(Reading time: 11 - 22 minutes)

வீரம் - ப்ரியா

"சார் எப்படி சார் அந்த பர்மாவ சுட்டு கொன்னிங்க?!"

"சார்! சார்! இந்த மிசன்ல ஒரு பொண்ணு கூட இன்வால்வ் ஆகிருந்ததா கேள்வி பட்டோமே அது உண்மையா?!"

"இவ்வளவு நாள் இல்லாம இப்ப இந்த மிச்சன்க்கு அவசியம் என்ன சார் 

Veeram

உங்க எல்லாரோட கேள்விக்கும் பதில் சொல்ல தான் நான் இங்க வந்திருக்கேன் ப்ளீஸ் எல்லாரும் உட்கார்ந்து ஒவ்வொருத்தரா கேள்வி கேளுங்க.. பர்ஸ்ட் ப்ளீஸ் சிட் டவுன்..!!

டிவியை அணைத்து விட்டு கணவனின் முகம் நோக்கி திரும்பினாள் மகி!!

"ம்ம்மா ம்மா டிவிய போடு, ஐயோ அப்பா பேசறாங்க"

"ம்ம்ம் ம்ம்ம் உங்க அப்பா நமக்கு நேர்லயே சொல்வாரு எல்லாமே"

அப்பாவின் மடியில் சலுகையுடன் ஏறி அமர்ந்து கழுத்தில் கைகளை கோர்த்து கொண்டு வினவினாள் சுஹா..!!

"ஆமாப்பா சொல்லு"

"ம்ம்ம் அம்மாக்கும் பொன்னுக்கும் நான் தான் டிவியா எல்லாம் என் நேரம்" என்று பொய்யாக சலித்து கொண்டு,மனைவியை காதலும் பெருமையும் போங்க பார்த்தான் சத்ரபதி, ஐ.பி.எஸ்!!

"ம்ம்ம்ம் இந்த என்கவுன்டர நான் பண்ணலை", ஒரு பெருமூச்சு எழுந்தது அவனிடம்.

"என்னங்க?! இப்படி சொல்றிங்க?!!"

டிவியை பார்த்து கொண்டிருந்த எழிலரசியின் அருகே வந்து அமர்ந்தால் லதா.

"ஹே என்னடி இதை போயி பார்த்துட்டு இருக்க.. வேற சேனல் மா..." , எழிலின் பார்வையினால் நின்றது பேச்சு. அமைதியாக டிவியை பார்த்தாள் லதா.

ஐ.பி.எஸ் பேசி கொண்டிருக்கும் போது அங்கே வந்தாள் எழில்!!!  

"ஹே நீ எப்படி?! அப்போ நீ காலையில கிளம்பி போனது இதுக்கு தான?!" கேள்விகள் அதன் போக்கில் வர, கண்கள் டிவி திரையிலே இருந்தது.

அதில்..

"மேடம் நீங்களும் அந்த இடத்துல இருந்ததா பேசிக்கிறாங்க? நீங்க அந்த டைம் ல எப்புடி அங்க போனிங்க?"

"நீங்க தான் கொலை பண்ணிட்டதா கூட வதந்திகள் வருதே அதெல்லாம் உண்மையா?"

மெல்லிய தலை அசைப்பு 'ஆம்' என்பது போல் வந்தது எழிலிடம். அதிர்ச்சியுடன் திரும்பி பார்த்த லதாவிடம் [எச தொடங்கினால் எழில் டிவியை அனைத்து விட்டு..

"என்னடி என்ன காரியம் பண்ணி வெச்சுருக்க"

"ஸ்ஸ்ஸ் லதா, நான் சொல்றத கேளு, நான் தான் கொலை பண்ணேன், அப்படி நினைச்சு தான் அங்க போனேன்.. நினைச்ச மாதிரி பண்ணேன்  ஆனா நான் தனிய பண்ணலை..."

"வாட்?! அப்போ அந்த போலீஸ் குரூப் வந்துச்சா?" , லதா.

"இல்லை..ஆனா"

ன்று கொலை ஊன்றிய படி, அந்த புகைப்படத்தை நெஞ்சோடு அணைத்து கொண்டு வந்து ஹாலில் இருந்த சோபாவில் பொத்தென அமர்ந்தான் சேகர்..

"சந்து... இங்கே வாங்க உங்க பையன் என்ன பாடா படுத்தறான்"

"ஹிஹிஹி", மிதுன் சிரிக்கும் ஒலி.

"சேகர் இப்போ வர போறிங்கள இல்லையா?"

"பேபிமா, வந்துட்டேன் " குரல் கொடுத்த வாறே படுக்கையறையில் இருந்து ஹாலிற்கு விரைந்தான் சேகர்.

