(Reading time: 18 - 35 minutes)

உள்ளத்தை  கொள்ளைக் கொண்டாய் - ஜான்சி

ழகான மாலைப் பொழுது அந்த இல்லம் மட்டும் உறவினர்களின் வருகையால் கலகலப்பாக காணப்பட்டது. அவ்வீட்டின் தலைவர் ராமானுஜம் வேலையாட்களுக்கு பரபரப்பாக ஆணைகள் பிறப்பித்தவாறு வீட்டின வாயிலில் நின்றுக் கொண்டிருந்தார். "ஆதவன் வெட்ஸ் அகிலா"ன்னு திருமணத்துக்கு முந்தின நாளே இங்கே அழகா பொருத்திடுங்க சரியா?

என்றவருக்கு அவர் மனைவியின் அழைப்பு கேட்கவே விரைந்தார்.

ஏங்க உங்க பையனை இன்னும் காணோம் காலையிலதானே யூ எஸ்ஸிலிருந்து வந்தான்.ஆஃபீஸ் போய் லீவ் எடுக்கும் முன்னால வேலை எல்லாம் ஒப்படைச்சிட்டு வாறேன்னு சொன்னவனை இன்னும் காணல......

Ullathai kollai kondaai

வந்துடுவான் ராஜி ..நீ கவலைப்படாதே அவன் வேலை பற்றி உனக்கு தெரியாதா என்ன?

எனக்கு தெரியும்ங்க ஆனால் உங்க அக்கா கேட்கிற கேள்விக்கு தான் என்னால பதில் சொல்ல முடியல. நிச்சயத்துக்கு தான் அவனால வர முடியல சரி பூ வச்சி நிச்சயம் செய்து வந்தோம் இன்னும் 10 நாள்ல கல்யாணம் இன்னும் வீட்டுக்கு வரல ஒரு வேளை அவனுக்கு கல்யாணத்தில விருப்பம் இல்லையான்னு கேட்கிறாங்க..

என்ன ராஜி இது உனக்கு மரகதம் அக்கா பற்றி தெரிஞ்சும் இப்படி புலம்பலாமா? அவ எப்பவுமே அப்படித்தான ........சரி இப்போ எனக்கு ஒரு டவுட்டு .....

என்னங்க......

இல்ல ஆதி க்ளாஸ் ஃபர்ஸ்ட் வர்றப்போ எல்லாம் என்ன சொல்லுவ .......

என்ன சொல்லுவேன் 

என் மகனை பார்த்தீங்களான்னு  பெருமை பேசுவே ....

ஆமா பேசுவேன்தான் இப்ப அதுக்கென்ன ...

நம்ம நிர்மலா கல்யாணத்தப்போ "பார்த்தீங்களா என் மகன் அவன் தங்கச்சி கல்யாணத்தை எவ்வளவு பொறுப்பா நடத்திட்டான்னு சொன்னே" ....

அவர் என்ன சொல்ல வருகிறாரென்று புரியாமல் ராஜி அமைதி காக்க 

இப்போ கல்யாண பேச்சு நடக்கிறப்போ கூட ,

அம்மா, நீங்க யாரை சொல்றீங்களோ அந்த பெண்ணை கட்டிக்கிறேன் நீங்க பார்த்து முடிவு சொன்னா  போதும்னு சொல்லிட்டான் , என் மகனை மாதிரி ஊர் உலகத்தில ஒரு பிள்ளை உண்டான்னு   பெருமை பேசினேயில்லே  .....

ஆமாங்க இப்போ அதுக்கென்னவாம் சிடு சிடுப்பு மாறி குரலில் கொஞ்சல் வந்திருந்தது.

ஆனா இப்போ குறை சொல்லும் போது மட்டும் உங்க மகனைன்னு சொல்றியே அது எப்படி? என்று சொல்லி சிரிக்க ஆரம்பித்தார்.

போங்க உங்க கிட்ட வந்து சொன்னேன் பாருங்க பொய்யாக சலித்தவாறு சென்று விட்டார்.

வாசலில் காரின் சத்தம் கேட்டதும் நிர்மலா தன் அண்ணனை வரவேற்க விரைந்தாள் .ஆதி அண்ணா என்றவளை வரவேற்றவாறு இறங்கினான் ஆதி என்கிற ஆதவன் நம் கதையின் ஹீரோ ஆறடி உயரமும் மாநிறமுமாக ஹாண்ட்சமாக இருந்தான். பன்னாட்டு நிறுவனத்தில் வேலை காரணமாக  அடிக்கடி கண்டம் விட்டு கண்டம் தாண்டி பறந்தாலும் தன் குடும்பத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பவன். வாழ்க்கையின் உயர்ந்த லட்சியங்கள் கொண்டவன். 

அவனிடம் இருக்கும் ஒரே கேட்ட பழக்கம் அவன் ஒரு மகா & மெகா கஞ்சப் பேர்வழி செலவழிப்பதில் இல்லைங்க பேசுவதில்.வீட்டில் தன் தாய் சகோதரியோடு பேசுவதோடு சரி அலுவலகத்திலும் கூட அநாவசியமாக பெண்களிடம் பேசியது கிடையாது.ஒரு சில குறிப்பிட்ட நண்பர்கள் மட்டும் தான் அவனுக்கு நெருக்கம். 

