(Reading time: 7 - 13 minutes)

புகையாய் வந்தானே - கீர்த்தனா

"நாம் இருவர் நமக்கு ஒருவர்" என்ற அரசாங்கத்தின் ஆணைக்கிணங்க அழகான குழந்தையை பெற்றெடுத்து பெயர் சொல்ல ஒன்றே போதும் என்று எண்ணி  மிக்க மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தனர். செல்வம்-சந்திரா தம்பதியினர். அந்த குழந்தைக்கு குரு என்று பெயரிட்டு  அழைத்து வந்தனர்.

செல்வம் சென்னையில் உள்ள கட்டுமான துறையில் கொடிகட்டி பறக்கும் கம்பனெியில் மேனேராக பணிபுரிந்து வருகிறான். கை நிறைய சம்பளம், கண்ணுக்கு அழகான மனவைி மற்றும் பெயர் சொல்ல பிள்ளை என மகிழ்ச்சியான வாழ்க்கை செல்வத்திற்கு.

சென்னை கிண்டியில் உள்ள ஐந்து மாடி குடியிருப்பில்  2-வது தளத்தில் வசித்து வந்தனர் செல்வம் குடும்பத்தினர்.

புகையாய் வந்தானே

சந்திராவை பற்றி சொல்ல வேண்டும் என்றால் தன் மனம் கவர்ந்த செல்வத்தை கரம் பிடிக்க, திருமணத்திற்கு முன் மனம் விரும்பி செய்து வந்த ஆசிரியர் பணியை தியாகம் செய்தாள்.

எவ்வளவு மகிழ்ச்சியான வாழ்க்கை அமைந்தாலும் குறையில்லா மனிதர்களேது ஆம் செல்வத்திற்கும் ஒரு குறை உண்டு அது புகை பிடிக்கும் பழக்கம்.

காலை 8.30 மணிக்கே மீட்டிங் என்று செல்வம் கூறியதால் அதிகாலையிலேயே எழுந்து வீட்டு வேலைகளை செய்ய ஆரம்பித்தாள் சந்திரா. 8 மணிக்கு கிளம்பினால் தான் சரியாக இருககும் என்று எண்ணி கொண்டே சாப்பிட அமர்ந்தான் செல்வம். அவசரமாக அள்ளி சாப்பிட்டவனை மெதுவாக சாப்பிட சொன்னாள். (மனைவி சொல்வதை கணவன்மார்கள் செய்து விட்டால் அது உலக அதிசயமாகி விடாதா!!!) நம் செல்வமும் வேகமாக தான் சாப்பிட்டார்.

உணவு உண்டு முடித்தவுடனே  புகை பிடிக்க வேண்டும் செல்வத்திற்கு.சாப்பிடும் போது இருந்த அவசரம் இப்பொழுது இல்லை பொறுமையாக ரசித்து புகை பிடித்து கொண்டிருந்தான் வீட்டுக்குள்ளேயே.  அவனை முறைத்தாள் சந்திரா.

"நீங்க பண்றது கொஞ்சமாவது நல்லா இருக்கா ஏன் இப்படி புகை பிடிச்சு உங்க உடம்பை கெடுத்துக்கறதும் இல்லாம எங்க உடம்பையும் கெடுக்கறீங்க" என சரமாரியாக வசை மாரி பொழிந்து கொண்டிருந்தாள்.

அவன் கண்டு கொண்டால் தானே தினம் நடக்கும் கூத்து தான் இது. பழகி விட்டது அவனுக்கு.

மாலை 6 மணி அளவில் மிக சோர்வுடன் வீடு திரும்பிய செல்வத்தை பார்க்க பரிதாபமாக தெரிந்தது சந்திராவிற்கு. தனக்காகவும் தன் மகனுக்காகவும் தான் இப்படி ஓடி ஓடி வேலை செய்கிறான் என பெருமையாக எண்ணியபடியே அவனுக்கு காபி  கலந்தாள். காபி கொஞ்சம் கசப்பாக இருக்க வேண்டும் செல்வத்திற்கு. கலந்த காபியை ஒரு வாய் குடித்து பார்த்து விட்டு எல்லாம் சரியாக அமைந்த காபியை புன்னகையுடன் எடுத்து சென்று கணவனிடத்தில் நீட்டினாள். அவனும் இதழோரத்தில்  சிறு புனன்னகையுடன் வந்த மனைவியை ரசித்து பார்த்தபடி காபியை வாங்கி காண்டான்(ஒரு காபிக்கு இவ்வளவு அலப்பறையானு நீங்க கேக்கறது எனக்கு கேக்குது)

