(Reading time: 10 - 19 minutes)

மயக்கத்தில் நான் - ஷிவானி

நான், ஷிவானி, (சந்திரன் போன்ற வதனம், பார்ப்பவரை ஒரே பார்வையில் மயக்கும் கண்கள், தங்கம் போல் ஜொளிக்கும் நிறம், அவளின் கருங்கூந்தல் கார்மேகத்தை இழுத்து போட்றியதை போல் தோற்றம் அளிக்கும். மொத்தத்தில் எழிலிற்க்கு எடுத்துக்காட்டாக இருக்கும் ஒரு பெண்…..) தோழியின் திருமணத்திற்க்காக வீட்டிலிருந்து 10 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் Srinivasa Kalyana மண்டபத்திற்க்கு சென்றிருந்தேன். என் தோழிகளில் பலரும் வந்திருந்தனர். நான் என் தாயோடு செல்லும் முடிவில்தான் இருந்தேன், ஆனால் surprise எனும் பெயரில் திடிரென்று Londonனில் வேலை செய்யும் என் தமக்கை வீட்டிற்க்கு வருகைதந்தாள். அதை காரணம் காட்டி நான் தனித்து வந்தேன் திருமணத்திற்க்கு.

ஆனால் தனிமை தெரியாத அளவில் என் தோழிகளும், (ரஷ்மி, வித்ய ஸ்ரீ, பூஜா லக்ஷ்மி, அச்சு, சுனிதா) அவர்களுடைய பேச்சும், சிரிப்பும் இருந்தது. நானும் ஒன்றும் ஊமையல்ல, எல்லோரும் “வாய் வலிக்காதா உனக்கு?” என்று கேட்கும் அளவிற்க்கு பேச்சு திறமை கொண்டவள்தான். மாலை 7 மணி அளவில் பேச்சை துவங்கிய நாங்கள் இரவு 10 மணி ஆனதுகூட தெரியாமல் பேசி கொண்டே இருந்தோம். அதுவரை நன்றாகத்தான் போனது பேச்சுகள்.

எல்லோருடைய உடை, நடைகளை பார்த்து மட்டும் கேலி செய்து கொண்டிருந்த நாங்கள் வித்யஸ்ரீயின் கல்யாண ஆர்வத்தை தூண்டும் வகையில் மண்டபத்தில் இருந்த கட்டிளம் காளைகளைக் காட்டி, “என்னடி இவன் OKவா?” என்று சொல்லிச் சிரித்து கொண்டிருந்தோம். அவளோ யாரைக் காட்டினாலும் “OK பா……. எனக்கு எந்த எதிர்ப்பார்பும் இல்லை. அப்பா, அம்மா இவன் தான் என்று யாரைக் காட்டினாலும் சரிதான்” என்று சொல்லி வெட்கம் தெரிக்கும் முகத்தோடு தலை குனிந்துச் சிரித்தாள்.

Mayakkathil naan

வித்யஸ்ரீயை கேலி செய்யும் வகையில் பேச்சை துவங்கிய நாங்கள் எல்லோரும் அதிர்ச்சியில் உறைந்தோம் அவளின் பதில் கேட்டு. “21st centuryயில் இப்படி ஒரு அடக்கமான பெண்ணா?” என்று கேட்டு சிரித்த ரஷ்மியுடன் சேர்ந்து எல்லோரும் உறக்க சிரித்தோம். அவளின் பேச்சை தொடர்ந்து எல்லோருமே அவர்களின் மண வாழ்வின் எதிர்பார்ப்பை சொல்ல துவங்கினார்கள்.

எனக்கும் வாய்ப்பு வந்தது. எல்லோரின் எதிர்பார்ப்பையும் கேலிசெய்த எனக்கும், மாற்றுக்கருத்தோடு சிரிப்பொலி எழுமென்று தெரிந்து மௌனம் காத்து அமைதியாக இருந்தேன். “என்னடிமா ஷிவானி உனக்கு டூப் போட டெல்லியிலிருந்து ஆள் வந்தாதான் வாய் திறப்ப போலிருக்கே, இந்த கல்யாண விஷயத்தில” என்றுச் சொல்லி என்னை சீண்டிப்பார்த்தாள்.

