(Reading time: 17 - 33 minutes)

மாம்.. காது கேக்காது போல..சத்தமா கூப்டதும் திரும்பிப் பாக்கறார் பாரு..தனக்குள் பரசு நினைத்து முடிப்பதற்குள்..

நா என்ன செவிடா?எதுக்கு இப்பிடி சத்தம் போடறேள்..வள்ளென்று விழுந்தவர் மண்ணில் ஏதும்

எறும்பு இருந்து காலைக் கடித்ததோ என்னவோ சடாரெனத் தாவி குறட்டின்மீது அதாவது ஆளோடியின் மீது ஏறி நின்று கால் மணலைத் தட்டினார்.

இல்ல..சாரி..நா..எதுத்த வீட்டுல இருக்காறே மிஸ்டர் செந்தில்குமார் அவர பாக்க வந்தேன்..வீடு பூட்டிருக்கு..அவர் ஒங்ககிட்ட ஏதாவது சொல்லிட்டுப் போனாரா..எங்கயாவது போரதா?

ஆமா..ஊர்ல இருக்கிரவங்கள்ளாம் எங்க போரோம் எப்பவருவோம்னு எங்கிட்ட சொல்லிட்டுதான்

போராங்க..நா வெட்டியா ஒக்காந்த்திருக்கேன் பாரு..வந்துட்டார் கேக்க..படபடவெனப் பொரிந்து

விட்டு படாரெனக் கதவைத் தாளிட்டுக்கொண்டு உள்ளே போனார் அவர்.

அட ராமா அட நாராயணா..எதுக்கு இப்பிடி கோவப்படரார்..தெரிஞ்சா சொல்ரது தெரியாட்ட தெரியாதுன்னு எனமா சொல்லக்கூடாது..நல்ல மனுஷர்...

இது சரியா வராது இனிமே வீட்டுக்குத் திரும்பிட வேண்டியதுதான்னு நினைத்தபடி  வந்த வழியே நடக்கலானார் பரசு.

தாகம் தொண்டையை அடைத்தது...கடும் வெயில் உடெம்பெல்லாம் பற்றி எரிவது போல் இருந்தது.

கொண்டு வந்திருந்த பையிலிருந்து தண்ணீர் பாட்டிலை எடுக்கும்போதுதான் கவனித்தார் இரண்டு பாட்டில் தண்ணீர் இருந்ததை..மனைவி மஞ்சு எவ்வளவு முன்யோசைனையோடு வைத்திருக்

கிறாள் ஒன்றுக்கு ரெண்டாய்..மனைவியை மனம் சிலாகித்தது.பாட்டிலைத் திறந்து கொஞ்சம் குடித்துவிட்டு வலது கையில் ஊற்றி முகத்தில் அடித்துக்கொண்டார் நீரை.கழுத்து கைகள் என கொஞ்சம் தண்ணீர் அடிக்க இதமாய் இருந்தது.சூடேரியிருந்த மண்சாலையில் கால் வைத்து

நடக்கவே முடியவில்லை.

மெள்ள மெள்ள பாதி தூரம் வந்தாயிற்று.தாங்க முடியாத வெக்கை...நிழல் கிடைத்தால் நிற்கலாம் போல் இருந்தது.ஒரு வீட்டின் முகப்பால் கிடைத்த நிழலில் இரெண்டு மூன்று ஆடுகள் படுத்துக்

கிடந்தன.அவற்றோடு போய் நின்று கொண்டார் பரசு.கொஞ்சம் ஆசுவாசமாய் இருந்தது.

அப்போது அருகில் இருந்த ஒரு கிளைச் சந்திலிருந்து வயதான இரண்டு பெண்கள்(கிழவிகள்)

மடிசார் புடவை சகிதம்..உஸ்..அப்பாடி என்ன வெயில் என்ன வெயில்..என்றபடி பரசு நின்றிருந்த

நிழலில் வந்து நின்றார்கள்.படுத்திருந்த ஆடுகள் எழுந்து ஓடிவிட்டன பாவம்.

