(Reading time: 4 - 8 minutes)

சிறந்த தானம் - கீர்த்தனா

ழகான இளங்காலை பொழுது. சோம்பல் முறிக்கும் ஞாயிறு.நண்பர்களுடன் இனிமையாக இருக்க போகும் இன்றைய தினத்தை எண்ணிய படியே கண் விழித்தாள் பூஜா. கைப்பேசியில் மணி 7 என்றது.9 மணிக்குள் அந்த புகழ் பெற்ற திரையரங்கிற்குள் இருக்க வேண்டும்.அனைவரின் நுழைவு சீட்டும் தன்னிடம் தான் உள்ளது. அதற்காகவாவது சீக்கிரம் செல்ல வேண்டும் என்று எண்ணிய படிய குளிக்க சென்றாள்.

பூஜாவை பற்றி சொல்ல வேண்டும் என்றால் ஊரை விட்டு வந்து பன்னாட்டு நிருவனத்தில் வேலை செய்யும் ஆயிரக்கணக்கானவர்களில் ஒருத்தி .

பூஜா திரையரங்கிற்குள் நுழையும் போதே கண்டு விட்ட  நண்பர்கள் குழுவான சௌம்யா,மானசா,சஹானா உடன் இணைந்து கொண்டாள்.அனைவரும் ஒரே அலுவலகத்தில் ஒன்றாக வேலை செய்பவர்கள் .சரியாக படம் ஆரம்பிக்கும் நேரத்தில் திரையரங்கிற்குள் நுழைந்தனர்.வேலை இல்லா பட்டதாரி படத்தை அந்த வேலை இருக்கும் பட்டதாரிகள் பார்த்து ரசித்து விட்டு வெளியே வந்தார்கள்.

sirantha thanam

மணி 12 ஆனது. பெண்கள் நால்வரும் கடைகளை  சுற்றி பார்க்க சென்றனர் .

இப்ப ஒரு  பாட்டு வரணுமே இருக்க சந்தோசத்துக்கு,

"அம்மா வேக் மீ அப் காலைல 9 ஒ'கிலோக்

ஷாப்பிங் போகணும் லிப் கிளாஸ் வாங்க

அம்மா வேக் மீ அப் காலைல 9 ஒ'கிலோக்

ஷாப்பிங் போகணும் லிப் கிளாஸ் வாங்க ..."

ஒரு வழியாக ஷாப்பிங் முடித்து விட்டு மதியம் சாப்பிட வெளியே வந்தனர்.

பிச்சை எடுத்து கொண்டிருக்கும் ஒரு சின்ன பையன் அவர்களை பார்த்து பிச்சை கேட்டான்.அவனை பார்த்து  பரிதாபப்பட்டு சௌம்யா காசு கொடுக்க சென்றாள். அவளை தடுத்து இழுத்து சென்றாள் பூஜா நண்பர்களால் பெர்பெக்ட் பூஜா என செல்லமாக எப்பவும் அழைக்கபடுபவள்.

சௌம்யா ஏதும் பேசாமல் கோபமாக அவள் கூட நடந்தாள். சிறிது தூரத்திலேயே இன்னொரு சிறுவன் கைகளில் சில புத்தகங்களை வைத்து விற்று கொண்டிருந்தான். இவர்களிடமும் புத்தகத்தை விற்று விட எண்ணி அருகில் வந்தான்.அவன் அருகில் வந்தவுடன் பூஜா இருந்த புத்தகங்களை பார்த்து விட்டு  அதில் இருந்து "பொது அறிவு-2014” புத்தகத்தை தேர்ந்தெடுத்து வாங்கினாள்.

