(Reading time: 6 - 11 minutes)

கல்யாணம் முதல் காதல் வரை  - அமுதவல்லி

This is entry #33 of the current on-going short story contest!  Please visit the contest page to know more about the contest.

வாரத்தின் முதல் நாள். விடுமுறை முடிந்து அனைவரும் பள்ளி, கல்லூரி,வேலை என செல்லும் நாள்.விடுமுறை நாளின் இனிமையை நினைத்து மறுபடியும் எப்பொழுது ஞாயிறு வரும் என்ற ஏக்கத்தோடு சென்றார்கள்.

ஒரு அலுவலகத்தில்....xxx என்று வெச்சிகோங்க. காசா,பணமா.

மோர்னிங் பிரியா, ஆஷா.

மோர்னிங் ஸ்வேதா.

ஸ்வேதா "என்ன வந்ததும் சிஸ்டம்குள்ள போய்டியா பிரியா"

ஆஷா "சிஸ்டம் குள்ள எப்படி போக முடியும்"

ஸ்வேதா "மொக்க போடாத ஆஷா. ஏன் திங்கள் வருதுனு இருக்கு. நேற்று நானும், அஜய்யும் மகாபலிபுரம் போனோம். நைட் 12 மணிக்குதான் வந்தோம்"

ஆஷா "பேய் எல்லாம் நேத்து நைட் ஓடி போச்சுனு நியூஸ்ல சொன்னாங்க. உன்னை பார்த்து தான"

ஸ்வேதா "கடுபேத்தாத ஆஷா. எனக்கு ஏற்கனவே தூக்கமா வருது"

ஆஷா "இப்போ மட்டும் வேலையா செய்ய போற தூங்கதான போற"

ஸ்வேதா அவளை முறைத்துவிட்டு இவர்களை பார்த்துகொண்டு இருந்த பிரியாவிடம் "நேத்து நீ எங்கே போன பிரியா. பதிலை எதிர் பாராது நீ வீட்டில்தான் இருந்திருப்ப. சிவா உன்னை எங்கேயும் கூட்டிட்டு போக மாட்டாரே" என்று நக்கலாக சொன்னாள்.

ஆஷா "மகாபல்லிபுரம்தான போன. சுவிட்சர்லாந்த் போன மாதிரி சொல்ற. அவ விட்டுல இருந்தா உனக்கு என்ன கஷ்டம் ஸ்வேதா"

பிரியா பதில் சொல்லாது வேலை பார்த்தாள். ஆனால் மனம் ஒரு நிமிடத்தில் உலகயே சுற்றி வருமே. அவளது திருமணம் 1 மாதத்தில் நிச்சயிக்கபட்டது. சிவா சிங்கப்பூரில் இருந்தான். அவனது ப்ராஜெக்ட் முடியும் தருவாயில் இருந்தது. அதனால் திருமணம் முன்பு அவனிடம் சில வார்த்தைகளே பேசி இருக்கிறாள். திருமணம் முடிந்து 1 மாதமே முடிந்ததால் நெருக்கமும் அதிகம் இல்லை. வார இறுதியில் பேசுவதோடு சரி.விடுமுறை இல்லாததால் இருவரும் honeymoon செல்லவில்லை. அதனால் சிவாவிடம் கேட்க தயக்கமாக இருந்தது.

ஸ்வேதா "ஆஷா நான் ப்ரியாவை கேட்டேன். ஏன் பதில் சொல்லாம இருக்க பிரியா"

ஆஷா "நீ உனக்கு வந்த மெயில்க்கு பதில் அனுப்பு. நீ வந்து ஒரு மணி நேரம் ஆச்சு இன்னும் மெயில்பாக்ஸ் கூட ஒபென் பண்ணாம பிரியாவ பதில் சொல்ல சொல்ற "

ஸ்வேதாவிற்கு கடுப்பாக இருந்தது. இந்த ப்ரியாவை எதுவும் சொல்ல விடமாற்றாலே. சே. ஆஷா இல்லாதப்போ பார்த்துக்கலாம்.

பிரியா,ஆஷா,ஸ்வேதா மூவரும் ஒரே நாளில் வேலையில் சேர்ந்தவர்கள். ஸ்வேதா வேலை செய்வதுபோல் நடிப்பாள். ஆஷா கொடுத்த வேலையை செய்வாள். பிரியா மிகவும் திறமைசாலி. அவளுக்கு அங்கே நல்ல பெயர் உண்டு. அவளுக்கு பதவி உயர்வு கிடைத்தது. ஸ்வேதா பொறாமைபட்டாள்.

பிரியாவிற்கு சிவாவுடனும் , ஸ்வேதாவிற்கு அஜய்வுடனும் சில நாட்கள் வித்தியாசத்தில் திருமணம் நடந்தது. ஸ்வேதா பொறுத்தவரையில் திருமணம் என்றால் கணவனுடன் வெளியே செல்லவேண்டும், கணவன் கேட்டதை வாங்கி தரவேண்டும். அவள் எதை கேட்டாலும் இல்லை என்று சொல்ல கூடாது. பொறுப்புகள் இருக்க கூடாது. அவள் அகராதியில் ப்ரியம்,காதல் எல்லாம் இல்லை.

ஸ்வேதா அஜய்யுடன் வார இறுதி நாட்களில் வெளியே சென்றாள். அஜய் இதை வாங்கி தந்தார், இதை செய்தார் என்று பிரியாவிடம் சொல்லுவாள். பிரியா எங்கும் செல்லாததை கிண்டல் செய்வாள். தன் பொறாமையை இதன் மூலம் வெளிபடுத்துவாள்.

