(Reading time: 8 - 15 minutes)

பழகிய நாட்கள் - R.ராஜலட்சுமி

திர்ச்சியில் உறைந்து போய்  அமர்ந்திருந்தனர் கார்த்திகாவின் தாய் தந்தை இருவரும் அவர்களால் பள்ளி தலைமையாசிரியர் நாராயணன் கூறியதை நம்ப முடியலவில்லை.

இப்படி உட்கார்ந்திருந்தா எப்படி Mr கதிரவன் உங்க பொண்ணு 10th ல ஸ்கூல் first வந்தா அதுனாலத்தான் நான் உங்களை கூப்பிட்டு வெச்சி பெசிடுக்கிட்டுருக்கேன் இல்லாட்டி எப்பவவோ tc  குடுத்து விரட்டிருப்பேன் என்று கண்களில் கோபம் வார்த்தயில் விழ கத்தினார்.

கார்த்திகாவின் தாய் மாதவி எதோ சொல்ல வருகையில் தன் மகலை ஒரு பார்வை பார்த்து கதிரேசன் பேசினார்.

Pazhagiya naatkal

சார் இந்த ஒரு முறை மட்டும் excuse பண்ணுங்க அடுத்து அவள் இப்படி செய்ய மாட்டா நான் gurantee என்றார்.

என்னமோ போங்க எல்லா பெத்தவங்களும் இதையதான் சொல்றிங்க இப்படி பொண்ணுக்காக கெஞ்சுற நீங்க அவள ஏன் நல்ல வழியில கொண்டு போக நேரம் ஒதுக்குறது இல்லன்னு தான்  தெரியல, 10th ல ஸ்கூல் first வந்த பொண்ணு,

twelvth ல அதுவும் quarterly  exam ல bit எடுத்துட்டு வரா இதுவே annual ல இருந்தா என்ன ஆகிருக்கும் னு நான் சொல்லவே தேவையில்லை, பசங்க நினைக்கிற விஷயத்தை கேட்குறதுக்கு முன்னாடியே கொண்டு வந்து வைக்கணும் நினைக்குறீங்க, பிடிச்சத சமைச்சி குடுகிறிங்க பத்து டியூஷன் வைக்ரிங்க இருந்தும் என்ன பிரயோஜனம், பசங்களோட friends அவங்களோட பழக்க வழக்கம் எல்லாமே வளர வளர வேறுபடுமே இதையெல்லாம் கவனிக்காம இருந்தா பசங்க இப்படித்தான் வளருவாங்க this  is last and first warning என்று கண்டிப்புடன் அறிவுரிதினார் தலைமை ஆசிரியர்.

லைமையாசிரியரின் அறையில் இருந்து வெளியில் வந்த கதிரவன் தன் மகளை அடுத்த வகுப்பை கவனிக்க அனுப்பி விட்டு தன் மனைவி மாதவியுடன் காரில் வந்து அமர்ந்தார்.

ஏன் அவ இப்படி செஞ்சான்னே தெரியலைங்க வீட்ல எப்பவுமே புக்கும் கையுமாதான் இறுக்கா எக்ஸாம் இன்னா விழுந்து விழுந்து படிகிறா இருந்தும் என்று யோசித்தார் மாதவி.

யோசிச்சி மட்டும் என்ன பிரயோஜனம் மாது இப்பவே quartaly முடிஞ்சுருச்சி நான் வேற அவளுக்கு மெடிக்கல் college எல்லாம் யோசிச்சி வெச்சிருந்தேன் அவ 11th ல இருந்தே rank  card ல என்கிட்ட sign வாங்கறது இல்லையே நீ தான் பாக்குற எவ்வளவு மார்க் வாங்குறா என்று மனைவியிடம் விசாரித்தார்

மாதவி கூறிய பதிலில் மீண்டும் அதிர்சியனார் 10th ல school first வந்தவள் இதுவரை எதிலும் fail ஆகவில்லை என்றாலும் எல்லா பாடங்களிலும் 50 க்கு மேல் தாண்டவில்லை என்றார்