சிறிது கோபம் வந்தாலும் சிரித்துக் கொண்டே “அப்படியொன்றுமில்லை என்றுச் சொல்லிக்கொண்டே, எனக்கு கணவனாக வருபவன் என்னை முதலில் சந்திக்க வேண்டும். பிறகு என் வீட்டிற்க்குச்சென்று என்னை பெண்க்கேட்டு மணக்க வேண்டும். அதுமட்டுமல்லாது அவனைப் பார்த்த முதல் பார்வையிலியே நான் அவன் வசம் விழவேண்டும்” என்றேன்.

என் பேச்சு முடியுமா என்றுக் காத்திருந்த அச்சு, “பாத்துடி உன் அழகில் அவன் வழுக்கி விழுந்து கையையோ, காலையோ முறுச்சிக்கப் போறான்” என்றாள். இப்படி பேச்சுகள் சென்றுக்கொண்டிருந்த நேரத்தில், “சாப்பிடாமல் இன்னும் என்னம்மா உங்களுக்குப் பேச்சு” என்று சொல்லி தோழியின் தாய் எங்களை பந்திக்கு விரட்டினார்கள்.

உணவின் ருசி OK…OK… என்பதை போல்தான் இருந்தது. வயிறு நிறம்பிய களைப்பில் அனைவரும் ஒரே அறையில் படுத்து உறங்கினோம். காலை விடிந்தது. அனைவரும் அவரவருடைய காஞ்சிப்பட்டை முன்பே பேசி இருந்ததை போல், கட்டி போட்டோக்களை எடுத்து குவித்துக் கொண்டே இருந்தோம்.

முகூர்த்த நேரமும் வந்தது. தாலி கட்டும் சுப நிகழ்வும் அதை தொடர்ந்து காலை, மதிய உணவு வேலையும் சிரிப்பொலியோடு சுபமாய் முடிந்தது. மனதின் ஓரத்தில் பிரிவின் கவலை எழுந்தாலும், நேற்று மாலை முதல் இன்று மாலை வரை சிரிப்பதை மட்டுமே வேலையாக கொண்டிருந்த எங்களின் வாய்கள் சிரித்துக் கொண்டே byeடி என்றுச் சொல்லிக்கொண்டது.

எல்லோரும் சென்றனர். நான் மட்டும் கடைசியாக செல்லும் எண்ணத்தில் அனைவரையும் வழி அனுப்பினேன். நேரமோ அப்பொழுதே மாலை 4.30 ஆகியிருந்தது. நானும் மண்டபத்தை பிரிந்து வந்து வீட்டீன் Address சொல்லி ஆட்டோக்களை கேட்க துவங்கினேன். வழக்கம்போல் எல்லோருமே இல்லை என்பதாக தலை அசக்கிச் சென்றனர். அத்தருனம்ப் பார்த்து போன் செய்த என் தாய், “என்னடி, கல்யாண பெண்ணின் மகளுக்கோ அல்லது மகனுக்கோ கல்யாணம் முடிக்காது வீடுதிரும்ப மாட்ட போல் இருக்கே” என்று கன்டிப்பான குறலுடன் சொல்லி “வந்திருக்கும் உற்வினர்கள், உன்னை எங்கே எங்கே என்று கேட்கும் கேள்விக்கு பதில் சொல்லி உயிர் போகுது ஒழுங்கா சீக்கீர்ம் வீடு வந்து சேறு” என்று திட்டி அழைப்பை துண்டித்தார்.

“வீட்டிற்க்கு வேகமாக வான்னு மட்டும்தா சொல்லத்தெரியு. ஆனா இவுங்களுக்கு ஆட்டோகாருங்க வறமாட்டனு சொல்றது எப்படி தெரியும்?” என்று தனியாக புல்ம்பி கொண்டே இன்று நடந்தே வீடு செல்வோமென்ற முடிவில் வேகமாய் நடக்க துவங்கினேன். பல வீதிகளை கடந்தேன். கற்றின் வேகம் அதிகரிக்க துவங்கியது. அது மழைவரும் சூழலின் அறிகுறியாக இருந்தது.

