(Reading time: 7 - 14 minutes)

இருவர் - மனோ ரமேஷ்

"கதைக்கு முன்னாடி ரெண்டு வேர்ட்ஸ(ரெண்டு பேர) உங்களுக்கு அறிமுக படுத்தணும். நெறைய பேருக்கு தெரியும் இருந்தாலும், சொல்லலாம்னு தோணிச்சு.

நியோ கார்டெக்ஸ் - லாஜிக்கா  விஷயங்கள ஆராய்ச்சி பண்ணி டிசைட் பன்ற மூளையோட பகுதி ,

அமிக்டலா - உணர்ச்சி பூர்வமா விஷயங்கள பார்க்கற  மூளையோட பகுதி"

நான் : இந்த முறை ……

ஹலோ என்ன எப்போவும் நீயே கதை சொல்ற இந்த தடவை நாங்களும் சொல்லுவோம் (நான் மேல சொன்ன ரெண்டு பேர்தான்)

நான் : என்னது ?!

Brainநியோ & அமி : ஆமா கண்டிப்பா.

நான் : சரி, இனி நடக்கறதுக்கு நான் பொறுப்பு இல்ல.

நாம் வலிந்து உதிர்க்கும் புன்னகை

போலியானது  என கண்டுபிடிக்க முடியாத

சம்பரதாய உறவுகளுக்கு

மத்தியில் வாழும் போது தான்

உணர்வு பூர்வமான உறவுகளின்

அருமை புரியும்.”

நியோ :  சூப்பர். என்றென்றும் புன்னகைக்கு படிச்ச ரிவ்யு தானே இது.

அமி : ஆனா, படிக்கும் போதே நெறைய பேர நியாபகப்படுத்தன வரிகள்.

நான் : அப்போ நியாபகம் வந்த, என்னோட ரத்த பந்தம் இல்லாத, உணர்வு பூர்வமான உறவுகளை பத்தியதான் இந்த பதிவு.

நான் : குளிர் காலத்துல இன்ஹெளர் யூஸ் பன்ற பழக்கம் எனக்கு இருக்கு, அதுக்குனு நவம்பர் ஆரம்பிக்கும் போது இன்ஹெளர் வாங்கித்தர ப்ரென்ட் இருக்கா எனக்கு. லாஸ்ட் 8 வருசமா குளிர் காலம் ஆரம்பிக்கறது, அவ இன்ஹெளர் வாங்கிட்டு வந்து தரப்போதான் தெரியும்.

என் வாழ்க்கைல, என் குடும்பத்துக்கு அடுத்து என்னை அதிகமா சகிச்சுகிட்டு இருக்க ஒரு ஜீவன் இவ தான்.

நியோ:  எனக்கு தெரிஞ்சிடுச்சு.

அமி : உனக்கே தெரியும் போது, அவள உனக்கு அறிமுக படுத்தன எனக்கு தெரியாதா எனக்கும் தெரிஞ்சிடுச்சு.

நான் : என் அப்பா, அம்மா, தங்கைக்கு அடுத்து நான் எந்த வெளிபூச்சும் இல்லாம தோணறத பேசறது இவ கிட்ட மட்டும் தான்.

அமி: ஆமா,நான் சொல்லவரத சரியா புரிஞ்சுகுவாளோ இல்லையோனு யோசிக்காம தைரியமா பேசறதும் இவகிட்ட தான். என்ன விட என்னை அவளுக்கு நல்லா தெரியுமே அதனால.

நியோ: நான் பேசற விஷயத்த கூட நீ பேசின மாதிரி கேட்பா பார்க்கணுமே

நான் : 10த் லீவ்ல காலைல போன் பண்ணி எழுப்பிவிட்டப்ப எல்லாம் எனக்கு தெரியாது இவ எனக்கு இவளோ முக்கியமான தோழியா வாழ்க்கையோட தவிர்க்க முடியாத, தவிர்க்க கூடாத நபரா ஆகிடுவானு.

அமி: இன்ஜினியரிங் கவுன்சிலிங் முடிஞ்சு வெளிய வந்ததும் எனக்கு வந்த முதல் போன் இவளோடதுதான்.

நியோ: பயோடெக் சீட் கிடைக்கலனு சும்மா பொய் சொன்னேன். அப்படியே ஒரு நிசப்தம் அந்த பக்கம், என்ன விட அதிகமா என்னை பத்தி மட்டுமில்ல, என் கனவுகளும் அவளுக்கு தெரியும்னு எனக்கு தெரிஞ்சது அந்த தருணத்துலதான்.

அமி: என் அப்பா அளவுக்கு இவகூட பேசி இருக்கேன் என் அம்மா அளவுக்கு இவகிட்ட கோபப்பட்டு இருக்கேன் என் தங்கை அளவுக்கு சண்டை போட்டு இருக்கேன்

நியோ: You can get a soul mate even in friendship-எனக்கு புரிய வெச்ச ஜீவன்.

நான் : இந்த பாச சூறாவளிக்கு அடுத்து என்ன நனைய வைக்கற இன்னொரு மாலை மழை என்னோட அடுத்த உறவு +2 லீவ் ல அதிக க்ளோஸ் ஆன. ஆள்

நியோ: ரொம்ப பார்மலா ஆரம்பிச்ச பிரென்ட்ஷிப் தான். திடிர்னு அவளுக்கு நான் எவ்வளோ முக்கியமான ஒருத்தரா இருக்கேனு புரிஞ்சப்போ அதிகமாச்சு.