மாலை நேர உலவலுக்கு மொட்டை மாடிக்கு வந்த செல்வத்தின் கையில் சிகரெட் இருந்தது. மாடியிலிருந்து பார்த்த போது ஒரு விடலை பையன் திருட்டு த்தனமாக சிகரெட் பிடித்து கொண்டிருந்தான். அவனை பார்த்தவுடன் செல்வத்திற்கு பழைய ஞாபகங்கள் வந்து விட்டது. நண்பர்களிடம் சவால் விட்டு முதல் முதலாக குடித்த சிகரெட் அதை தொடர்ந்து வீட்டில் மாட்டி வாங்கிய அடிகள் எல்லாம் நினைவு வர சிரித்து கொண்டான். சந்திராவிற்காவது சிகரெட் பிடிப்பதை குறைக்க வேண்டும் என எண்ணி கொண்டு கீழிறங்கி வந்தான்.

குரு எப்படி நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே போனானோ  நாட்களும் அப்படியே சென்று கொண்டிருந்தன. இரண்டு வருடம் விளையாட்டு போல் ஓடி விட்டது. இந்த இரண்டு வருடங்களில் அவர்கள் பொருளாதார நிலையில் எவ்வளவு மாற்றம் வந்தாலும் மாறாத விஷயம் செல்வத்தின் புகைப்பழக்கம்.

ருநாள் இரவில் குரு தொடர்ந்து இருமிக் கொண்டிருந்தான். காலையில் நன்றாகி விட்டான். மறுபடியும் அடுத்தநாள் இரவிலும் தொடர்ந்து இருமி அந்த சிறு குழந்தை படாத பாடு பட்டு விட்டான். மருத்துவரிடம் அழைத்து சென்றார்கள். மருத்துவரும் பரிசோதித்து விட்டு குளிர் காலத்தினால் தான் இந்த பிரச்சனை என்று மருந்து எழுதிக் கொடுத்தார்.

சில நாட்கள் குரு பழையபடி சாதாரணமாக இருந்தான். செல்வம் வேலைக்கு சென்ற பிறகு, சந்திரா மதிய உணவிற்காக சமைத்து கொண்டிருந்தாள். குரு வரவேற்பறையில் விளையாடிக் கொண்டிருந்தான். திடீரென அந்த சிறு குழந்தை மூச்சு விட கஷ்ட்டபட்டு கொண்டிருப்பதை எதைச்சையாக வரவேற்பரையை எட்டி பார்த்த சந்திரா அதிர்ச்சி அடைந்தாள்.

அவசரமாக மருத்துவமனைக்கு தூக்கி சென்றாள். மருத்துவமனையை அடைவதற்கு முன்பே சாதரணமாக மாறி விட்டான். மருத்துவர் பரிசோதித்து விட்டு சில பரிசோதனைகளுக்கு எழுதிக் கொடுத்தார். பரிசோதனையின் முடிவு அவர்கள் சற்றும் எதிர் பார்க்காதது. முடிவை பார்த்த மருததுவரும் அதிர்ச்சி அடைந்தார். அவர் அனுபவத்தில் எவ்வளவோ பார்த்திருந்தாலும் அவரும் மனிதர் தானே. பரிசோதனை முடிவையும் தாயின் மடியில் சமர்த்தாக சிரித்து கொண்டிருந்த அச்சிறு  குழந்தையையும் மாறி மாறி பார்த்தார்.செல்வமும் அதற்குள்ளாக மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தான். குருவை எண்ணி பரிதாபட்டு கொண்டே சந்திரா மற்றும் செல்வத்திடம் பேச ஆரம்பித்தார்.

