(Reading time: 18 - 35 minutes)

எதிரில் நின்ற உயிரே – புவனேஸ்வரி கலைசெல்வி

" ஹேய் நான் என்ன கலர் புடவை கட்டட்டும் ? சொல்லு .............. சொல்லுடா ? ...  என்னடா பகல் கனவு கேக்குது உனக்கு ? நான் இங்கே உயிரை கொடுத்து கத்திட்டு இருக்கேன் " என்றபடி தலையணையை கணவன் மீது வீசினாள் நம் கதாநாயகி மீரா.


Ethiril nindra ennuyire

அதை லாவமாக கேட்ச் பிடித்து, பெருவிரலால் வெற்றிக்குறி காட்டி அவளை மீண்டும் சீண்டினான் அவளின் கணவன் கிருஷ்ணன்.

" ஹேய் இதுலாம் எனக்கென்னடி தெரியும் உனக்கு பிடிச்சதை கட்டிக்கோ " என்றப்படி ஓரக்கண்ணால் கோபத்தில் கொதிக்கும் மனைவியின் முகத்தை ரசித்தான்.

" லொள்ளு ஜாஸ்திடா உனக்கு ..இன்னைக்கு டின்னருக்கு நீ என்ன டிரஸ் போடுறியோ அதுக்கு சம்மந்தமே இல்லாம நானும் டிரஸ் பண்ணிட்டு வரேன் . நம்ம நண்பர்கள் எல்லாம் கேள்வி கேட்டா உன்னை மாட்டி விடுறேன் பாரு "

" ஏன் அவங்களுக்கு என்ன வந்தது இதுல? "

" ஹேய் மக்கு புருஷன் பொண்டாட்டினா வெளிய போகும்போது ஜோடியா ஒரே மாதிரி தான் டிரஸ் பண்ணுவாங்களாம் "

" பட் அது உண்மையாவே கணவன் மனைவிக்கு……..நமக்கு? " என்று ஆவலுடன் மனைவியின் பதிலை எதிர்ப்பார்த்தான் ஸ்ரீதர்.

" என்ன பண்றது உலகம் நம்புது .. தெரிஞ்சவங்க எல்லாரையும் கூப்பிட்டு வெச்சு கல்யாணம் பண்ணியாச்சு ,,இப்போ போயி அவங்க கிட்ட இவர் என் புருஷன் இல்ல , என்னோடு நல்ல நண்பன்னு சொல்ல முடியுமா ? " என்ற மீராவின் கேள்வியில் அவன் ஏமாற்றம் அடைந்தாலும் தன் முயற்சியை தளர விடாமல் ...

" எல்லாரையும் கூப்பிட்டு வெச்சு சொல்லுறது கஷ்டம்தான் ..அதுவும் நீ சொன்னா அதை யாரு நம்புவா ? " என்று வாரினான்…

" ஏய் அடி விழும் பாரு உனக்கு  " என்று விரல் நீட்டி மிரட்டிய மனைவியை காதலுடன் பார்க்க முடியாமல் , பார்க்காமல் இருக்கவும் முடியாமல் திண்டாடினான் கிருஷ்ணன்  . அங்கே நின்றால் எங்கே தன்னையும் மீறி தனது காதலை வெளிப்படுத்தி விடுவோமோ என்று திரும்பி நடந்தவன்

திடீரென அவள் அருகில் வந்து அவள் கண்களை பார்த்தபடியே ,

" மீரா "

"ம்ம்ம்ம் "

" நான் உன் நண்பன்னு ஊருக்கே அறிமுகப்படுறதுவிட, ஒரே ஒருத்தர்கிட்ட நான் உன் புருஷன்னு அறிமுகப்படுத்து ...எல்லாம் மாறிடும் "

" யாருக்கு டா ? "

" உனக்கு .......... உன் மனசாட்சிக்கு "

" கிருஷ்............................ " என்றவளின்  குரலில் இருந்த அதிர்ச்சியும் கோபமும் அவன் எதிர்ப்பார்த்ததுதான் ... சட்டென முகபாவனையை மாற்றிக்கொண்டு

" என்னடி காமிடி பண்ணா , ஏதோ கொலைக்காரனை பார்குற மாதிரி முறைக்கிற ..." என்று அவள் தலையில் செல்லமாய் தட்டினான்...

" ச்ச்ச போடா ஒரு நிமிஷத்துலே உயிரே போச்சு எனக்கு " என்றவளின் வார்த்தைகளில் உடைந்து போனவன்,

 "எனக்கும்தான் " என முணுமுணுத்தபடி தன் அறைக்கு சென்றான்.

கணவனின் மனநிலை அறியாத மீரா மீண்டும் புடவையைகளை பார்த்துகொண்டிருந்தாள் ...