அமி: ஒரு வேலை என் குடும்பமே அவளுக்கு பிடிச்சதும் ஒரு காரணமா இருக்கலாம்.

நியோ: இப்போவும் நாம ரொம்ப கடியான attitude ஓட இருக்கறமோனு எனக்கு தோனறப்போ எல்லாம் அப்படி இல்லனு என்ன சமாதான படுத்தற,

அமி: கெடுத்து வைக்கற friend. ஆனா, ஒருத்தர் உங்கள எவ்வளோ நெருக்கமா நெனக்கறாங்கனு அவங்க உங்க தோள் சாஞ்சு அழறப்போ தெரிஞ்சுக்கலாம்னு, எப்போவோ படிச்சேன். அப்படி அழுத சிலர்ல, இப்போவும் என் கூட இருக்க ஆள் இவ மட்டும்தான்.

நான்: இன்னொரு ஜன்னலோர சாரல் இருக்கு

நியோ: எப்படி பார்த்தாலும் நீ வேற மாதிரி தான் மனோ இருக்க, I am not Special but limited edition இந்த tag எனக்கு செட் ஆக முக்கியமான ஆள்.

அமி: என்னோட இண்டர்வியு ரிசல்ட்க்கு அப்படி ஒரு சந்தோசம் பட்ட ஒரு ஆள்

என்னோட எமோஷனல் பரிணாமம் தெரிஞ்ச வெகு சிலர்ல ஒருத்தி.

நான்: அடுத்து

நியோ: இதுவும் எதாவது லீவ்ல ஆரம்பிச்ச ப்ரெண்ட்ஷிப்னு  ஆரம்பிக்காத

நான்: இல்ல காலேஜ் பைனல்இயர்.

நியோ: புரிஞ்சது ஒரு பக்கம் ப்ராஜெக்ட் வைவா, இன்னொரு பக்கம் வேலை இண்டர்வியுனு பாதி ஆளா சுத்திகிட்டு இருந்த என்ன உயிர்ப்போட வெச்சு இருந்த என்னோட செல்ல ஜூனியர்ஸ் ஸ்வீட் சிஸ்டர்ஸ்.

அமி: இன்னைக்கு வரை என்னோட டச்ல இருக்கற என் காலேஜ் வாழ்க்கையோட பாகம் இவங்கதான்.

நான்: இந்த கதை ஆரம்பமே நான் நாலு சுவர பார்த்துட்டு ஹாஸ்டல் ல தனியா உக்காந்து இருக்கும் பொது ஸ்டார்ட் ஆனது தான்.

அமி: ஆனா இப்போலாம் அப்படி தனியா இருக்கவேண்டிய தேவையே இல்ல.

நியோ: என் காலேஜ்ல இருந்து தனியா ஹாஸ்டல் வந்து, என்னோட பேசறாங்கன்னு தோணி, என்ன பேச வெச்ச இந்த ஒரு ஜீவன் தான் ஆரம்பத்துல எனக்கு இருந்த ஒரே லிசனர்.

எப்போவும் நல்ல புத்தகம் அடுத்த புத்தகத்துக்கான  கதவை திறந்துவிடும் நல்ல நண்பர்கள் கூட அப்படித்தான்,

நான்: அவங்க கெளம்பும்போது ஒரு அக்காவ எனக்கு லிசனர் ஆக்கிட்டு போனாங்க அதுக்கு பிறகு பல நாள் அவங்க ரூம்ல அரட்டை அடிச்சிட்டு அடுத்த நாள் ஆரம்பிக்கும் போது தூங்க போவேன்.

அமி: சாப்ட வரியான்னு பேச்சுக்கு கேட்டுட்டு திரும்பி பாக்காம போன சிலரால தான் இந்த விமர்சனம் எனக்கு ரொம்ப பிடிச்சது. பட் அதே ஹாஸ்டல சண்டே காலைல வீட் பிரட் ல ஜாம் போட்டு சாப்டாதான் ஆச்சுனு பிடிச்சு வெச்சு சாப்ட வைப்பாங்க

நியோ: அவங்க பரப்பின நிழலும் கிளையும் தான் அதுக்கு பிறகு இது வரை என் ஹாஸ்டல் ப்ரெண்ட்ஸ்.

அமி: ஊருக்கு போயிட்டும் நீ சாப்டு இருக்க மாட்டியேனு கேக்கற ஒருத்தர்.

நான்: இப்போவும் காலைல என் எதாவது ஒரு சொதப்பலுக்கான அட்வைஸ் ல ஆரம்பிச்சு என் லேட்நைட் ரிட்டன திட்டிகிட்டே எதையாவது சாப்பிட சொல்ற மது.

நியோ: இப்போ கூட நான் இதுல அவள பத்தி எழுதி இருக்கேனு சொன்னா நம்ப மாட்டா தமிழ் வேற படிக்க தெரியாது.

அமி: அவ தமிழ கலாய்ச்சிகிட்டு, சண்டை போட, எனக்கு இப்போ ஹாஸ்டல இருக்க ஒரு நண்பி அவ தான்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.