(Reading time: 33 - 65 minutes)

     கற்றது காதல் - அன்னா ஸ்வீட்டி

ர்றவனை காதலிக்கனும் என்ற ஒரு முடிவோடதான் இந்த கல்யாணத்திற்கு சம்மதிக்கிறேன். இதற்கு மேலும் நான் இந்த வீட்டில் கல்யாணம் செய்யாமல் இருந்தால் அம்மா அப்பாவோட வாழ்க்கை நரகமாயிடும். அதுதான் நான் கல்யாண முடிவுக்கு வர ஒரே காரணம். மத்தபடி இந்த கல்யாணத்தில் மனலயிப்பு ஏதும் இல்லை.

நான் கல்யாணத்தை ஆவலாய் ஆசையாய் ஏக்கமாய் எதிர்பார்த்த ஒரு காலம் இருந்தது. இன்னும் மனதில் ப்ரின்ஸை நான் முதன் முதலில் என் முதல் பணி ஸ்தலத்தில் சந்தித்த காட்சி, அவன் பேசிய முதல் வார்த்தை, அவனுடன் வந்த முதல் வாய் போர் எல்லாம் அப்படியே ஞாபகம் இருக்கிறது.

அடுத்தும் தொடர்ந்த அவனது தொடர் கால் வாரல்கள், எனது பதிலடிகள், அதற்கு உடன்பணி புரியும் நல்நண்பர்கள் எனக்கு கொடுத்த அறிவுரைகள், பின்னே சி.இ.ஓ.வின் ஒண்டவுன் ப்ரின்ஸை புது ட்ரெயினி நான் பலர் முன் மூக்குடைத்தால் ....எல்லாம் கூட ஞாபகம் இருக்கிறது.

அத்தனை தளங்களுள்ள அந்த பெரிய அலுவலகத்திற்குள் இயல்பாய் நடக்கும் எங்கள் சந்திப்புகள் அவனது திட்டமிட்ட ஏற்பாடு என்று மெல்ல மெல்ல என் மரமண்டைக்கு புரிய ஆரம்பித்தது, அவன் என்னை சுற்றி வருகிறான் என நான் அறிய ஆரம்பித்தது, அதன் காரணம் அவன் என் மேல் கொண்டுள்ள காதல் என நான் உணர ஆரம்பித்தது எல்லாம் கூட ஞாபகம் இருக்கின்றது.

அந்நொடியே எனக்கும் அவனிடம் உள்ள பயமே அவனை நான் விரும்பி அதை அவன் ஏற்காமல் காயபட்டுவிடுவேனோ என்பதுதான் என விளங்கியதும் கூட ஞாபகம் இருக்கிறது.

காதலில் நான் கவிழ்ந்த பொழுது அது.

இத்தனை சண்டைக்கும் பின் அவனிடம் போய் எப்படி காதலை உணர வைக்க என தவித்ததும் அதனால் இரண்டு மூன்று முறை அவனிடம் உண்மையை சொல்ல சென்று, உளறி கிளறி மூடி திரும்பி வந்ததும் கூட ஞாபகம் இருக்கிறது.

இந்த மொத்த உளறல் சந்திப்புகளின் நிமித்தம் எங்கள் இருவருக்கும் இடையே மலர்ந்த நட்பு நிலை ஞாபகம் இருக்கிறது. அதன் பின் நிகழ்ந்த சுமுக சந்திப்பில் இயல்பாய் நான் என் பின்புலம் என் பெற்றோரைப் பற்றி கூற அவன் என்னை தவிர்க்க ஆரம்பித்தது ஞாபகம் இருக்கிறது.

நாங்கள் இருவரும் பணி புரிந்த அலுவலகத்தின், தொழிலின் மொத்த உரிமையாளர் என் தந்தை என்பதை அறிந்ததும் அவன் விலக நான் தவித்த தவிப்பும் துடிப்பும் ஞாபகம் இருக்கிறது.

என் காதலை சொல்லி நான் கதறியதும் அவன் என் தந்தையை சொல்லி மறுத்து விலகியதும் அதே நேரம் அவன் எனக்காய் தவித்ததும் ஞாபகம் இருக்கிறது. மறுப்பை சொல்லும் பொழுது அவன் அனுபவித்த வலி அதன் பிரதிபலிப்ப்பாய் தவித்த அவன் முகம் ஞாபகம் இருக்கிறது.

