(Reading time: 4 - 7 minutes)

ஒரு கதையில் மலர்ந்த நட்பின் கதை - ஜெனிட்டா

ழுதவா வேண்டாமா என்று பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருந்த என் மனதையும் தாண்டி இதை எழுதிவிடலாம் என்று என் விரல்கள் தொடங்கிவிட்டது...

கதை வாசிப்பது எனக்கு ரொம்ப புடிக்கும்.சின்ன வயசுல கடற்கரை பக்கத்தில ஓட்டு வீட்டு திண்ணையில இருந்து என் பாட்டி தான் எனக்கு கதை சொல்லி தருவாங்க. சிலது புரிந்த மாதிரி இருக்கும் . சிலது புரியலைனாலும் ஆர்வமா கதை கேட்பேன். எந்த தாத்தா பாட்டிய பார்த்து பேசுனாலும் அவங்கள கதை சொல்ல சொல்லுவேன். பக்கத்து வீட்டு க்ராசியம்மா பாட்டி கூட அடிக்கடி வந்து கதை சொல்லுவாங்க. பழைய படம் ஞான சவுந்தரி கதைய கொரஞ்சது 30 தடவையாவது சொல்லி தந்திருப்பாங்க.

ஸ்கூல்லயும் காலேஜ்லயும் தமிழ் பாடத்துல வற்ர கதை எல்லாத்தையும்  ஸ்கூல் காலேஜ் தொடங்குன மொதல் வாரத்துலயே வாசுச்சு முடுச்சிடுவேன்.

oru kathaiyil malarntha natpu

எத்தனையோ நாவல், கதை எல்லாம் வாசிச்சிருப்பேன், ஆனா இதுவரைக்கும் அதை எழுதுனவங்க கூட பேசணும்னு நெனச்சதே கிடையாது.

ஆனா இப்ப ஒரு கதைய வாசிச்சதும் அதை எழுதுனவங்க கூட பேசனும்னு ஒரு ஆசை. ஏனோ என் மனசுல இருக்குறதையே அவங்க எழுதுறத போல இருக்கு. அவங்க மேல ஒரு ஆத்ம அன்பின் ஈர்ப்பு. எனக்குள்ள இருக்குற கனல் அவங்க பேனாவுக்கும் கூட இருக்கும்னு நெனைக்குறேன். “உங்கள் சொத்து எங்கே இருக்கோ அங்கே தான் உங்கள் உள்ளமும்  இருக்கும்னு” பைபிள்ள இயேசு சுவாமி சொல்வாரு.பரலோகம் என்ற சொத்தை எதிர்பார்த்திட்டிருக்குற என் உள்ளத்தைப் போலவே அவங்க உள்ளமும் இருக்குதுனு அவங்க கதைய வாசிச்சப்பவே எனக்கு புரிஞ்சிடுச்சு. ஏனோ அவங்க கூட பேசணும் அவங்க கூட நிறைய பகிர்ந்துக்கனணும்னு ஒரு ஆசை. ஆசை நிராசையா ஆகல்ல.

எப்படியோ அவங்க ஃபேஸ்புக் ஐடி கிடச்சு அவங்க கூட பேச ஆரம்பிச்சாச்சு.எனக்கு அக்கா தங்கச்சி  இல்ல. அவங்க கிட்ட பேசுறப்ப என் சொந்த அக்கா போல ஒரு பாசம் உண்டாச்சு. தூய்மையான நேசம் மாசில்லாத மாணிக்கத்தை விடவும் மேன்மையானது. நான் மொபைல்ல சாட் பண்ணதில்ல. அதனால மொபைல்ல சாட் பண்றது எனக்கு கஸ்டமா இருந்துச்சு. என் மொபைல் நம்பர கொடுத்து எனக்கு ஃபோன் பண்ணி பேசச் சொன்னேன்.

“ ஒரு முதலாளிக்காக தொழிலாளி ஊழியம் செஞ்சிட்டிருக்கும் போது தொழிலாளி முதலாளியின் நிபந்தனையை மீறலாமா” னு அழகா ஒரு கேள்வி கேட்டு, தான் ஒரு முதலாளிக்காக வேலை செஞ்சிட்டிருக்குறதாயும் ஃபோன் எல்லாம் பேசி அவங்கள பத்தி சொல்லக்கூடாதுன்னும் நிபந்தனை இருக்குன்னு சொன்னாங்க. அதை கேட்டப்ப ஒரு சின்ன வலி உள்ளத்துல வந்து போனாலும் உடனே அவங்களோட நேர்மை புரிஞ்சது...புடிச்சது...ஒரு வேலை செஞ்சா அதை முடிக்குற வரைக்கும் மனத் தெளிவோட , மன உறுதியோட இருக்கனணும்னு   அவங்க கிட்ட இருந்து கத்துகிட்டேன்.

“நல்ல கதைகள் வாசிப்பதில் தப்பே இல்ல. ஆனா அதற்காக செலவாக்கப்படும் நேரங்கள் மற்ற வேலைகளை செய்ய விடாமல் தடையாக  இருந்தால் அது ஒரு அடிமைத்தனம்” னு உணர வச்சாங்க.

“ நமக்கு முன்பாக அடைக்கப்பட்ட கதவுகள் நம்மை பாதுகாப்பதற்காக கூட இருக்கலாம்” னு வாழ்க்கைய இன்னொரு விதமா பார்க்க கத்து கொடுத்தாங்க.

கண் காணும் மனிதனுக்கு துரோகம் செய்யும் இந்த மாய உலகில் கண் காணாத இறைவனுக்கு கூட கடுகளவு காயம் கொடுக்காத ஒரு மென்மையான இருதயத்துக்கு சொந்தக்காரி தான் அவங்கனு நான் தெருஞ்சுக்கிட்டேன்

அவங்க முகம் தெரியாது, அவங்க ஊர் தெரியாது. அவங்க பேர் கூட நிஜமான பெயரா புனைப்பெயரானு கூட எனக்கு தெரியாது. ஆனா நான் இப்ப இன்னும் ஒரு நல்ல மனுஷியா மாறிட்டிருக்கேன்னு மட்டும் நல்லாத் தெரியுது.

இனி அவங்கள நேரே பார்ப்பேனா..பேசுவேனானு..எனக்கு தெரியாது. ஆனா இயேசு இரண்டாவது முறையா உலகத்துக்கு வரப் போறாங்க. அப்போ உலகத்துல பொய் சொல்லாம , பாவம் செய்யாம  பரிசுத்தமா இயேசுவ எதிர்பார்த்திட்டிருக்குறவங்கள அவர்கூட கூட்டிட்டு போக போறாராம். அப்படி ஒரு நாள் வரும்போது நானும் இயேசுவுக்க கூட போகும் போது அவங்களை தலையில க்ரீடத்தோட இயேசுவுக்க கூட பார்ப்பேன்னு நம்புறேன். 

நல்ல நேசம் இயேசுவின் நேசம்- இந்

நட்பின் நேசம் என் மனதில் பொக்கிஷம்

ஒரு கதையில் மலர்ந்த நட்பின் கதையை வெளியிட்ட சில்சீ குழுவுக்கு என் நன்றிய சொல்லிக்குறேன்.

அன்புடன்

தமிழரசி.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.