திரு.செல்வம் என்னை மன்னித்து விடுங்கள் இதை சொல்ல எனக்கும் சிரமமாக இருக்கிறது உங்கள் குழந்தைக்கு ஆஸ்த்துமா. இதைக் கேட்ட இருவரும் அதிர்ச்சி அடைந்தனர். இப்பொழுது என் கேள்விக்கு பதில் சொல்லுங்கள்.

நீங்கள் உங்க குழந்தையை அதிகமாக வௌயே அழைத்து செல்வீர்களா?

'இல்லை' என்றனர் இருவரும்

நீங்கள் வீட்டில் புகை பிடிப்பீர்களா? என்று சரியாக கேட்டார்.

சிறு அதிர்ச்சியுடன் 'ஆம்' என்றான் செல்வான்.

மருத்துவரும் அதுதான் உங்கள் குழந்தையின் இந்த நிலைக்கு காரணம் நீங்கள் செய்த தவறு உங்கள் குழந்தையை பாதித்து விட்டது.

மருத்துவம் முன்னேறி விட்ட இந்த காலத்தில் பயப்பட தேவையில்லை. ஆஸ்த்துமாவை கட்டுக்குள் கொண்டு வந்து விடலாம். அதற்கு அவனுடைய உணவிலும் நீங்க கவனம் செலுத்த வேண்டும் என்றார். 'நிச்சயமாக' என்று கூறினாள் சந்திரா.

முதலில் அவனுக்கு பால் மற்றும் பால் பொருட்கள் கொடுப்பைதை நிறுத்த வேண்டும்

இயற்கையாக விளைந்த காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகமாக கொடுங்கள்.

ஒமேகா-3 உணவு பொருட்களை கொடுங்கள்.

தண்ணீர் அதிகமாக கொடுங்கள்.

கோதுமை சோயா சோளம் மற்றும் சர்க்கரை கொடுப்பதை ஒரு எட்டு வாரத்திற்கு தவிருங்கள்.

மாசு அதிகம் உள்ள இடத்திற்கு அழைத்து செல்ல வேண்டாம்.

கடைசி ஆனால் மிக முக்கியமானது திரு.செல்வம் நீங்கள் புகை பிடிப்பதை நிறுத்த வேண்டும்.

இப்பொழுதே என் குழந்தை மீது சத்தியம் செய்கிறேன் "இனிமேல்  புகை பிடிக்க மாட்டேன்" என்றான். மருத்துவர் புன்னகை புரிந்தார் கண்களில் ஆனந்த கண்ணீருடன் செல்வத்தை ஏறிட்டாள் சந்திரா.

ருத்துவர் எழுதி கொடுத்த மருந்துகளை வாங்கி கொண்டு வீடு வந்து சேர்ந்தனர். சந்திரா இருநதாலும் மனசு கேட்காமல் செல்வத்தை திட்டினாள். உங்களால் தான் என் குட்டி செல்லத்திற்கு இந்த நிலைமை. நான் எவ்வளவு முறை சொன்னேன் கேட்டீர்களா? என்று சண்டையிட்டாள். செல்வத்தின் கண்களில் கண்ணீரை பார்த்த உடனே சந்திரா அமைதியாகி அவனை சமதானப்படுத்தினாள்.

மருந்துகளின் விளைவுகளாலும் சந்திரா மற்றும் செல்வத்தின் கவனிப்பாலும் குருவின் ஆஸ்த்துமா கட்டுக்குள் வந்தது. மருத்துவரே ஆச்சரிய ப்படும் அளவுக்கு குரு வேகமாக முன்னேறினான்.

நாட்கள் மாதங்களாகி மாதங்கள் ஆண்டுகளாகி குருவும் பள்ளிக்கு செல்ல ஆரம்பித்தான். அதன் பிறகு அவன் உடல் நிலையில் பின்னடைவு ஏற்படவில்லை.

மாநிலத்தில் முதலாவதாக வந்தான் பள்ளி இறுதியாண்டில். சென்னை ஐஐடியில் மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் துறையை தேர்ந் தெடுத்து படித்தான். அவனை பார்க்க பார்க்க செல்வத்திற்கும் சந்திராவிற்க்கும் பெருமையாக இருந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.