(Reading time: 11 - 22 minutes)

பாரதி – அஜிதா

This is entry #08 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

"செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்ப தேன் வந்து பாயுது காதினிலே " பாட்டை ரசித்து கேட்டு கொண்டிருந்தாள் பாரதி (இவதாங்க நம்ம கதையின் நாயகி ). பாரதி , பெயருக்கேற்றார் போல் ரதி போன்ற அழகி. முழுநிலவை போன்ற வட்டமான முகம். கோதுமை நிறத்தில் தங்கமென ஜொலித்தாள். அழகிய கண்கள் அளவாய் மூக்கு, சிவந்த உதடுகள் என காண்போரை மறுபடியும் காணச் செய்யும் அழகிய நிகழ் கால பெண். அழகு மட்டும் இல்லாமல் அறிவிலும் சிறந்தவள் நம் பாரதி .குடும்ப வறுமையின் காரணமாய் பள்ளி படிப்பை பத்தாம் வகுப்போடு நிறுத்த வேண்டிய சூழ்நிலை. தற்போது தையல் வகுப்பு போய் கொண்டு இருக்கிறாள். ஒரே பெண், அப்பா சுண்டல் வியாபாரி அம்மா அப்பாவிற்கு உதவியாய் இருக்கிறார் . வரும் வருமானம் கைக்கும் வாய்க்கும் சரியாக இருக்க, தன் ஒற்றை செல்ல மகளை மேற்கொண்டு படிக்க வைக்க முடிய வில்லையே என தவிக்கும் பெற்றோர். அறிமுக படலம் போதும் கதைக்கு வானு மைண்டு வாய்ஸ் நு நெனைச்சு நீங்க வெளிய சொல்றது எனக்கு கேட்ருச்சு பாஸ்.இதோ வந்துட்ட.

அம்மா அம்மா என ஆசையோடு தையல் வகுப்பை முடித்து விட்டு ஓடி வந்த மகளை அன்போடு அணைத்து கொண்டு, " என் செல்ல பொண்ணு எவ்ளோ அழகு , என்னாச்சு என் தங்கத்துக்கு இன்னைக்கு இவ்ளோ சந்தோஷமா இருக்கு " என்று கேட்டு கொண்டே தன் மகளை அருகில் அமர செய்தார். பாரதி ஒரு சிறு துள்ளலுடன் தன் தையல் வகுப்பில் பெற்ற பாராட்டினை மகிழ்வோடு சொல்லி கொண்டு இருந்தாள். பொறுமையாய் கேட்ட தாய் தன் மகளின் திறமையை எண்ணி கட்டியணைத்து உச்சி முகர்ந்தார்.

வேலை முடிந்து உள்ளே வந்த அப்பா, என்னடா ரதிமா இன்னைக்கு ரொம்ப சந்தோஷமா இருக்க என்னாச்சு என்று கேற்க அதே தையல் வகுப்பு பாராட்டினை அப்பாவிடமும் மூச்சு விடாமல் ஒப்பித்தாள் . அப்பா பதிலுக்கு என்ன சொல்ல போகிறார் என்று எதிர்பார்த்த பாரதிக்கு அப்பா கூறியது அதிர்ச்சியாய் இருந்தது.

Barathi

குட்டிமா நீ நாளைக்கு தையல் கிளாஸ் போக வேண்டா டா செல்லம். அப்பா உனக்கு ஒரு நல்ல பையனா பாத்துருக்க. நாளைக்கு அவங்க உன்ன பொண்ணு பாக்க வராங்க. அதிர்ச்சி நீங்காமல் இருந்த மகளை பார்த்த அம்மா, பாரதி தையல் கிளாஸ் முடிச்சு வந்து கை கால் முகம் கூட கழுவாம இருக்க. உள்ள போய் முகம் அலம்பிட்டு வா. அம்மா காபி தர என்று கூறி அனுப்பி வைத்து விட்டு கணவனை பார்த்தாள்." பாரதி அப்பா நீங்க பண்ணது கொஞ்சம் கூட சரி இல்ல. திடீர்னு அவ கிட்ட சொன்ன முதல்ல என்கிட்ட தான நீங்க சொல்லணும்" என்று கணவனை கடிந்து கொண்டாள் பாரதியின் அம்மா. இல்ல மா நம்ம பொண்ண அவங்க நம்ம ராதா சித்தி பொண்ணு கல்யாணத்தில பாத்திருக்காங்க. ரொம்ப புடிச்சு போய் போச்சா. அதான் ராதா சித்தி கிட்ட கேட்ருகாங்க ராதா சித்தி இப்போ தா எனக்கு போன் பண்ணி நல்ல எடம் விற்றாதனு சொன்னங்க. நானும் சரி நாளைக்கு வர சொல்லுங்கன்னு சொல்லிட்ட என்று நடந்ததை மூச்சு விடாமல் கூறி முடித்தார்.

