(Reading time: 19 - 38 minutes)

இக்கரைக்கு... அக்கர..பச்ச... - தங்கமணி சுவாமினாதன்

ண்ணாடி முன் நின்று தன்னை அப்படியும் இப்படியும் பார்த்துக்கொண்டாள் செவ்வந்தி.அம்மாடி..

நாந்தான் எம்புட்டு அழகா இருக்கேன்..எங்கண்ணே எனக்குப் பட்டுடும் போலருக்கு..ஒரு கை மாற்றி

ஒரு கையால் முகத்தைச் சுற்றிச்சுற்றி தனக்குத் தானே திருஷ்டி சுற்றிக்கொண்டாள் செவ்வந்தி.

Ikkaraikku akkarai pachaiஅவள் அப்படி செய்து கொண்டதில் தவறு ஒன்றும் இல்லை.உண்மையில் செவ்வந்தி அப்படியொரு

அழகுதான்.

மிஞ்சிமிஞ்சி போனால் செவ்வந்திக்கு இருபத்தி மூன்று வயதிருக்கலாம்.விவரம் தெரியாத சின்னக்

குழந்தயாய் இருக்கும் போதே அவளின் அம்மா அவளை இடுப்பில் தூக்கிவைத்து கோயிலுக்குப்

போனாலும் சரி கடைத்தெருவுக்குப் போனாலும் சரி வெளியூருக்குக் கல்யாணம் காட்சிக்குச்

சென்றாலும் சரி..செவ்வந்தியைப் பார்க்கும் அனைவரும் குட்டிப் பாப்பாவப் பாரேன் எம்புட்டு அழகு

அப்பிடின்னு சொல்லி கன்னத்தப் புடிச்சி கிள்ளுவாங்கன்னு அம்மா அடிக்கடி சொல்லுரத செவ்வந்தி

கொஞ்சம் விவரம் தெரிஞ்ச வயசுல கூட கேட்டிருக்கரதனால செவ்வந்திக்கு தான் அழகுன்ற

நெனப்பு ஆழமா பதிஞ்சு போக அதுக்கு ஏத்தாப்புல அவ வளர வளர அழகும் கூடிகிட்டே போக அதுவே அவளுக்கு கர்வத்த ஏற்படுத்தியது.

தான் அழகுன்ற கர்வம் அவ தலைக்கு ஏறிக்கொண்டதால் படிப்பு அவள் தலைக்குள் புக மறுத்தது.

பத்தாவதுக்கு மேல் அவளால் தாண்ட முடியவில்லை.அதற்குள்ளேயே அவளின் தோழிகள் அவளின் அழகை ஆஹா..ஓஹோ எனப் புகழ்ந்து அவளை ஒரு வழி பண்ணி வைத்திருந்தார்கள்.

செவ்வந்தி நீ மட்டும் சினிமாவுல நடிக்கப் போன அவ்வளவுதான் ஒரு நடிகையும் ஒம் முன்னாடி

நிக்க முடியாது..ஒவ்வொரு நடிகரும் ஒன்னோட ஜோடியா நடிக்கணும்ன்னு ஆசப் படுவாங்க..

அப்பறம் அவ்வளவுதான் காசு பணம் காரு பங்களான்னு எங்கியோ போய்டுவ...அதுக்கப்பறம்

எங்கலெல்லாம் நெனப்பு வருமா..?தோழிகளின் ஒவ்வொரு வார்த்தையும் செவ்வந்தியின்

மனதில் பச்சென்று ஒட்டிக்கொண்டது.பணம் பங்களா கார் புகழ் வசதியான வாழ்க்கை இவற்றிர்க்கே

அவள் மனம் ஆசைப்பட ஆரம்பித்தது.

செவ்வந்தியின் பாட்டி செவ்வந்திக்கு மாப்பளய பாருடா என தன் மகனை துளைக்க ஆரம்பிக்க

மாணிக்கம் செவ்வந்தியின் கழுத்தில் தாலிகட்ட கணவனோடு குடித்தனம் நடத்த ஆரம்பித்தாள்

செவ்வந்தி.

மாணிக்கம்..பெயரைப் போலவே ஒரு மாணிக்கம் தான்.பார்க்கவும் அப்படி ஒன்றும் பங்கரை இல்லை..ஆணுக்கு முக அழகும் முறுக்கான உடலுமா தேவை..கடின உழைப்பும் கட்டிய மனைவியை நேசிக்கும் குணமும்,குடும்ப்த்தை காக்கும் எண்ணமும்..பண்பான நடவடிக்கைகளும்

போதாதா என்ன?..மாணிக்கம் அப்படித்தான் இருந்தான்.

மாணிக்கத்துக்குப் பஞ்சாலை ஒன்றில் வேலை.பெரிய சம்பளம் ஒன்றும் கிடையாது.கிடைக்கும்

சம்பளத்தை அப்படியே கொண்டுவந்து செவ்வந்தியிடம் கொடுத்து விடுவான்.குடிப்பழக்கம்

இல்லாததால் அவனுக்கென்று தனியான செலவு ஏதும் இல்லை.

