யார் அது? - தமிழ்மகன்
ஏன்(டி)! எங்கே என் பல் தேய்குற பருச்-சை காணும்!
இதோ வரேன்.. வாஷ் பேசின் கிழே பார்த்தீங்களா?
அட! ஆமா.. தேங்க்ஸ்.. போய் காபி போட்டு வை.. இன்னும் ரெண்டு நிமிசத்துல வரேன்.
நீங்க வர்துக்குள்ள.. ரெடி ஆகிடும்!
காபியை லேசா உறிஞ்சி குடித்து பார்த்து.. என்ன ஸ்ட்ரோங்-வே இல்லியே?
சரி தொலையுது.. டிபன்-ஆவது நல்லா இருக்குமா, இல்ல நான் வெளியே போய் பார்துக்கிட்டுமா?
அட.. என்னங்க! நீங்க குளிச்சுட்டு வாங்க.. உங்களுக்கு பிடித்த ஐயிடம் ரெடி பண்ணித் தரேன்.
சில நிமிடம் கழித்து..டைணிங் டேபிள் வந்து அமர்ந்து.. எனக்கு லேட் ஆகுது, என்ன ரெடியா?
டிபன்-னில் கை வைத்து சாப்பிட்டு பார்த்த சில நொடிகளில்... த்..தூ!? என்ன இது, ஒரே உப்பா இருக்கு, அழுது வடிஞ்சு செய்து கொட்டுன மாதிரி இருக்கு, நீயே கொட்டிக்க.. தட்டு பறந்து வந்து முகத்தில் பட்ட மாத்திரம்..
சட்-டென தூக்கம் களைந்து எழுந்தான் முத்து!!! ஐயோ.. ரொம்ப தூங்கிட்டமோ! ரமா, ஆபீஸ் கிளம்ப நேரம் ஆயிடுச்சே???