ரவு 7.30 மணியளவில் டியூஷன் முடிந்து வீடு திரும்பிய மகளுக்கு  சிற்றுண்டி கொடுத்து அவள் உண்டு முடிக்கும் வரை காத்திருந்தார் மாதவி,  பிறகு தனது அடுப்படி வேலைகளை முடித்துக்  கொண்டு அவள் பக்கத்தில் வந்து அமர்ந்து கார்த்திகாவின் தலையை மெல்ல வருடியபடி ஏன்டா கார்த்தி எக்ஸாம் க்கு பிட் எடுத்துட்டு போன என்றார், என்ன சொல்வதென்றே தெரியாமல் தன் அம்மாவை பார்த்தாள் கார்த்திகா.

சொல்லுடா என்னைக்குமே பெத்தவங்க பிள்ளைகளுக்கு தப்பான வழியை சுட்டி காட்டுறது இல்லையே நீ நல்ல பொண்ணு நல்லா தானே படிசிட்டுஇருந்த இப்ப என்னடா உனக்கு கஷ்டம் என்றார் பரிவும் பாசமுமாக விசும்பி அழுத தன் மகளை நெஞ்சோடு சேர்த்து  அணைத்து விவரம் கூறும்படி கேட்டார்.

விசும்பல் மெல்ல அடங்க விவரம் கூரதொடன்கினாள் மகள் "திவ்யா கார்த்திகாவுடைய நெருங்கிய தோழி 11ம் வகுப்பில் வெளியூரில் இருந்து மாற்றலாகி இங்கு வந்து சேர்ந்தாள், கார்த்திகா நன்றாக படிக்கும் மானவியதலால் அவள் குரூப் லீடர் ஆக இருந்தாள், திவ்யா குரூப் ஸ்டுடென்ட் ஆக கார்த்திகாவின் பக்கத்தில் அமர்ந்தாள் விரைவிலையே இருவரும் உயிர் தோழிகள் ஆனனர் class இல்  அனைவரும் ஆச்சர்ய படும் அளவிற்கு. அப்பொழுதான் கார்த்திகாவிற்கு தெரிந்தது திவ்யாவிற்கு ஏற்கனவே boy friend இருந்த விஷயம் அதனாலயே அவள் இந்த பள்ளிக்கு மாற்றலாகி வந்திருந்தால், இருந்தும் அவர்களுக்கிடையில் mobile தொடர்பு இருந்தது தன்னுடைய நெருங்கிய தோழி என்று திவ்யா கர்திகவிற்கு அவனை அறிமுகம் செய்து வைத்தாள் அவசரத்திற்கு என்று கார்த்திகாவின் mobile number யும் கொடுத்தாள் திவ்யாவின் மேல் அவர்கள் வீட்டில் சந்தேகம் இருப்பதால் எங்கும் கர்திகவையே துணைக்கு அழைத்தாள் இவளும் சென்றாள் தோழிக்காக, tution கட் அடித்துவிட்டு பிறகு கார்த்திகாவிர்க்கும் அவசரம் என்ற பெயரில் அவனிடம் இருந்து போன் வர ஆரம்பித்தது இது அதிகமாகி ஒரு கட்டத்தில் உரிமையோடு அளவு கடந்து அவளையே வர்ணிக்கவும்  அசிங்கமாகவும்  பேச ஆரம்பித்து விட்டான், அவனை முழுமையாக தவிர்த்தாள் கார்த்திகா இந்த நிலையில் தான் அவளுக்கு quartaly exam தொடங்கியது அமைதியாக இரண்டு எக்ஸாம் எழுதியவள் மூன்றாம் நாள் exam அன்று திவ்யாவின் காதலன் அவளை பார்க்க வேண்டும் என்று பள்ளிக்கு தொலைவில் அவர்கள் வரும் வழியில் நின்றிருந்தான்.