என்னமோ போங்க உங்க வீட்டு ஆளுங்க சொல்லிட்டா அதுக்கு மறு பேச்சு ஏது. ஆனா பையன் எப்டி குடும்பம் எப்டி விசாரிங்க அப்புறம் முடிவு பண்ணலாம் என்று சொன்ன மனைவியை முறைத்து விட்டு எல்லாம் விசரிசாச்சு என்று சொல்லி விட்டு கிணத்தடிக்கு சென்றார். அழுது அழுது கண்கள் வீங்கி போய் இருந்த பாரதியை பார்த்து பதறிய அம்மா, ஏன்டா செல்லம் அழற நீ எப்பவும் எங்கள விட்டு போக மாட்டடா. நாங்க எப்பவும் உன்கூட தான் இருப்போம் என்று மகளின் மனது அறிந்தவளாய் ஆறுதல் கூறினார்.மறுநாள் காலை விடிந்ததில் இருந்து பெரும் பரபரப்புடன் இருந்தது வீடு. என்ன நடக்குமோ நடகட்டும் என்று மனதை தேற்றிகொண்டாள் பாரதி. பெண் பார்க்கும் படலமும் ஆரம்பம் ஆயிற்று. மாப்பிள்ளை வசந்தன் பார்பதற்கு நன்றாக இருந்தான் . அனைவர்க்கும் பிடித்து போக சீர்வரிசை எதுவும் வேண்டாம் மகள் மட்டும் போதும் என்று சொன்னதும் பாரதி அம்மா அப்பாவிற்கு மிகவும் பிடிக்க மாப்பிள்ளை என்று வாய் விடு அழைக்க ஆரம்பித்துவிட்டனர் . தன்னிடம் ஒரு வார்த்தை கூட கேற்க மாட்டார்களா என்று ஏங்கிய பாரதிக்கு ஏமாற்றமே மிச்சம் ஆனது.இதோ திருமணமும் நிச்சியிக்க பட்டு விட்டது .

றுநாள் தையல் வகுப்பு சென்ற பாரதி தன் திருமணத்தை பற்றி கூற, தையல் வகுப்பு ஆசிரியர் காஞ்சனா அவளுக்கு அறிவுரை கூறி, உனக்கு எந்த உதவி எப்போது வேண்டும் என்றாலும் கேள் நான் உனக்கு என்றும் உறுதுணையாய் இருப்பேன் என்று கூறி அவளை தேற்றினார்.

மாப்பிள்ளை பெண் வீட்டார், உற்றார், உறவினர் வாழ்த்த மிக எளிமையாய் வசந்தன் பாரதி திருமணம் நிறைவாய் நடைபெற்றது. சம்ப்ரதாயங்கள் முடிந்து இருவரும் குடும்பமாய் வாழ ஆரம்பித்து விட்டனர்.எல்லாம் நிறைவாய் மகிழ்ச்சியுடன் சென்று கொண்டு இருந்த நேரத்தில் பாரதி கர்ப்பம் ஆனாள். குடும்பமே அவளை கொண்டாடியது. கணவன் தன் மனைவியின் அழகில் மயங்கி அவளை தவிர வேறு உலகம் இல்லை என்று இருந்தவன் அவள் தாய்மை ஆனதை கேட்டு மகிழ்ச்சியின் எல்லைக்கு சென்றான். அனைத்தும் நிறைவாய் தோன்றும் நேரத்தில் பாரதிக்கு விழுந்தது முதல் அடி. ஆம் அவள் பெற்றோர் மற்றும் வசந்தனின் பெற்றோர் இணைந்து தங்கள் உறவினர் திருமணத்திற்கு சென்ற பேருந்து விபத்துக்குள்ளாகி அனைவரும் இறந்து விட்டனர் என்று செய்தி கேட்டு மீளா துயர் கொண்டாள் பாரதி. அவள் அதில் இருந்து மீளவே வெகு நாட்கள் ஆனது. இனி தன் கணவன் மற்றும் வயிற்றில் இருக்கும் பிள்ளைகள் தவிர அவருக்கு என்று யாரும் இல்லை என்ற நிலையே அவளை மிகவும் வருத்தியது.