மாமிகளிள் ஒருவர் பையில் எதையோ பரபரவென்று தேட..என்னடி பார்வதி தேடர..இன்னொரு மாமி..

அலமேலு..தாகம் தொண்டய அடைக்கருதுடி..பையில தேர்த்த பாட்டில காணும்..எடுத்து வெச்சேனே

..பையில எடுத்து வச்சுக்க மறந்துட்டேன் போலருக்கு..நீ கொண்டுவந்துருக்கியோ?

நன்னாருக்கே நா மறப்பேனா..எனக்கு அடிக்கடி தூத்தம் குடிக்கணும்டியம்மா..பையில் கைவிட்ட

அலமேலு மாமியின் முகம் அசடு வழிந்தது.

என்னடி ஆச்சு..அலமேலு..நீயும் கொண்டு வரலியா..

என்னவோ போ..வயசானதுக்கும் அதுக்கும் மறதி ரொம்ப ஜாஸ்தியாயிடுச்சு..மாட்டுப் பொண்ணாவது கொஞ்சம் நெனவு படுத்திருக்கலாம்...அவளா கெழம் நன்னா திண்டாடட்டும்ன்னு

வேணும்னே சும்மா இருந்திருப்பா..

இப்ப என்னடி செய்யறது மறுபடியும் ஆத்துக்குப்போயி தேர்த்தம் கொண்டுவரலாம்னா கொளுத்தற

வெய்யல்ல எப்பிடி பேட்டுவரது ஆத்துவரைக்கும்..?தூத்தம் குடிக்கணும்ன்னு நெனெச்சுட்டா

குடிச்சே ஆகனுமில்லியா..

ஆமாண்டி பார்வதி...எனெக்கும் அப்பிடித்தான்..

வயதான மாமிகள் இருவரையும் பார்க்க பாவமாய் இருந்தது பரசுவுக்கு.த்ன்னிடம் இருக்கும் இன்னொரு பாட்டில் தண்ணியைத் தரலாமா என்று யோசிக்கிம்போதே அந்த வீட்டின் கதவைத்

திறந்து கொண்டு வெளியே வந்தாள்  நாற்பது வயது மதிக்கத்தக்க ஒரு பெண்.கையில் விளக்குமாறு.

மாமீ..ஒங்க பேச்சு உள்ளாற வர கேட்டுச்சு.....நா வேண்ணா குடிக்க தண்ணி தரவா..?

மாமிகள் இருவரும் அப்பெண்னை ஏறஇறங்க பார்த்தனர்.

முகம் மாறிப்போயிற்று இருவருக்கும்..ரொம்ப சந்தோஷம்..நீ கேட்டதே போருண்டியம்மா..தேர்த்

தம் குடிச்சாப்ல இருக்கு..அலமேலு மாமி சொல்ல பார்வதி மாமியும் அதை ஆமோதித்தார்..

அப்பெண்ணுக்கு புரிந்து போயிற்றோ என்னவோ..மேற்கொண்டு ஏதும் கேட்காமல் உள்ளே சென்று

விட்டாள்.

அலமேலு மாமி முகவாய்க்கட்டயைத் தோளில் இடித்துக்கொண்டார்...நன்னாருக்கு..நன்னாருக்கு..

ஏகாதசியும் அதுவுமா காலேலேந்து பச்ச தண்ணி பல்லுல படல வெரதம்..இவட்ட தேர்த்தம் வாங்கி

குடிக்க மாட்டேனோ...

அதான்..அதான்..ஒத்து ஊதினார் பார்வதி மாமி.

கேட்டுக்கொண்டிருந்த பரசுவுக்கு இருவர் மீதும் எரிச்சலாய் வந்தது.அனாலும் தண்ணீருக்காகத்

தவிக்கும் அந்த வயதான இருவரையும் பார்க்க பாவமாய்யிருக்கவே..