னது அறைக்குள் வந்த கிருஷ்ணன் கண்களை அழுந்த மூடினான்..

" ச்ச்ச போடா ஒரு நிமிஷத்துலே உயிரே போச்சு எனக்கு  " என்ற மனைவியின் வார்த்தைகளே அவன் செவிகளில் ரீங்காரிமிட, கலங்கிய விழிகள் திறந்து அவள் புகைப்படத்தை பார்த்தான் .

" உயிர் போச்சா? என்னை உன் புருஷனா நெனைக்கிறது அவ்வளோ கஷ்டமான விஷயமா மீரா ? நீதானேடி கல்யாணம் பண்ணிக்கலாம் சொன்ன ? நீதானே என்னை அவ்ளோ பாசமா பார்த்துக்குறே? நீதானேடி என் மனசுல நுழைஞ்ச ? நான் என்னடி பண்ணுவேன் ? நமக்குள்ளே இருந்த நட்பு , கல்யாணத்துல முடிஞ்சதுக்கு யாரு காரணம் ? என் மனைவியா கூடவே இருக்குற, என் தோழி மேல எனக்கு காதல் வந்தது என் தப்பா ? இல்ல என் மேல எந்த உணர்வும் வராதது உன் தப்பா? இந்த ஜென்மத்துல நான் தான் உன் புருஷன்னு நீ இயல்பா எடுத்துக்குற, ஆனா இன்னும் ஏழேழு ஜென்மத்துக்கும் நானே உன் புருஷனா இருக்கணும்னு தவிக்கிறேன். என் காதலை சொல்லாம பைத்தியம் ஆயிடுவேனொன்னு பயம்மா இருக்கு டி .... என்னை பத்தி எல்லாம் தெரிஞ்சுவெச்சிருக்க ஆனா என் மனசு மட்டும் உனக்கு புரியலையா? என தனக்குளே அவன் பொருமிக்கொண்டிருக்க அதற்கேற்றார்போல வானொலியில் பாடல் ஒலித்தது..

" காவேரியா கானல் நீரா? பெண்மை என்ன உண்மை?

முள்வேலியா முல்லை பூவாசொல்லு கொஞ்சம் நில்லு ....

அம்மாடியோ நீதான் இன்னும் சிறு பிள்ளை

தாங்கதம்மா நெஞ்சம் நீயும் சொன்ன சொல்லை

பூந்தேனே நீதானே சொல்லில் வைத்தாய் முள்ளை "

" இல்லை இன்னைக்கு என்ன ஆனாலும் சரி என் காதலை சொல்லியே தீருவேன் ... எங்க சொல்லணுமோ அங்கே வந்து சொல்லுறேண்டி என் செல்ல பொண்டாட்டி  " என அவன்  புன்னகைக்க மீரா ,

" கிருஷ்ணா ...ஹேய் கதவை திற டா பிளிஸ் "

" ஏண்டி கதவை உடைக்கிற? சொல்லு என்ன? " என்றவனை செல்லமாய் முறைத்தவள்,

" இந்த கரும்பச்சை புடவை கட்டிக்கவா ? நீ வாங்கி தந்த நெக்லஸ் இதுக்கு பொருத்தமா இருக்கும்ல ? " என ஆவலாய் அவள் கேட்க

" உனக்கென்னடா ? நீ என்ன டிரஸ் போட்டாலும் அழகா இருப்பே... அதுவும் இந்த கரும்பச்சை புடவையில தோகை விரிச்ச மயில் மாதிரி இருப்ப... அப்பறம் நான் …......." என்றவன் அவளின் கூர்மையான பார்வையை கண்டுகொண்டான்.

" அப்பரும் நானும் அதுக்கு ஏற்ற மாதிரி டிரஸ் ரெடி பண்றேண்டி " என பேச்சை திசைத்திருப்பினான். " மயிலிறகே மயிலிறகே வருடுகிறாய் மெல்ல "

என்ற பாடிக்கொண்டிருந்தவனை பின்னாலிருந்து மீரா பார்த்துகொண்டிருந்தாள் ....

மீரா தனதறையில்,

" என்ன ஆச்சு இவனுக்கு? என்னை பார்த்து நான் மயில் மாதிரி இருப்பேன்ன்னு சொல்லிட்டு இப்போ பாட்டு வேற பாடுறான் ..ஒரு வேளை கிருஷ்ணாவுக்கு நம்ம மேல ............. ச்ச ச்சா  இருக்காது ..... அவன் கண்ணியம் தவறாதவன் ... அப்படி  இல்லனா நானே அவன்கிட்டே இப்படி ஒரு யோசனை சொல்லிருப்பேனா ? " என்று தன்னை தானே கேள்வி கேட்டபடி கடந்த காலத்தை நினைத்துப் பார்த்தாள் மீரா .

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.