என்னதான் விலகி ஓடினாலும் காதல் கொண்ட மனதல்லவா அவனது, என் வேதனை துக்கம் அவனைத் தாக்க உன் தந்தையை விருப்புடன் சம்மதிக்க வைப்போம் அதுவரை பொறுத்திருப்போம் என்று அவன் இறங்கி வந்ததும் ஞாபகம் இருக்கிறது.

விரல் நகம் கூட படாமல் விலகி நின்று மனதில் கூட எல்லை மீறாமல் காதல் கொள்வோம். மன சுத்தம் இறைவனுக்கு ப்ரியம் அவர் இறங்கி இரங்கி உதவினால் தான் ஆனந்த கண்ணீரில் நடக்கும் நம் கல்யாண வைபவம் என்று அவன் சொன்னது இன்னும் கூட நினைவில் இருக்கிறது.

ஒரே அலுவலகத்தில் ஒருவர் பார்வையில் ஒருவர் வேண்டாம், மன சுத்தம் கனவாய் போகும். விழகூடாத வகையில் உன் தந்தை காதில் தகவல் சென்றால் கல்யாண கனவு கானலாகி விடும் என என்னை அவன் சில கிலோ மீட்டர் தொலைவிற்கு பிரித்து அனுப்பியதும் ஞாபகம் இருக்கிறது.

மாதம் ஒரு நாள் 2 நிமிடம் அலுவலகத்தில் சந்தித்து பேசிக் கொள்ளலாம் என நாங்கள் எடுத்த முடிவும் அதன் படி இரு முறை இரண்டு நிமிட சந்திப்பிற்காக அவனிடம் அப்பாயிண்ட்மெண்ட் வாங்கி நான் சென்றதும் ஞாபகம் இருக்கின்றது.

“நதி...அப்பாயிண்ட்மெண்ட்னு சொல்லாதடா...ப்ளீஸ், யூ நோ ஆல் மை லைஃப் ஸ் யுவர்ஸ்” என்று அவன் சொன்னதும் அந்நேரம் அவன் கண்கள் கெஞ்சியதும் ஞாபகமிருக்கின்றது.

அந்த சந்திப்புகள் நடந்த அந்த கண்ணாடி கேபினும் அதன் இட ஓரத்தில் இருந்த அவன் பிறந்த நாளுக்காக நான் வங்கி பரிசளித்த ‘ கிறிஸ்துவின் ராப்போஜனம்’ சிறு சிற்பமும் கூட ஞாபகம் இருக்கின்றது. அங்கு எனைப் பார்த்ததும் அவன் முகம் தவிப்பும் காதலுமாக மலரும் பாவம் இன்னும் ஞாபகம் இருக்கிறது.

அப்படி அனுமதி வாங்காமல் ஒரு நாள் மனம் கேளாமல் நான் அவனை சந்திக்க சென்றதும், நேர்காணல் நடத்திக் கொண்டு இருந்தவன் அடுத்த கேண்டிடேட்டை எதிர்பார்த்து நிமிர, எதிரில் நின்ற என்னைக் கண்டு கனவென்று சில நொடிகள் குழம்பி பின் நிதானித்ததும், பின் மௌனமாக தன் பணியை தொடர, என் வார்த்தையின் சத்தத்தில் அவன் விழிகளும் இதழ்களும் மாத்திரம் அல்லாமல் மொத்த வதனமும் மலர்ந்ததும், “ஹேய்....நீ இங்க என்ன பண்ற..” என அவன் மொழி துள்ளியதும், அவன் அடிக்கடி என் உருவத்தை இப்படி காண்கிறான், என வார்த்தையின்றி எனக்கு புரிய, சொல்லாமல் வந்ததற்காக திட்டுவானோ என்றிருந்த என் பயம் பறந்ததும், அன்று அவன் கேட்டதற்காக அலுவலக காஃபி மெசினில் நான் முதலும் கடைசியுமாக அவனுக்கு கலந்த காஃபியும் ஞாபகம் இருக்கின்றது.