அவனை பார்த்தவுடன் திவ்யாவை கூட கண்டு கொள்ளாமல் வேகமாக பள்ளிக்குள் விரைந்தாள் கார்த்திகா ஆனால் கோபம் வெறுப்பு அச்சம் என அவளுக்கு படித்தவையெல்லம் மறந்து போய் விடும் போல் இருந்தது கொஞ்ச நேரத்துக்குள் கார்த்திகாவை தேடி அங்கேயே வந்த திவ்யாவிடம் எல்லாமே மறந்திடும் போல இருக்குடி என்றாள்.

திவ்யா கார்த்திகாவை கிளாஸ் ரூம் க்கு அழைத்து சென்று கடைசி பென்சில் யாரும் தங்களை கவனிக்காத படி அமர்ந்தனர் என்ன என்றாள் கார்த்திகா "ஷ் " என்று வாய் மீது விரல் வைத்து தன் பையை திறந்து சிறு துனுக்குளாக  எழுதி இருந்த பேப்பரை அவளிடம் கொடுத்து இதில் 10 மார்க்ஸ் 4 இருக்குடி 2 வது கண்டிப்பாக வரும் வெச்சிக்கோ என்றாள் அதை வாங்கும்போது கார்த்திகாவின் கை நடுங்கியது ஏய் கார்த்தி fail ஆனா அசிங்கம் தான parents meeting வேற வாங்கிக்கோ என்றாள் முதல் முதலாக என்பதால் அவளுடைய அரண்ட முகமே ஆசிரியருக்கு காட்டி கொடுத்து விட்டது அவள் பிட்டை எடுக்கும் முன்பாகவே, அவர் கத்தல் போட்டு கேட்கவும் அழுகையுடன் எடுத்து கொடுத்து விட்டாள்.

களின் விவரம் அறியவும் வயறு காந்தியது மாதவிக்கு,  திவ்யாவின் மேல் அளவு கடந்த கோபத்தில் கணவரின் வருகைக்காக காத்திருந்தாள் 10 மணியளவில் வீடு திரும்பிய கணவருக்கு உரிய பணிவிடைகளை செய்து மகள் தூங்கியதும் விவரம் சொன்னார் மாதவி மனைவி கூறிய விவரம் கேட்டு குற்றவுணர்வில் கதிரவனின் முகம் சிறுத்தது. அவர் ஏதோ சொல்ல வருகிறார் என்று யூகித்து உங்க பழைய நெல்லிக்காய் திருடிய ஆயா கதை பல்பம் தின்ற கதை பென்சில் கடன் வாங்கி திருப்பி தராத கதை எல்லாம் சொல்லி என்ன பாவ மன்னிப்பு கேட்க்கும் church father ஆக்காம உங்க school விஷத்தை தள்ளி வெச்சிட்டு நம்ம பொண்ணு கதையை பார்ப்போமா என்றார் கோபமாக மறுப்பாக தலையசைத்து தனது மனைவியை அயரவைதார் கதிரவன், மாது உனக்கு செந்தில் என்ற பேர் ஞாபகம் இருக்கா என்றார், அவள் ஆம் என்று தலையசைக்கவும் அவன் love marriage பண்ணிக்கிட்டான் ஆனா 19 வயசுலையே அவனோட love  க்கு நாங்கதான் காரணம், பிரதீப்பும் நானும் சும்மா ஸ்கூல் time  ல வர infactuation அ ஊதி ஊதி பெருசாக்கி love ஆ மாறவெச்சோம் ஏற்கெனவே அவன் sports champion அவனுக்கு school ல hero image அந்த பொன்னுக்கும் இவன் மேல ஒரு affection இருந்திருக்கும் போல அவங்க ரெண்டு பேரும் போகும் போதும் வரும் போதும் பார்த்துப்பாங்க உன் ஆளுன்னு சொல்லி சொல்லி கடைசில ரெண்டு பேரும் ஓடி போய் கல்யாணமே பண்ணிக்கிட்டாங்க discipline கெட்டு போச்சின்னு headmaster அவங்களுக்கு tc கொடுதுட்டாறு இப்போ ஆட்டோ ஓட்றான் பார்க்கவே ரொம்ப கஷ்டமா இருக்கு முதல்ல நாங்க அவன avoid பண்ணோம் இப்பவெல்லாம் ஊருக்கு போனா எங்கேயாவது என்னை பார்த்தா கூட அவனே என்னை ஒதுக்க ஆரம்பிச்சிட்டான் என்று வருத்தமாக முடித்தார். நண்பர்கள் என்றாலே ஏன் ஒருசில parents பயபட்ராங்கன்னு  இப்போதுதான் புரியுது நண்பர்களோ தோழிகளோ உண்மையாக தன்னை நம்பும் தோழர்களுக்கு போதிமரமாக இருக்கணும்னு அவசியமில்லை ஆனா சாக்கடையை காட்டி கொடுக்காம இருந்தா போதுமே, நாம அடுத்தவாட்டி ஊருக்கு போகும்போது கண்டிப்பாக செந்தில் அண்ணாக்கிட்ட sorry சொல்லிடுங்க என்று கூறி உறங்கபோனர்.