ஒரு சராசரி பெண்ணென்றால் அவளுக்கு இநத வாழ்க்கை சொர்க்கமாக இருக்கும்.அனால்

செவ்வந்திக்கு இந்த சாதாரண பெருமளவு வசதி இல்லா வாழ்க்கை கொஞ்சமும் பிடிக்கவில்லை.

முதல் குறையே அவளுக்கு தன் கணவன் தன் அழகுக்கு ஈடானவன் இல்லை என்பது.அடுத்து

குறைந்த சம்பளமே வாங்கும் கணவனால் தனக்கு வசதியான வாழ்க்கையைத் தர முடியாது என்பது.

எனவே அவள் அவனை கொஞ்சமும் மதிப்பதில்லை.எடுத்தெரிந்து பேசுவதும் அவன் ஏழ்மையைச்

சுட்டிக் காண்பிப்பதுமாய் வாழ்க்கையை நரகமாக்கிக் கொண்டாள்.இவள் அவனை வெறுத்தாலும்

மாணிக்கம் செவ்வந்தியை நேசிக்கவே செய்தான்.ஒரு குழந்தை பிறந்தாலாவது நிலமை கொஞ்சம்

சீராகும்.அதற்கே இடம் கொடுக்கவில்லை என்றால்..?

வீட்டு வாசலில் உட்கார்ந்து கொண்டு போவோர் வருவோரை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்

செவ்வந்தி.நாலு வீடு தள்ளியிருக்கும் மகி.. அக்கா..செவ்வந்தி அக்கா..ஒங்களுக்கு ஒண்ணு

தெரியுமா..?கேட்டபடியே வந்த மகிக்கு பன்னெண்டு வ்யதிருக்கலாம்.

என்ன மகி.. என்ன..எனெக்கொணும் தெரியாதே..

செவ்வந்தி அக்கா....நம்ம ஊருல சினிமா ஷூட்டிங்கு நடக்கப் போவுதாம்...யாரெல்லாம் வந்திருக்

காங்களாம் தெரியுமா..நடிகை புனிதஸ்ரீ..அப்பறம் நடிகரு .....சிரிப்பு நடிகரு.........எல்லாரும்

வந்திருக்காங்களாம்..எங்க தெரியுமா ஷூட்டிங்கு...பந்தடி மைதானத்துல..நாங்கல்லாம் பாக்க

போப்போறோம் நீங்களும் வரீங்களாக்கா..மூச்சு விடாமல் சொல்லித் தீர்த்தாள் மகி..

வாயைத் திறந்தபடி கண்களை விரித்தபடி ஆ வென்று கேட்டுக்கொண்டிருந்தாள் செவ்வந்தி.

நெசமாவா சொல்லுர மகி...

ஆமாங்க்கா...மெய்யாலுந்தான்...

எப்ப போப்புற...னானும் வரேன்..

பொறுக்கா...தனம் மீனாச்சி அக்கி எல்லாரும் கெளம்புராங்க..அவ்ங்களும் வரட்டும் ஒண்ணா போவலாம்....

கடும் வெய்யில்...வண்ணக்குடையின் கீழ் ஓய்வாகவும் சோர்வாகவும் அமர்ந்திருந்தாள் புனிதஸ்ரீ.

வெய்யிலையும் பொருட்படுத்தாது புனிதஸ்ரீயைப் பார்ப்பதற்காக அவளைச் சுற்றி நின்று கொண்டி

ருந்தார்கள் அந்த கிராமத்து ஜனங்கள்.ஆண்களும் பெண்களுமாய் கலந்து கட்டியாய் நின்று

கொண்டிருந்த அவர்களின் வாய்க்குள் ஈ புகுந்தால் கூட தெரியாது.பார்வையை அப்படி இப்படி

நகர்த்தக் கூட இல்லை.அடேங்கப்பா..என்ன ஒரு பளபளப்பு..என்ன ஒரு மினுமினுப்பு..ஒடம்பா அது

அதென்ன காலு சும்ம வழவழன்னு..ஆண்கெளுக்கெல்லாம் அவரவர் மனைவியின் ஒட்டி உலர்ந்த

உடம்பும் பித்தவெடிப்புக் கால்களும் மனதில் வந்து போக..வாய்க்குள் எச்சிலே இல்லாமல்..கஷ்ட்டப்

பட்டு எச்சிலைக்கூட்டி..மனைவியின் நினைப்பை தூ என்று துப்பி மறக்க நினைத்தார்கள்.

பெண்களைக் கேட்கவே வேண்டாம்...புனிதஸ்ரீயைப் பார்ப்பதும் குனிந்து தங்கள் உடம்பைப் பார்த்துக்

கொள்வதும்..பொங்கிப் பொங்கி பெருமூச்சு விடுவதுமாக இருந்தார்கள்.தங்களுக்குள் குசுகுசுவென

பேசிக்கொண்டார்கள்.யேய்..டீ..இவளே..என்னாடி இது.. இவங்க இப்பிடி இருக்காங்க...இதென்ன ஒடம்பா..லப்பரா..மெழுகு பொம்ம மாரில்ல இருக்காங்க..அம்மாடியோ..அவங்க ஒதடும் ..இடுப்பும்..

அடி போங்கடி..பணம்டி..பணம்..அது இருந்துச்சுண்ணா நீ கூட இப்பிடிதாண்டி அழக்க்காயிருப்ப..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.