(Reading time: 12 - 24 minutes)

என்னை வென்றவள் நீயடி - அக்தர்

This is entry #03 of the current on-going short story contest! Please visit the contest page to know more about the contest.

மின்னொளியின் பொட்டு கூட தடையமின்றி கருகும்மென்று இருளையே கருவாய்க் கொண்ட இரவு. அந்த வீட்டின்  பெரிய மதில் சுவரின் வழியாக முதலில் ஒரு கருப்பு நிற பை வந்து விழுந்தது... அதன்  பின்னாடியே ஒரு பெண்ணும் "தொபீர்" என்று விழுந்தாள். கை கால்களை உதறியபடி பையை தூக்கிக் கொண்டு வேகமாக தெருவின் எல்லையில் மறைவாக நிறுத்தப் பட்ட காரை நோக்கி ஓடினாள். கார் அருகில் அடைந்ததும் நிம்மதி பெருமூச்சு விட்டப்படி அவசரமாக கதவை திறந்து அமர்நதாள். ட்ரைவிங் சீட்டில் அமர்ந்திருந்தவனும் இவளுக்காகவே காத்திருந்ததுக்கு சான்றாக அவள் அமர்ந்ததும் வண்டியை வேகமாக ஓட்ட தொடங்கினான்.முழுதாக இரண்டு மணி நேரம் நிசப்தமாக பயணமான கார் ஓரிடத்தில் க்ரீச் என்ற சத்தத்துடன ஒரு மரத்தடியில் நின்றது. இரண்டு நிமிடம் இருவரும் ஒருவர் கண்ணுக்குள் மற்றொருவர் கறைந்து விடுவது போல் பார்த்தனர். திடீரென்று இருவரும் வாய் ஓயாமல் கலகல வென சிரிக்க ஆரம்பித்தனர்.  இந்த சம்மந்தமில்லா சிரிப்பிர்கு காரணம் அறிய ஒரு எட்டு மாதங்களுக்கு முன்  போகுமளவு கால முள்ளை நகர்த்துவோம் .....

ட்டு மாதங்களுக்கு முன் ......

அர்ஜுன் , சொந்த ஊர் திருநெல்வேலி . பல கோடி  சொத்துக்கள் இருந்தும் வாழ்க்கையில் இன்பம்  காணும் ஆசையே பி.இ கணினி படித்து முடித்தவுடன் பெங்களூரில் உள்ள பெரிய பன்னாட்டு நிறுவனத்தில்  மென்பொருள் பொறியாளர் வேலையில் அமர்த்தியது. பெண்கள் என்ற தலைப்பை பொருத்த வரையில் நீ லூசா நானும் லூசு என்பது போல் அவனிடம் எப்படி நடந்து கொள்கின்றனரோ அதை பொருத்து அவனும் பழகுவான். மீசைக்காரர்களுக்கிடையே ஆறடி உயரத்தில் கிரேக்க சிலை போல் உள்ள அர்ஜுனுக்கு படிப்பு வேளை காரணம் கொண்டும் குடும்பத்துக்குள் தனி மவுசு..பாசமாக  கூப்பிட்டார்களே என ஊருக்கு வந்த பாவத்திர்கு கல்யாணம் செய்து வைப்பார்கள் என அவன் கனவிலும் நினைக்கவில்லை....

ennai vendraval neeyadi

ப்ரியா சொந்த ஊர் மதுரை , என்ன தான் சென்னையில் உள்ள பெரிய கல்லாரியில் நகை வடிவமைப்பாளர் படிப்பை படித்தாலும் அப்பாவின் பேச்சை தட்டாத  குழந்தை தனம் மாறாத பெண்.... வேலை கிடைத்த செய்தியை வீட்டில் சொல்ல வந்தவளுக்கு பாவம் தன் அப்பா பெரிய இடியை தலையில் இறக்குவார் என நம்ம கதாநாயகியும் எதிர்ப்பார்க்கவில்லை…

நட்பை உறவாக்க எண்ணி செல்வராஜும்(அர்ஜுனின் அப்பா) ரத்னப்பிள்ளையும் (ப்ரியாவின் அப்பா) எடுத்த தீர்வின் முடிவு தான் இந்த இரு துருவங்களின் திருமண பந்தம்...

