஞ்சிட்டு, ஆனால்  இவ்வளவு பெரிய விசயத்துல என் விருப்பத்தை ஏன்ப்பா நீங்க மதிக்கவே இல்லை” என்று எண்ணி கண்ணீர் சிந்தினாள்.

அவள் கண்ணீர் சிந்துவதைக் கண்ட வருணின் மனம் அவளுக்காக இறங்கியது.

“தான் அவளை மிகவும் வருத்துகிறோமோ,” என்று எண்ணி வருந்தினான். ஆனால் அதற்கு மேல் அவனால் ஏதும் செய்யவில்லை.

“திருமணம் வேண்டாம் என்று கூறியும் வற்புறுத்தி செய்து வைத்த அவன் பெற்றோர் மேல் தான் அவன் கோபம் திரும்பியது”

இரவு 11.30 ஆகி விட்டது. நந்தினி படுத்து ஒரு மணி நேரத்திற்கும் மேல் ஆகி விட்டது. ஆனால் வருண் உறங்காமல் இன்னும் அவன் லேப்டாப்பில் ஏதோ செய்து கொண்டிருந்தான். நந்தினிக்கு அவனை பார்த்தே உறக்கம் வரவில்லை.

“இன்னும் எவ்வளவு நேரம் தான் தூங்காம விழிச்சிட்டு இருப்பான்” என்று எண்ணிக் கொண்டே நந்தினி உறங்கிப் போனாள்.

காலையில் குளித்து விட்டு காபி கலந்த நந்தினி வருணுக்காக எடுத்து வந்தாள்.  ஆனால் அவனோ நல்ல உறக்கத்தில் இருந்தான். இரவு எப்போது உறங்கினானோ என்று எண்ணி அவனை எழுப்பாமல் கீழே சென்று விட்டாள்.

அவள் எடுத்து சென்ற காபியை திரும்பி கொண்டு வருவதை பார்த்த காவேரி “அவன் நைட் ரொம்ப நேரம் முழிச்சிட்டு இருப்பான், அதனால லேட்டா தான் எழுந்திருப்பான், அவனே வந்து காபி எடுத்துப்பான்ம்மா” என்றார்.

“சரி அத்தை” என்று கூறியவாறு ‘அப்போ அவர் டெய்லியும் நைட் லேட்டா தான் தூங்குவாரு. இது இந்த பிடிக்காத கல்யாணத்தால இல்லை’ என்று எண்ணிக் கொண்டாள்.

காலை டிபன் செய்து விட்டு அறைக்கு வந்த நந்தினி தலையை பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்த வருணை கண்டாள்.

அவனிடம் வந்தவள் “நைட் பண்ணிரண்டு மணியிலிருந்து 3 மணி வரைக்கும் நம்ம உடம்பு உள்ள இருக்கற ஆர்கன்ஸ் எல்லாம் நல்லா வொர்க் பண்ணும். நம்ம விழிச்சிட்டு இருந்தா அதோட வொர்க் சரியா நடக்காது. அதனால நம்ம உடம்புக்கு தான் பாதிப்பு ஏற்படும். சோ அந்த நேர தூக்கம் ரொம்ப முக்கியம். அதனால நைட் ரொம்ப நேரம் முழிச்சிட்டு இருக்காதீங்க” என்று கூறிவிட்டு சென்று விட்டாள்.

நந்தினி சென்ற வழியையே வருண் பார்த்துக் கொண்டிருந்தான்.

“கல்யாணம் ஆகி இத்தனை நாள் ஆயிடுச்சி. நான் அவளுக்காக ஒண்ணுமே செய்யலை. ஆனா அவ என் மேல அக்கறையா இருக்கா. என் வேலைங்களை பார்த்து பார்த்து செய்யறா. இதோ இப்ப அவ சொல்லிட்டு போறதுல இருந்தே அவளுக்கு என் மேல இருக்கற அக்கறை தெரியுது. ஆனா நான் ரொம்ப சுயநலவாதியா இருக்கேன். நான் இதை மாத்திக்கணும்ன்னு நினைக்கறேன், ஆனா என்னை ஏதோ தடுக்குது. எல்லாத்தையும் மாத்திக்க கொஞ்ச டைம் எடுக்கும்” என்று எண்ணினான்.

கீழே சென்ற நந்தினியிடம் காவேரி “நந்தினி உனக்கு கல்யாணம் ஆகி ரெண்டு வாரம் ஆகிடுச்சி. மறு வீட்டுக்கு தான் வருண் வர மாட்டேன்னு சொல்லிட்டான். இப்பவாச்சும் நீங்க உங்க வீட்டுக்கு போயிட்டு வந்தா உங்க வீட்டுல இருக்கறவங்களுக்கு கொஞ்சம் ஆறுதலா இருக்கும் இல்ல” என்றார்.

“இல்ல அத்தை. இப்ப வேண்டாம். இன்னும் கொஞ்ச நாள் போகட்டும்.” என்று கூறிவிட்டு சென்று விட்டாள்.

காவேரிக்கு ஒன்றும் புரியவில்லை. அம்மா வீட்டுக்கு போக சொன்னா ஒரு பொண்ணு இப்படி சொல்லுவாளா. ஒரு வேளை வருண் இன்னும் சரியாகலையா. அவனால தான் இந்த பொண்ணு இப்படி சொல்லுதா.

“திருப்பதி ஏழுமலையானே என் பிள்ளையை சந்தோசமா வைப்பா. அவன் மனசுல இருக்கற சங்கடத்தை எல்லாம் போக வைப்பா. எனக்கு பேர குழந்தை பொறந்த உடனே உன் சன்னிதானத்துக்கு குடும்பத்தோட வரோம்ப்பா” என்று வேண்டிக் கொண்டார்.

“அனைவரும் சாப்பிட அமர்ந்தனர். நந்தினி எல்லோருக்கும் பரிமாறினாள்.”

வருணின் தந்தை ரத்தினசாமி “ஏன் மருமகளே நீயும் உட்கார்ந்து சாப்பிட வேண்டியது தானே” என்றார்.

“இல்லை மாமா. அப்புறம் யார் பரிமாறுவது. நான் அப்புறம் சாப்பிட்டுக்கறேன்”

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.