லேசாக வானம் இருளத்துவங்கியது. எதையும் கண்டு அஞ்சாமல் என் நடையை தொடர்ந்தேன். திடிரென்று மனதில் எதோ ஒரு சலனம். யாரோ என்னை சிறிது நேரமாகவே பின்தொடர்ந்து வருவதை போலோரு உணர்வு. “சரி திரும்பிப்பார்த்தால் தெரிந்துவிட போகிறதென்று” எனக்கு நானே சொல்லிக்கோண்டே திரும்பினேன். என்னை தவிற யாருமே இல்லை அந்த வீதியில் என்பதை அப்போது உண்ர்ந்தேன்.

அங்கிருந்த மரங்களின் அசைவும் அவற்றிலிருந்த மலர்களின் வாசத்தை சுமந்து வந்து என்னை தாக்கிய தென்றலையும் கண்டு இறைவனின் படைப்பை புகழ வார்த்தைகளில்லையென்று மனதில் எண்ணிக்கொண்டே முகத்தில் சிரிப்போடு முன்தொடர்ந்து நடந்தேன். என் எண்ணத்தை அறிந்த இறைவனுக்கு என்மீது ஏதோ கோபம் போல் இருக்கிருந்தது. “வார்த்தைக்ளில்லை” என்று சொன்னேனே அதுவோ என்னவோ சட்டென்றுக் காற்றை வேகமாய் என் மீது பாய செய்தான், அதில் சிறிது தூசிகளையும் சேர்த்து தூவிவிட்டான் “பாவி………” அவை என் கண்களில் விழுந்து உருத்த செய்தது.

நடையை நிறுத்தாது சுதாரித்து கொண்டு சென்ற என்னை மேலும் தாக்க எண்ணிய இறைவன் அங்கிருந்த ஒரு கல் தாக்கி நான் கீழே விழுமாறு திட்டம் தீட்டி என்னை தள்ளிவிட்டான். “ராமா!………” என்றுச் சொல்லிகொண்டே நானும் பின் நிலம் நோக்கி சாயத்துவங்கினேன். அங்கு எனக்கு ஒரு இன்ப அதிர்ச்சியைக் கொடுத்தான் அந்த இறைவன், நிலத்தில் விழாதவாறு என்னை ஒருக்கை தாங்கிப்பிடித்த்து. அது ஒரு வாலிபனின் கை. (ஆறடி உயரம், அழகிய முகம், கட்டுடல்மேனி, எனவிருந்த அவன், சூரிய குலத்து அடுத்த தோன்றலாகத் தோன்றினான்) என்னை யாரோ பின் தொடர்வதாக நான் எண்ணியது நிஜம் என்று அப்போது புரிந்தது. அவனை பார்த்த்தும் என் மனதில் ஏதோ இனம் புரியாத சந்தோஷம் எழுந்தது.

என்னை தாங்கியிருந்த அவனின் கைகளை பொன்னூஞ்சல் போல் எண்ணி எழாமலிருந்தேன். அவனும் என்னை எழ செய்யும் முயற்ச்சியில் இறங்காமல் என்னை தாங்கியவாரே, அவன் கண்களால், என் கண்களில் ஏதோ வசியம் செய்யும் முயற்ச்சியில் ஈடுபட்டிருந்தான். அவன் பார்வையிலிருந்த ஈர்ப்பில் நானும் மயங்கி அவன் வசம் விழுந்தேன். அத்தருணம் என் தோழிகல்ளோடு நான் பேசியது நினைவிற்க்கு வந்தது, ஆதலால் சட்டென்று அவனின் கைகளிலிருந்து விலகி நின்றேன். “தவரிழைத்தேனோ” என்று என்னி என்னுள் அவன் மீது ஒரு ஏக்கம் எழுந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.