ஒரு வாக்கியம் பேச வேண்டிய இடத்தில் ஒரு வார்த்தையில் பேசுவான். ஒரு வார்த்தை பேச வேண்டிய இடத்தில் உடல் மொழியாலே உணர்த்தி விட்டு நகர்ந்து விடுவான் (சரி சரி ரொம்ப போரடிக்காதே மணி ரத்னம் சார் பட ஹீரோ  மாதிரின்னு சொல்வியா அத விட்டுட்டு என்று உங்கள் பற்கள் நற நறக்கும் சத்தம் கேட்குது...ஹி ஹி) 

சரி ஹீரோ இன்ட்ரோ ஆகியாச்சி எவ்வளவு நேரம் தான் அவங்களை ஃப்ரீஸ்ல வைக்கிறது.

பேக் டூ நிர்மலா & ஆதி ..

நிம்மி எப்போ வந்தே காலையிலே உன்னை காணவேயில்ல ..

நான் மதியம் வந்தேன் அண்ணா அவருக்கு லீவ் கிடைக்கல இல்லன்னா 2 நாள் முன்னே வந்திருப்பேன்..

உன் குட்டி வாலு பிரணவ் எங்கே?

அப்போது மாமா என்றபடி ஓடி வந்தான் 3 வயது பிரணவ்....

வாடா என்ன வச்சிருக்கே கையிலே?

மார்பில்ஸ் மாமா நாங்க விளையாடித்து இருக்கோம் என்று தன்னுடன் இருந்த மற்ற குட்டிப் பிள்ளைகளை காட்டினான்.

ஓ விளையாடுங்க நான் உங்களுக்கு நிறைய சாக்லேட் வாங்கிட்டு வந்திருக்கேன் .

மாமா சாக்லேட்... என்று உற்சாகத்தில் துள்ள ஆரம்பித்தவனை கைகளில் தூக்கிக் கொண்டான்.

எதிரே வந்த மரகதம் அத்தை என்னடா இதுதான் வீட்டுக்கு வர்ற நேரமா? இப்படி வேலை வேலைன்னு அழைஞ்சா எப்படி ? அதான் முகத்தில புது மாப்பிளை களையே காணோம். 

களையா அது மூஞ்சிலே எப்படி வரும்,களை வந்ததும் முகம் பார்க்க எப்படி இருக்கும்  அது என்ன மாதிரி கலர்ல  இருக்கும் சரி உடனே கூகிள்ல ஸர்ச் பண்ணிப் பார்த்துடனும் என்று........ ஆதி மைன்ட் வாய்ஸ்ங்க இது (பயபுள்ள இப்படியெல்லாம் மனசில இருக்கிறத உடனே பேசுறதா இருந்தா  மழை பெஞ்சு ஊரெல்லாம் செழிப்பாயிடாது )

ஒரு புன்னகையோடு ரேமண்ட்ஸ் கடை பொம்மை மாடல் கனக்கா  நின்றவனை கிட்டே நெருங்கிய மரகதம் அத்தை 

ஏண்டா பொண்ண உனக்கு பிடிச்சிருக்கா இல்லை....என்று தொடரும் முன் 

பிடிச்சிருக்கு அத்தை.. என்றான் அவசரமாக,

அப்படின்னா சரி ஆனால் உனக்கு மட்டும் எதுவும் பிரச்சினைன்னா அத்தை கிட்ட சொல்லிடு என்ன நம்ம சொந்ததில இத்தனை பொண்ணு இருக்க உங்க அம்மா அசல்ல போய் எதுக்கு தேடினா..என்ற தொண தொணப்பிலிருந்து காப்பாற்ற யாராவது வரமாட்டார்களா என்று தேடியபோது 

என்னடா  புது மாப்பிளை என்ற தங்கை கணவன் ரவியின் குரல் கேட்டு நிம்மதியானான். 

ஹாய் ரவி எப்படி இருக்கே என்றவனிடம் உற்சாகமாக கரம் குலுக்கி கொண்டான்.ரவி ஏற்கெனவே  உறவு வட்டத்தில்இருந்த காரணத்தால் அவர்கள் இருவருக்குமிடையே அழகான நட்புறவு உண்டு.

ரவி உன்கிட்ட ஒரு விசயம் பேசணும், கொஞ்சம் பொறு உன் குட்டிப் பையனை அம்மாகிட்ட கொடுத் திட்டு வாரேன் என்று ரவியை காக்க வைத்து விட்டு அம்மாவிடம் போய் கொஞ்சம் செல்லம் கொஞ்சி சமாதானம் செய்து, அம்மா பிரணவ்க்கு சாக்லேட் குடுங்கம்மா என்று சொல்லி அவனை தாயிடம் கொடுத்துவிட்டு ரவியை அழைத்து தன் ரூமில் கூட்டிச் சென்றான்.

ரவி எனக்கு ஒரு ஹெல்ப் செய்வியா...

என்னடா...

அது ....அது வந்து.......

என்ன ஆச்சு உனக்கு.........

எனக்கு கல்யாணத்துக்கு முன்னாடி ஒரே ஒரு தடவை பொண்ணை பார்க்கணும்டா பொண்ணு எப்படியிருப்பான்னு கூட எனக்கு தெரியாது.

ஏய் கல்யாண கார்டுல உங்க ரெண்டு பேரு போட்டோவும் இருக்குதே...பூ வச்ச அன்னிக்கு கூட உனக்கு போட்டோ அனுபியிருந்தாங்களேடா ..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.