ஆஷா ப்ரியாவின் நல்ல தோழி. ஸ்வேதாவை நன்கு அறிந்தவள். பிரியா அமைதியானவள். அதனால் ப்ரியாவை ஸ்வேதாவிடம் தனியாக விடமாட்டாள்.

அந்த வார சனிக்கிழமை team outing. மூவர் வீடும் ஒரே ஏரியாவில் இருந்ததால் ஒன்றாக ஸ்வேதாவின் காரில் சென்றார்கள். நன்றாக அனைத்தும் சென்றது. வீடு திரும்பும்போது எதிர்பாராத விபத்து நடந்தது. கார் எதிரில் வந்த பைக்மீது மோதாமல் இருக்க காரை திருப்ப மரத்தின் மீது மோதியது. ஸ்வேதாவின் தப்பு எதுவும் இல்லை. பைக்கில் வந்தவன் குடித்துவிட்டு வண்டி ஓட்டியத்தின் விளைவு. ஸ்வேதா,பிரியா இருவருக்கும் நன்றாக அடிபட்டு இருந்தது. ஆஷா தன் தோழி வீட்டிற்க்கு சென்றதால் இவர்களுடன் வரவில்லை.

அருகில் இருந்தவர்கள் இருவரையும் மருத்துவமனையில் அனுமதித்தனர்.இருவரும் ஒரே அறையில் அனுமதிக்கபட்டனர். இருவர் கணவற்கும் தகவல் சென்றது.

ஜய் விபதிற்காக ஸ்வேதாவை கடிந்துகொண்டான். அவளுக்கு ஆறுதலாக எதுவும் சொல்லவில்லை. தனக்கு மருத்துவமனை பிடிக்காது என்று சொல்லி அவள் தாயை பார்த்துக்க சொன்னான். தினமும் மாலை 10 நிமிடம் அவளுடன் இருந்துவிட்டு செல்வான்.

ஆனால் சிவா ப்ரியாவுடன் இருந்தான். அவளை குறை கூறாது பூ போல பார்த்துக்கொண்டான். 24 மணி நேரமும் பிரியாவுடன் இருந்தான். அவனது காதலை செய்கையால் வெளிபடுத்தினான். இருவருக்கும் நெருக்கம் அதிகம் ஆனது. மனசுவிட்டு இருவரும் பேசி கொண்டனர். வேலை என்று ஓடி பேசமுடியாததை இந்த நாட்களில் பேசினர். சிறு வயது சுட்டி தனத்தை பகிர்ந்து கொண்டார்கள்.

இந்த நாட்களின் நெருக்கத்தால் பிரியா சிவாவிடம் "ஏன் விடுமுறை நாட்களில் வெளியே அழைத்து செல்லவில்லை" என்றாள்.

சிவா "நீ வேலைக்கு செல்வதால் விடுமுறையில் ஓய்வு எடுப்பேன்தான். நீ சொல்லி இருந்தால் சென்று இருக்களாம். சாரிமா"

பிரியா "எதுக்கு இப்ப சாரி சொல்ற. நீ சாரி சொல்றதுக்கு பதில் எனக்கு ஏதாவது வாங்கி தரனும்."

சிவா "சரி. என்ன வேணும். வாங்கி தரேன். இல்ல என் கார்டை தரேன். உனக்கு பிடிச்சதா வாங்கிக்கோ"

பிரியா "அவ்வளவு நல்லவனா நீ. உனக்கு பெரிய செலவை வைக்கிறேன்.பிறகு என்கிட்ட தயவு செய்து செலவ கம்மி பண்ணுனு கெஞ்சுவ"

சிவா "என் budget கேத்த மாதிரி வாங்கு. இல்லனா சாப்பிட காசு இருக்காது"

பிரியா "உனக்கு நான் சாப்பாடு போடறேன். கவலை படாதே"

சிவா "என் நிலைமை இப்படி ஆகிடுச்சே. கடவுளே காப்பது"

ஆஷா "கல்யாணம் முன்னாடி இதை யோசித்து இருக்கனும் அண்ணா"

பிரியா "எப்போ வந்த நீ"

ஆஷா "நீ அண்ணாக்கு செலவு வைக்கறேன்னு சொன்னல அப்பவே வந்துட்டேன். அண்ணா எனக்கு என்ன வாங்கி தறுவீங்க"

சிவா "என் பாஸ் கிட்ட கேளுமா. எனக்கே அவங்க தான் பணம் கொடுப்பாங்க"

பிரியா "சும்மா இருங்க"

ஆஷா "இந்த சனிக்கிழமை வீட்டுக்கு வாங்க அண்ணா"

சிவா "இல்லமா. வெள்ளிகிழமை நைட் ஊட்டி போறோம். டாக்டர் கிட்ட கேட்டேன். ஓகே சொல்லிட்டார்"

ஆஷா "கலக்குங்க அண்ணா. honeymoon ah.அப்போ 1 மாசம் லீவ். என்ஜாய்"

ஆஷா ,சிவா இருவரும் சிரிக்கவும் ப்ரியாவின் கன்னம் வெட்கத்தால் சிவந்தது..

இதை எல்லாம் கேட்ட ஸ்வேதாவிற்கு கணவனின் துணை எவ்வளவு பெரிது என்று புரிந்தது. அவள் மனம் அஜய்யின் அருகாமைக்கு ஏங்கியது. திருமணம் என்றால் என்ன,காதல் என்றால் என்ன என்று புரிந்தது.

இது எனது முதல் கதை. ஏதேனும் தவறு இருந்தால் மன்னிக்கவும்.

உங்கள் கருத்துக்களை சொல்லவும்.

This is entry #33 of the current on-going short story contest! Please visit the contest page to know more about the contest.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.