இன்றோடு இருவருக்கும் திருமணமாகி முழுதாக இரண்டு நாட்கள் முடிந்திருக்க  வேலையை காரணம் காட்டி தப்பிக்க நினைத்தவனை இரயில் ஏற்றி விட வருகிறோம் என்ற  பெயரில்  ஊர் பஞ்சாயத்து தலைவர் உட்பட நான்கு வண்டி நிரம்பி வழியுமளவு உள்ள சொந்த பந்தங்களுக்கிடையே  இரயில் நிலையத்தில் ப்ரியாவும் அர்ஜுனும்...... கண்ணீர் நிறைய எல்லோரிடமும் விடைப் பெற்று கூட வந்தவளை ஏதோ சைனீஸ் படம் பார்ப்பவன் போல் புரியாமல் பார்த்தவன் 

"எதுக்கு இப்ப தேவையில்லாம அழற.... ஜஸ்ட் ஸடாப் இட்" என்று முடிப்பதற்குள்

" உன் வேலைய மட்டும் பாரு " என்ற ப்ரியாவின் வார்த்தைகளில் ஐ.டி வாரியர் அர்ஜுன் அடங்கிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்க வேண்டிய விஷயம்.......

எப்படியோ ஓன்பது மணி நேரம் வாய் சண்டை கண் முறைப்புகள் என ஒரு வழியாக பெங்களூர் நகரத்தில் உள்ள ஒரு பெரிய அப்பார்ட்மென்ட்டை வந்தடைந்தனர்.....

"இதான் நம்ம ப்ளாட்டா " என்று கண்கள் விரிய ப்ரியா கேட்க

"ஆமாம் இதான் என் ப்ளாட்" ... என்ற பதிலுக்கு  பின் ஞே என விழித்தவளை கண்டு சிரிப்பை அடக்க படாத பாடு பட்டான் அர்ஜுன். ப்ரியாவிர்கு தனி அறையை ஒதுக்கி தந்ததோடு அன்றிரவு இருவரும் பயண கலைப்பில் உறங்கியும் போனார்கள்...

டுத்த நாள் காலையில் அர்ஜுன் எப்பவும் போல் அவசர அவசரமாக எதையோ தேடிக் கொண்டே டையை கட்டியப்படி அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்தான்.... காபியை உறிஞ்சிக் கொண்டு வந்தவள் எதோ உயரமான ஒன்றின் மேல் முட்ட

"இங்க யாரு இந்த தூண் கொண்டு வந்து வெச்சா" என நிமிர்ந்தவளின் கண்முன் மூக்கு விடைக்க நின்றவன்

"ஏய்" என்று ஆரம்பித்து

"எக்ஸ்பிஷன்ல வைக்க வேண்டியதெல்லாம் என் தலையில கட்னாங்க பாரு " என்று முடிக்கும் வரை அவள் காலி காபி கப்பை விட்டு பார்வையை  அகற்றவில்லை...

ஆபிஸ் கேட்டிர்குள் ஐ.டி கார்டை உயர்த்தி காட்டியபடி பைக்கை ஓரங்கட்டிவிட்டு  நகர்ந்தவனிடம்

"ஹேய் அர்ஜுன் இதென்ன ட்ரஸ்ஸிங்  டிப்ரன்ட்டா இருக்கு பட் இதுலயும் ஸ்மார்ட்டா தான் இருக்க" என்று குரலில் ஒன்ற டன் வழிசலுடன் அருகில் வந்த  டி.எல் நிலாவை பார்த்து மனதில் ஐயே என்று தலையில் அடித்துக் கொண்டாலும் வெளியில்  "ஹி ஹி" என்று இளித்து வைத்தான். உள்ளே வந்த நண்பனை அணைத்த ஹரி

"கங்க்ராட்ஸ் மாப்ள, கையில மோதிரம் கழுத்தில சங்கிலி லகலகலக சட்டை கோட் கலக்கரேல் அர்ஜுன்,என்ன சொல்ராப்ல நம்ம மதுரக்கார தங்கச்சி" என்றவனிடம்

"போடா டேய் போய் க்ளைன்ட் கேட்ட வடைய சுட்ற வழிய பாரு, என் பொழப்ப என்ட்ட கேட்டா தான் தெரியும்" என்று முனங்கி விட்டு போனவனை புது ப்ராஜக்ட் சம்மந்தமான மீட்டிங் தகவலுடன் அவன் கணிணி வரவேற்றது..

மாலை வீட்டில் நுழைந்தவன் ஒரு நிமிடம் ஷாக் அடித்தது போல் நின்றான்...அதற்கு காரணம் ப்ரியாவே தான் , சின்ன பெண் போல் பாவாடை சட்டை அணிந்து வாயில் எதையோ நொறுக்கியப்படி வைத்த கண் வாங்காமல் டீவியை பார்த்துக் கொண்டிருந்தாள்... உள்ளே வந்து அவளருகில் அமர்ந்தவன் டீவியை பார்த்தவுடன் மானசீகமாக தலையில் அடித்துக் கொண்டான்...  சோட்டா பீமை ஏதோ பேய் பட எபக்டில் பார்த்தவளை என்னவென்று சொல்வது..