எவ்வளவு சுகர் என்றதற்கு “காஃபி ஷுட் பி அஸ் ஸ்வீட் அஸ் யு” என்ற அவன் பதிலும் ஞாபகம் இருகின்றது.

எத்தனை முறை நான் அலைபேசியில் அழைத்தாலும் ஞாயிறு அன்று மதியம் தவிர மத்த நாட்களில் அவன் ஏற்றதே இல்லை என்பதும் ஞாபகம் இருக்கின்றது. ஆனால் மற்ற நாட்களில் அழைத்ததற்காக குறைபட்டதும் இல்லை என்பதும் ஞாபகம் இருக்கின்றது.

சாப்பிட்டாச்சா? தூங்கு, ப்ரே ஃபார் மீ, ஐ’ம் இன் மீட்டிங் வித் யுவர் டஅட் என்பதாய் மட்டுமே நாங்கள் பரிமாறிய குருஞ்செய்திகள் ஞாபகம் இருக்கிறது.

மூன்றாம் மாதம் அன்று அவன் தவிப்புடன் பேசியதும், “என்னமோ தெரியலை நான் ஆசை படுற எல்லாமே நடக்குது இப்போ கொஞ்ச நாளாவே....ஒரு வேளை பூமியில என் வாழ்க்கை முடியப்போதோன்னு எனக்கு தோணுது.....நாளைக்கு என்னை பார்க்க வரியாடா ப்ளீஸ்” என அவன் சொன்னதும்....நான் அவனை அதட்டியதும், “இல்லடா ஜீசஸ் கம் டு மை கிங்டம்னு சொல்ற மாதிரி கனவு வந்தது, ரொம்ப ரியலா இருந்துச்சு....அவர்ட்ட போக கொடுத்து வச்சிருக்கனும்...உன்னை விட்டுட்டு போறது....அதுதான்...நாளைக்கு என்னை பார்க்க வாயேன்டா...”என அவன் அதற்கு பதில் சொன்னதும், மாலை நாலு முப்பதுக்கு அலுவலகத்தில் சந்திப்பது என நேரம் குறித்ததும் ஞாபகம் இருக்கின்றது. அன்று மாலை அவன் அலுவலகம் நோக்கி கிளம்பிய என் அழைப்புகளை அவன் ஏற்காமல் இருந்ததும் அதன் நிமித்தம் நான் கோபம் கொண்டதும் கூட ஞாபகம் இருக்கின்றது.

அவன் அலுவலகத்து பிற எண்ணில் அழைத்து அவன் அங்கு இல்லை அவன் கார் அங்கு இல்லை என்பதை நான் உறுதி செய்து கொண்டதும், மனம் முழுவதும் அவன் மேல் கோபமாய் பாதி வழியிலேயே நான் வீடு திரும்பியதும், 669 முறை அதன்பின் நான் அவன் எண்ணை அழைத்ததும், அதன் பின் அவன் எண் ஸ்விட்ச் ஆஃப் ஆனதும் ஞாபகம் இருக்கின்றது.

மறுநாள் காலை வழக்கம் போல் அவனுக்கான எனது ஒரு மணி நேர ஜெபத்தை செய்து முடித்து நான் எழுந்து நின்ற நொடி, ஐந்து முப்பது மணிக்கு எங்கள் காதல் விஷயம் தெரியாத என் தோழியிடம் இருந்து முந்திய மாலை அவன் விபத்தில் மரித்த விஷயம் குறுஞ் செய்தியாக வந்ததும் அதை படித்துவிட்டு என் உலகம் நின்று போனதும் ஞாபகம் இருக்கின்றது.

அடுத்து வந்த காலங்களை ஞாபகம் இருக்கின்றது. அவனை காண, அவனோடு ஒரு வார்த்தை பேச, அவன் குரலை கேட்க நான் தவித்த தவிப்பும் துடித்த துடிப்பும் ஞாபகம் இருக்கின்றது.

வீட்டில் வெளியில் யாருக்கும் தெரியாமல் வாய்விட்டு அழக்கூட வழியின்றி ஜெப அறையில் நெஞ்சுவெடிக்க நான் விழுந்து கிடந்ததும் ஞாபகம் இருக்கின்றது. உயிர் போகாமல் எப்படி கடந்தேன் என் தெய்வமே இன்னும் கூட தெரியவில்லை.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.