டுத்த நாள் அழகாக விடிந்தது மகள் டியூஷன் செல்லும் போது தனது கணவரை வாக்கிங் என்ற பெயரில் கூட்டி போய் கூட்டி வர செய்தார், மாதவி  இரவு மகளுடனே அதிக நேரம் செலவிட்டு நிறைய கதைகள் பேசினார் சிரிக்க வைத்தார் மகளின் மனதில் உயிர் தோழியின் இடத்தை பிடித்தார் மேலும் மேலும் படிப்புதான் எல்லாம் என்று அவள் மனதில் பதியும் படி நிறைய விஷயங்கள் மேற்கோள் காட்டி கூறினார் கதிரவனும் மாதவியும் முடிவெடுத்து திவ்யா உடைய பெற்றோரிடம் விஷயத்தை கூறினர்  அன்று மாலை பள்ளி முடிந்து tution கூட போகாமல் வீடு வந்து தனது அறையில் அழுது கொண்டிருந்தாள் கார்த்திகா, பின்னோடு வந்த மாதவி என்ன ஏது என்று கேட்டதற்கு அவள் தான் தனது காதல் விஷயத்தை பெற்றோரிடம் கொண்டு சென்றதாகவும் தனக்கு அவள் மேல் பொறமை என்றும் கத்தினாளாம் கேள்வியாக நோக்கிய தன் தாயிடம் திவ்யாவின் காதலன் தன்னிடம் தவறாக பேசியதை அவளிடம் கூறிய போது அவள் அதீத கோபம் காட்டி என்னிடம் அவனை பற்றி தவறாக பேசாதே என்று இரண்டு நாட்கள் கார்த்திகாவிடம் பேசவில்லையாம் அதனால்தான் இப்போது பொறாமை என்று ஒரேஅடியாக clean cut செய்து விட்டாளாம். அனைத்தும் நன்மைக்கே என்று கருதினார் மாதவி மகாபாரத்தில் கர்ணனின் இன்றியமையாத நட்பை சுட்டிக்காட்டி திவ்யா கார்த்திகாவிடமிருந்து விலகியதே அவள் வருங்காலத்திற்கு நன்மை என்று புரியவைத்தார்.

கூடா நட்பு கெடென முடியும் என்று கதிரவனும் அதையே வலியுறித்தினார் படிப்பில் கவனம் செலுத்தும் படி கூறினார்.

அடுத்த நாளிலிருந்து கடவுளிடம் வேண்டும் பொழுது தன் நண்பனுக்காகவும் வேண்டினார் கதிரவன் அடுத்த தரம் தன் நண்பனை நேரில் சந்தித்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நினைத்தார்,  செந்தில் கதிரவனை மன்னிப்பாரா.......... ?

This story is dedicated to my friend Mohana Priya. ............ by R. Rajalakshmi.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.