(Reading time: 3 - 6 minutes)

முதல்  ஞாயிறு - மனோ ரமேஷ்

ண்டே காலைல ஆபீஸ் இல்லைனாலும், சனிக்கிழமை நைட் நாளைக்கு சண்டே அப்படின்னு தோன்ற சந்தோஷ குமிழி இல்லாம தூங்க போவேனா. எப்போவும் எவ்ளோ அழகுன்னு ரசிக்கவைக்கிற, மலையிலிருந்து  கலையாம ஓய்வு எடுக்கற மேகத்து மேல நான் மத்த சண்டே துங்கற நேரத்துல ட்ரைன்ல போய்கிட்டு இருக்கேன், நீ இன்னும் தூங்கறையானு கோபமா வருமா.

இதெல்லாம் நடந்துச்சு, சண்டே நைட் ட்ரைன்க்கு டிக்கெட் கிடைக்காம காலைலேயே வீட்ல இருந்து கெளம்பி சென்னைக்கு போனப்போ....

எப்போதும் தென்றலை மட்டும் தரும் என் ஜன்னலோர இருக்கை முதல்தடவை வெயிலையும் தந்தது. எப்போதும் நூலக அமைதியாக தெரியும் ரயில், இன்று ஏனோ திருவிழா தெருவாக தெரிந்தது எதிர் சீட் வாண்டுகளால்.

Sunday

ஏழு மணி நேரமும் கண்மூடி திறப்பதற்குள் கடந்து போய்விடும் மற்ற நாட்களில், இப்போது எத்தனை முறை முன்றும் இந்த 5 மணி நேரம் கடக்கவே இல்லை. (என் நல்ல நேரம் 3 சின்ன பிள்ளைங்க இருக்க இடத்துல சீட் போட்டாங்க.)

ட்ரைன்ல பொம்மை மத்த திங்க்ஸ்லாம் விக்கறவங்கள இந்த காலை ட்ரைன் தான் எனக்கு அறிமுக படுத்தியது.

M.B.A பசங்களுக்கு இன்டர்நேஷனல் conference கூட்டிபோய் People Management, மார்க்கெட்டிங் கத்துகொடுக்கறது பதிலா இவங்களோட ஒருநாள்  அனுப்பினா நெறைய கத்துக்குவாங்க. குழைந்தைகளை எப்படி கவர்ந்தா வியாபாரம் ஆகும்னு கரெக்டா தெரிச்சு வெச்சி இருக்காங்க.

எப்போவும் வர எக்மோர் ஸ்டேஷன் இல்லாம சென்ட்ரல் வந்து இறங்கினேன். எக்மோர் ல அதிகமா பார்க்கர போர்டர்ஸ் இங்க கம்மியா தான் இருந்தாங்க. எப்போ அவங்கல பார்த்தாலும் bag வெயிட்டா இருக்குனு காலேஜ்லையே வெச்சிட்டு வர 6-சப்ஜெக்ட் நோட் தான் ஞாபகம் வரும்.

முதல் முறையா காலை நேரத்துல எலெக்ட்ரிக் ட்ரைன் ல போறேன். என்னோட 5.45 am ட்ரைன் இவ்வோளோ பரபரப்பா இருந்ததே இல்ல.

எங்களை தனி பிறவியா பார்க்காதீங்கன்னு சொல்ற மூன்றாம் பாலினம் தனியா பார்கறதா வெச்சு வாழ்க்கையை எப்படி ஓட்டலாம்னு யோசிச்சு இருக்காங்கனு இந்த எலக்ட்ரிக் ட்ரைன் ல தான் எனக்கு  தெரியும்.

பூ வித்துட்டு வந்த சின்ன பசங்க - மறுபடியும் எனக்கு இவங்க மார்க்கெட்டிங் பத்தி சொல்லி ஆகனும். கடைசி பாக்கெட் கா வித்துட்டா வெட்டுக்கு போய்டுவேன்னு அவன் சொன்னது வாங்கிட்டேன் இதே அவனோட அப்பாவோ அம்மாவோ இருந்தா நாமதான் பூ எல்லாம் பெருசா வெக்க போறதில்லையேனு வாங்காம விட்டுருப்பேன் ஆனா அந்த பையன் சண்டே வேலை முடிச்சி வீட்டுக்கு போகட்டுமேன்னு வாங்கிட்டேன் என் ரூம்மேட் பூஜை பண்ணுவாங்க அவங்ககிட்ட கொடுத்தடலாம்.

சைதாப்பேட்டைல வந்து வழக்கம்போல இறங்கனா ஸ்டேஷன் இவ்வோளோ வெளிச்சமா இருக்கு. எப்போவும் போற ரூட்லதான் போனேன் அனா புதுசா ஒருத்தர் பார்த்தேன். ஓரமா போங்க ஓரமா போங்க வண்டிய எல்லாம் அவங்க இஷ்டத்துக்கு ஓட்டுவாங்க நீங்க பாத்து போங்கனு சொல்லிட்டு இருந்தாரு அவருக்கு என்ன பிளாஷ்பாக்கோனு தோனுச்சு.

மத்த காலைல டைம விட வேகமா என் ஹாஸ்டல் ரோடு வந்துடுச்சு. சண்டே மத்தியான மவுண்ட்ரோடு வேகத்துக்கு என் கால் அதுவா TUNE ஆகிடுச்சி போல.ஆனா காலைல 5.45 கு என்னை சுத்தி எல்லா கோணத்திலையும் தெரியற என் நிழல் இந்த பரபரப்புல என்னை விட்டு எங்கேயோ போய்டுச்சு. அதுக்கு பதிலா நெறைய விசயம் மூளை முழுக்க நிரஞ்சிடுச்சு.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.