மாமீ..நா..வேண்னா தேர்த்தம் தரவா..எடுக்காம ஒரு பாட்டில் வெச்சுர்க்கேன்.நானும் ஒங்களவாதான்

எம் பேரு பரசு பரசுராமன் பரசுராம சர்மா...என்று தன்னை அறிமுகப்படுத்திய படியே பையிலிருந்து

பாட்டிலை எடுத்தார் பரசு.

பார்வதி மாமியின் முகம் பிரகாசமாயிற்று...பாட்டிலை வாங்க கையை நீட்ட.. லபக்கென்று

பார்வதி மாமியின் கையைப் பிடித்து கீழே இறக்கினார் அலமேலு மாமி..அதோடு நிற்காமல்

தர தரவென்று இழுத்துக்கொண்டு நடக்க ஆரம்பித்தார்..

என்னடி அலமேலு..ஏண்டி இப்பிடி இழுத்துண்டு போற...

ஏண்டி ..ஒனக்கு ஊர் ஒலகம் தெரியாது..எவனாவது தேர்த்தம் தரேன்னா ஒடனே வாங்கி குடிக்கரதா

டிவி பாக்கறியோ இல்லியோ...இப்பிடித்தான் ஒத்தி நகையும் நட்டுமா போட்டுண்டு கோவில்ல

ப்ரகாரம் சுத்தினாளாம்..நல்ல வெய்யில் நேரமாம்..அவ பினாடியே ஒத்தன் வந்துண்டே இருந்தானாம்..அவுனுக்கு அவ நகமேல கண்ணு..நைஸா அவளண்ட போயி ரொம்ப வெய்யிலா

இருக்கே..தண்ணி குடிக்கிறீங்களான்னு கேட்டானாம்..அந்த அசடும் சரீன்னுட்டு வாங்கி குடிக்க

மயக்கம் வந்து அப்பிடியே மயங்கி விழுந்துட்டாளாம்.

ஐயையோ..அப்பறம்..

நா என்ன கதையா சொல்ரேன்...பொட்டுத் தங்கம் வெக்காம எல்லாத்தியும் உருவிண்டு போய்ட்டானாம்..அந்த பாவி..இந்த பிருகிரிதி எப்பிடியோ யார் கண்டது?தேர்த்தம் வேணுமான்னு கேட்டதுமே பரக்காவெட்டியாட்டம் பரக்கற...

எம்மாட்டுப்பொண்ணு எங்கடி டிவி ல சேதி போடரா..எப்பவும் சீரியல்தா..இவம் பொண்டாட்டி அவள வெச்சுக்கரதும் அவம் பொண்டாட்டி இவன வச்சுக்கரதும்,காபில வெஷம் கலக்கரதும்..மாட்டுப்பொண்ணு மாமியார படுத்தரதும் மாமியார் மாட்டுப்பொண்ண படுத்தரதும்

செவ்வா வெள்ளின்னு இல்லாம வெளக்கேத்த்ர நேரத்துல ஆளாளுக்கு ஒப்பாரி வெச்சு அழரதும்..

இருவரும் கணீர்க்குரலில் பேசிக்கொண்டே நடக்க ஒன்று விடாமல் ஸ்பெஷ்டமாக பரசுவின்

காதில் விழ மேலும் நொந்து போனார் அவர்.

இனி வீட்டுக்குப் போகும்வரை யாரிடமும் எதுவும் கேட்பதில்லை பேசுவதில்லை என்ற தீர்மானத்தோடு ஒரு வழியாய் பஸ் ஸ்டாப்புக்கு வந்து சேர்ந்தார் பரசு.

பத்துமாத கர்ப்பிணிபோல் ..நிறைந்து வழியும் கூட்டத்தோடு வந்து நின்றது பேருந்து.எப்படியோ

ஏறி நின்றுகொண்டார் பரசு.

பேருந்து மூன்றாவது ஸ்ட்டாப்பிங்க்கில் நின்றபோது பெரும் அட்டகாசமும் ஆரவாரமும் செய்து

கொண்டு ஏறினான் அந்த குடிமகன்.ஏய் எறங்கு..எறங்கு என்று கண்டக்டர் தடுத்தும் கேட்கவில்லை.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.