"ஏய் பொம்ம படம் பாக்கர வயசா இது" என்றவனை பார்த்து  டீவியிலிருந்து  சிறிதும் கண் அகற்றாமல்

"என் கண்ணு என் காது நீ யாரு" அவள் கேட்ட விதத்தில்  கோபம் வந்தாலும் அடக்கிக் கொண்டு

"உன்னோட புருஷன்" என்றான்

"ஓ...சொல்லவே இல்ல" ஏளனமாக கேட்டவளளைக் கண்டு அர்ஜுனின் பொறுமை பறந்தது..... அப்புறம் என்ன? எப்பவும் போல் மூன்றாம் உலகப் போர் தான்...இப்படியே ஆறு மாத காலமும் உருண்டோடியது... இதில் அவர்களுக்கிடையே நடக்கும் சிறு பிள்ளை தனமான சண்டைகளில் எந்த மாற்றமும் இல்லாமலிருந்தாலும் அர்ஜுனின் மனம்  ப்ரியாவின் குழந்தைத்தனமான குணத்தில் சற்று வழுக்கித்தான் போனது.... இப்போதெல்லாம் இவள லவ் பண்ணி தொலையிரமோ? என்று இவனுக்கே சந்தேகம் தோன்ற ஆரம்பித்துள்ளது என்றால் பாருங்களேன்... இதற்கிடையில் ஆன்சைட் என்று  புது ப்ரோஜக்ட் சம்மந்தமாக ஒரு மாதம் வெளிநாடு போக நிறுவனத்தால் இவனை தேர்வு செய்து கிளம்பும் நாளும் வந்தாகிவிட்டது..... எல்லோரிடமும் விடைபெற்று கிளம்பியவனின் மனம்  என்றுமில்லாமல் ப்ரியாவையே சுற்றி வந்தது. விமானத்தில் அமர்ந்து கண் மூடியவனின் நினைவில் ஆறு மாத காலமாக ப்ரியாவின் குறும்புகளும்  அவளை ரசித்த நிமிடங்களும் அழகாக விரிந்து..

ஊருக்கு போன போது தன் தங்கையிடம் பரதநாட்டியம் தெரியும் என பொய் சொல்லி ஒரு பாட்டை போட்டு விட்டு ஜிங்கு ஜிங்கென்று ஆடியது, காய்ச்சல் வந்த போது ஊசியை பார்த்த பயத்தில் டாக்டரை மதுரை பாஷை பேசி கலவரமாக்கியது, சமைக்க தெரியும் என தன்னிடம் வாயை விட்டு சமையலறையை புகை மண்டலமாக்கியது, அவளின் அப்பா வந்த போது சோட்டா பீமை பற்றி தீவரமாக பேசி  அரசியலில் ஆர்வமுள்ள அவரை கடுப்பேற்றியது,ஊருக்கு போன பின் ஒரே அறையில் உறங்கிய போது தூக்கத்தில் பலவாறு உருண்டும் உளரியும் தன் தூக்கத்தில் கல்லை போட்டது... என நினைவுகள் நீண்டு கொண்டே போனது . இதை முடித்துவிட்டு ஊருக்கு போனவுடன் முதல் வேலையாக மனதில் உள்ளதை உடைத்து விட வேண்டும் என முடிவு எடுத்த பின்பு ஏனோ அர்ஜுனுக்கு ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு யுகம் போல் கழிந்தது....

அங்கு  அவன் நிலைமை அப்படியென்றால் இங்கு ப்ரியாவின் மனமும் காரணமே இல்லாமல் அவனின் குரலை கேட்க வேண்டும் என அடம்பிடிக்க ஆரம்பித்திருந்தது.... தான் எதாவது தப்பு செய்து விட்டு முழிக்கும் போது தன்னை முறைத்துவிட்டு "ஏழரைய கூட்டாத" என்று முனங்கிவிட்டு போகும் தோரணை, தீவரமாக க்ரிக்கட் பார்க்கும்போது போனில் நண்பர்கள் அழைத்தால் ட்ரைவிங்கில் இருப்பதாக வாய் கூசாமல் பொய் சொல்லும் களவானித்தனம் என ப்ரியாவையும் அவனின் நினைவுகள் ஒரு வழி செய்துதான் இருந்தது..... அப்படி இப்படி என ஒருவழியாக அர்ஜுன் வரும் நாளும் வந்துவிட்டது....

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.