ஹால் முழுக்க அலங்கோலமாய் பொருட்கள் இறந்து கிடக்க, மனைவி இடுப்புக்கு கை கொடுத்து பத்ரகாளியாய்  நின்றிருந்தாள்.

மேலும் அவள் கண்கள் சுவரை சுட்டி காட்ட, என்னவென்று பார்த்தவனுக்கு சிரிப்பு பீறிட்டது, அவளின் உதட்டு சாயம் கண்மை என அனைத்தையும் எடுத்து சுவரில் சித்திரம் தீட்டியிருந்தான் புதல்வன்.

சேகர் சிரிப்பதை பார்த்து மிதுனும் சிரித்து கொண்டு ஓடி வந்து அவனை கட்டி கொள்ள,வர்ஷா இருவரையும் துரத்த அவளிடம் இருந்து தப்பி ஓடிய இருவரும் சோபாவில் விழுந்தனர். பின்னோடு வந்த அவளையும் சேகர் கை பற்றி இழுக்க, அவர்களோடு விழுந்த அவளும் சிரித்தாள்.

சிரிப்பொலி எதிரொலி போல் எங்கோ கேட்க, கண்களை மூடி திறந்து நிதானத்திற்கு வந்தான் சேகர்..!!

"பேபிமா, மிதுன்"

"சொல்லுங்க"

"ப்பா"

"ம்ம்ம் நான் ஒரு தப்பு பண்ணிட்டேன்"

"என்னங்க என்ன பண்ணிட்டு வந்திங்க"

"என்னப்பா?!"

"உங்களை இந்த நிலைமை கொண்டு வந்தவன என் கையாள கொன்னுட்டு வந்துட்டேன், ஆனால் நான் மட்டும் இல்லை.. இன்னொரு பொண்ணு. அப்புறம் ஒரு போலீஸ்"

ஒரு கனத்த மவுனம் நிலவியது அங்கே.

"ன்ன எழில் சொல்றா?"

"ஆமா டீ, பர்மாவா தெரியும்ல உனக்கு?"

"ம்ம்ம் எப்படி டி மறக்க முடியும்"

எழுந்து சுவரில் மாட்டியிருந்த தன் குடும்ப படத்தின் அருகில் சென்றால் எழில். கைகள் தாமாக அதை வருட கண்கள் கலங்க நின்றவளை லதா முகம் திருப்பி னைத்து கொள்ளவும், கொஞ்சம் சுதாரித்தாள்.

"என் அக்கா.. என் அம்மா அப்பா.. லதா." திக்கி திணறி வார்த்தைகள் வெளி வந்தன.

எழிலின் குடும்பம் சொந்த ஊரில் இருக்க, படிக்கவென சென்னை வந்திருந்தால் எழில்.தன்னை காண தன் சகோதரி வருவதாய் கூற, அவளை அழைத்து வர ரயில் நிலையம் செல்லலாமென கல்லூரியில் இருந்து புறப்படும் நேரம், ஒரு முக்கியமான வேலை காரணமாக ஹெச்.ஒ.டி கூப்பிட, தமக்கையை அழைத்து ஒரு ஆட்டோ பிடித்து வந்து விடும் படி கூறி விட்டு, வேலையை முடித்து கொண்டு ஹாஸ்டல் வந்து கொண்டிருந்தாள்.

இடையே அவள் தமக்கையை செல்லில் அழைக்கும் போது அது அணைக்க பட்டிருந்தது. மெல்லிய பயம் படர்ந்தாலும், நீண்ட தூர பயணத்தால் சார்ஜ் இல்லது போயிருக்கும் என தன்னையே தேற்றி கொண்டாள்.

ஆனால் அவள் ஹாஸ்டலை அடைந்து நேரம் ஆனா போதும் அக்கா வராதது பெரிய பயத்தை மனதில் உருவாக்கியது.

அந்த நேரத்தில் அரசு போது மருத்துவமனையில் இருந்து வந்த செய்தியில் நிலை குலைந்து உடனிருந்த லதாவுடன் அவள் அங்கு செல்கையில் போக இருந்த உயிரை கையில் பற்றி கொண்டு துவண்டு படுத்திருந்தாள் அக்கா!!!

யாரோ நாலு பேர் ரயில் நிலையத்தின் வெளியே அவளை கடத்தி கொண்டு போய் முரட்டு தனமாக பலாத்காரம் செய்துள்ளனர். அதில் அவள் தப்பிக முனைகையில் அவளை அடித்து துன்புறுத்தியும் உள்ளனர் என்ற செய்தி கேட்டு இடிந்து அமர்ந்து விட்டால் எழில்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.