பாரதி தன்னை தேற்றி கொண்டு நடந்தவைகளை மறக்க முயற்சி செய்தாள். ஆண் ஒன்று பெண் ஒன்று என இரட்டை குழந்தைகள் பிறந்து அவளை யோசிக்க விடாமல் செய்து அவள் கவலைகளை மறக்க செய்தன .அப்போது தான் திடீர் என வசந்தன் அன்று இரவு முதல் முறையாய் வீட்டுக்கு குடித்து விட்டு வந்திருந்தான். பாரதி அதிர்ச்சி யோடு அவனை கேற்க அவனோ பெற்றோர் இறந்த துக்கம் தாள முடியவில்லை இன்று ஒரு நாள் மட்டும் என்று காரணம் சொல்ல, இவளும் சரி என்று தலை ஆட்டியது எவ்வளவு தப்பு என்று அவளுக்கு பின்னாளில் தான் புரிந்தது. ஆம் அவன் தினம் ஒரு காரணம் சொல்லி குடிக்க ஆரம்பித்து இன்று அவன் முழு நேர குடிகாரனாய் மாறி போக. வறுமை அவர்கள் வீட்டில் குடியேற ஆரம்பித்தது. கடன் கொடுத்தவர்கள் வீட்டை மொய்க்க, வேலைக்கு சரியாக வசந்தன் வர வில்லை என்று அவனை அலுவலகத்தில் இருந்து வேலை நீக்கம் செய்ய தடுமாறி தான் போனாள் பாரதி. இதெல்லாம் அறிய கூடிய நிலையில் வசந்தன் இல்லை. அவனை சொல்லி திருத்தவும் ஆள் இல்லை. அவனிடம் அழுது கொஞ்சி கோபப்பட்டு கூறியும் பயனில்லாமல் போகவே, குழந்தைகளுக்காக வேலைக்கு செல்ல முடிவு செய்தாள் பாரதி.

குழந்தைகளும் பள்ளி செல்ல பாரதி தன் வீட்டுக்கு அருகில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் வீட்டு வேலைக்கு செல்ல ஆரம்பித்து விட்டாள்.பாரதி வேலைக்கு சென்ற நேரம் பார்த்து வீட்டில் உள்ள சாமான்கள் எல்லாம் அடகு கடை செல்ல, திட்டி திட்டி அலுத்து விட்ட பாரதி செய்வது அரியாது திகைத்தாள். குடிக்க பணம் வேண்டும் என்று பாரதியிடம் சண்டை போட்டு அவளை அடித்து துவைக்க பிடுங்கி சென்று விடுவான். குடி போதை ஒருவனை எவ்வளவு கேவலமானவனாய் மாற்றும் என்பதற்கு வசந்தனே உதாரணம். ஆம், இரண்டு குழந்தைகள் பெற்றாலும் உன் அழகு குறைய வில்லை அதனால் தான் நீ இவ்வளவு சம்பாதிக்கிறாய் என்று அவளை சந்தேகிக்க ஆரம்பித்தான். குழந்தைகள் அஞ்சலியும், அஷ்வினும் தந்தையை பார்த்தாலே பயந்தன. காசு கேட்டு வசந்தன் பாரதியை தெருவில் வைத்து அடிக்க அவனை தட்டி கேற்க வந்தவர்களை இவன் பாரதியுடன் இணைத்து பேச அனைவரும் சேர்ந்து இவனை மொத்தி எடுத்துவிட்டனர். அன்று முதல் அவன் மனதில் பாரதியின் மேல் வன்மம் குடி கொள்ள ஆரம்பித்தது. அவளை பலி வாங்க எண்ணி, அவள் வேலை சென்று வரும் நேரம் பார்த்து, "என்னைய டி ஆள் வச்சு அடிக்கிற, எல்லா அழகா இருக்குற திமிர். இனிமே எவன் உன்ன பாக்குற நு நா பாக்குற டி " என கூறி கொண்டே தன் கையில் வைத்து இருந்த அசிட் பாட்டிலை திறந்து அவள் மேல் ஆசிடை ஊற்றினான். பாதி முகம் அசிடில் வெந்து போய் அவள் துடிக்க கூட்டம் சேர்ந்து வசந்தனை அடித்து காவல் நிலையம் கொண்டு சென்றனர். அங்கே அவனுக்கு ஆயுள் தண்டனை விதிக்க பட்டு சிறையில் அடைக்க பட்டான் . பாரதியை மருத்துவமனை அனுப்பிவைக்க குழந்தைகள் என்ன செய்வது என அறியாமல் நின்றன.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.