சௌம்யா-வை ஒரு முறை பார்த்து விட்டு மானசா அவளிடம் கோபமாக கேட்டாள்"சௌம்யா அவனுக்கு காசு கொடுத்தப்ப தடுத்து கூட்டி வந்து விட்டாய். அனால் நீ மட்டும் இந்த சிறுவனிடம் புத்தகம் வாங்கலாமா?” அதற்க்கு பூஜா-வின் பதில் மிக பொறுமையாக வந்தது "சௌம்யா தவறு செய்ய பார்த்தல் பிச்சை எடுப்பதை ஊக்குவித்தாள். அதனால் அவளை தடுத்தேன்.ஆனால் இந்த சிறுவன் உழைத்து முன்னேற வேண்டும் என்று  புத்தகம் விற்று சம்பாதிக்கிறான். அவனின் உழைப்பை தான் நான் ஊக்கப்படுத்தினேன்.இதில் என் தவறு என்ன சொல்லு மானசா நான் செய்தது சரியா?தவறா?”. மானசா அமைதியாகி விட்டாள் அவளின் நியாயம் உணர்ந்து.

பேசிக்கொண்டே கவனிக்காமல் சாலை-யை கடந்தாள் பூஜா. எதிரில் வந்த லாரி-யை கவனித்து விலகும் முன் அந்த லாரி அவளை அடித்து சென்று விட்டது.கண் மூடி திறப்பதற்குள் கண் முன்னே நடந்து விட்ட கோர சம்பவத்தில் தோழிகள் அதிர்ச்சியாகி நின்று விட்டனர்.முதலில் சுதாரித்த சஹானா பூஜா-வின் அருகில் சென்றாள்.

அந்த உயிருக்கு  போராடி கொண்டிருக்கும் கடைசி நிமிடங்களில் கூட பூஜா சொன்னாள் "என்னுடைய கைப்பையில் உடல் உறுப்புகளை தானம் செய்ய முழு சம்மதத்துடன் நான் எழுதி கையெழுத்து இட்ட அடையாள அட்டை உள்ளது.அதை வைத்து என்னுடைய உடல் உறுப்புகளை தானம் செய்யுங்கள்.நான் இறந்தும் வாழ ஆசை படுகிறேன் என்று"சொல்லி முடித்தவுடன் வந்த வேலை முடிந்தது என்று அந்த புனித ஆத்மா அவள் உயிரை விட்டு பிரிந்தது.

"நல்லதோர் வீணை செய்தே அதை நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ?

சொல்லடி சிவசக்தி!

என்னை சுடர்மிகும் அறிவுடன் படைத்து விட்டாய்.

சொல்லடி சிவசக்தி!

என்னை சுடர்மிகும் அறிவுடன் படைத்து விட்டாய்.

வல்லமை  தாராயோ

வல்லமை தாராயோ

இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே....”

தோழியின் கடைசி ஆசையை நிறைவேற்ற 108-ஐ அழைத்தார்கள்.  பூஜாவின் வீட்டினருக்கும்,மற்ற நண்பர்களுக்கும் தகவல் கொடுத்துவிட்டு மருத்துவமனைக்கு சென்றனர்.

பூஜாவின் கடைசி ஆசை படியே அவள் கண்கள் இரண்டும் இருவருக்கும்,அவள் சிறுநீரகம் இருவருக்கும்,அவள் இதயம் ஒருவருக்கும் பொருத்தப்பட்டது.

பூஜாவின் உடல் இந்த மண்ணை விட்டு மறைந்திருக்கலாம். அவள் வாழ்ந்து கொண்டிருப்பாள் அந்த ஐவராலும் மற்றும் அவளின் நல்ல மனதாலும் .

பின்  குறிப்பு : இது என் கன்னி முயற்சி. பிழை இருந்தால் மன்னிக்கவும் . இந்த கதையை நான் என்னுடைய உயிர் தோழி ஹேமா-விற்கு சமர்ப்பிக்க விரும்புகிறேன். அவள் தந்தை இறந்த செய்தி கேட்டு அவள் பதட்டபடாமல் அழுகையை அடக்கி அவளுடைய உறவினர்களிடம் அப்பாவுடைய கண்ணை தானம் செய்யுங்கள் என்று சொன்னாள். அவளுடைய அந்த ஒரு வார்த்தை தான் என்னுடைய கதையின் கரு.

உங்களின் கருத்துக்களுக்கு காத்திருக்கிறேன்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.